Thursday, 19 November 2020

வசிய மந்திரங்கள் - வசிய வசிய வசி ,

 சகல வசியம் 

🌹🌹🌹🌹🌹🌹🌹

பல்வேறு முறை 

அனைத்து சித்தர்களுக்கும் நன்றி 

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


நமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.


மந்திரம்


ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.


பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும்.

பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்.


முக வசியம் பெற ரகசிய முறை'


வெள்ளெருக்கங்குச்சி ,ஆலவிழுது ,வேலங்குச்சி இவற்றில் ஏதாவதொன்றில் பல்துலக்கி வெந்நீரில் முகம் கழுவிவர நம் முகத்தை அனைவருக்கும்பிடிக்கும்.

🌷🌷🌷

முக வசீகரம் உண்டாக மந்திரம்

இது அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான பதிவு. நம்மை கண்டவர்கள் அனைவரும் எம்முடன் சினேகமாக இருக்கவும் எமது காரிய வெற்றிக்கும் இம் முக வசியமுறை கைகொடுக்கும்.

மந்திரம் : ஓம் வசி வசி ஜெகத் வசி வசிய நம.

கிரியை : ஆதிவாரம் அல்லது அமாவாசை நாளில் காரீயத் தகட்டிலோ செம்புத் தகட்டிலோ அட்சரம் கீறி தூபதீபம், பால், பழம், தேங்காய், அவல், கடலை, தாம்பூலம், பலகாரங்கள் வைத்து மந்திரத்தை 1008 முறை உச்சரித்து குளிசமாடி கட்டவேண்டியது.

பலன் : இந்த குளிசத்தை கட்டிக்கொண்டு சென்றால் ஸ்திரி வசியம், புருச வசியம், ராஜ வசியம், லோக வசியம், வழக்கு வெல்லுதல், வியாபார விருத்தி

🌹🌹🌹🌹🌹

வசீகரிக்க

எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக

வழிமுறை !!!

-----------------------------------------

"வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி

சகலரும் வசி" என 18 முறை கண்ணாடியில்்

உங்க முகத்தை பார்த்தபடி

சொல்லுங்க.அன்றைய நாளில் இன்னும்

கூடுதல் அதிர்ஷ்டமா இருக்குமாம்

*

எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக

வழிமுறை:-

நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த தொழில்

அல்லது வேலை பார்க்கிறீர்களா?

இன்சூரன்ஸ், சினிமா, மியூச்சுவல்

பண்டு,ரியல் எஸ்டேட், சேல்ஸ் ரெப்,மார்க்கெட்

டிங், வக்கீல், ஜோதிடர்,அரசியல்

வாதிகள்,பூசாரிகள்,மனோதத்துவநிப

ுணர்கள்,நடிகர்கள் அல்லது நடிகைகள்,

இயக்குநர்கள் என எந்த பொதுத்தொடர்புத்

துறையில் இருந்தாலும் சரி! எல்லோரையும்

வசீகரிக்க ஒரு ஆன்மீகப்பயிற்சி

இந்தப்பயிற்சியை குறைந்தது 90 நாட்கள்

செய்ய வேண்டும்.தினமும்

காலையிலும்,மாலையிலும் செய்யவேண்டும்.

(எதிர்பாராமல் சில நாட்கள்விடுபட்டாலும்

பரவாயில்லை.தொடரலாம்)

ஓம் ரீங் வசி வசி = இந்த மந்திரத்தை ஒரு

விரிப்பின் மீது நின்று அல்லது

அமர்ந்துகொண்டு மனதுக்குள் 108 முறை

உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.4

திசைகளையும் நோக்கி தலா 108 முறை

ஜபிக்க வேண்டும்.

ஜபிக்க ஆரம்பிக்கும்போது வாயில் ஒரு

கிராம்புத்துண்டை வலதுபக்கத்தில்

ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.கடிக்க

க்கூடாது.ஜெபித்து முடித்ததும் துப்பிவிட

வேண்டும்.

துப்பிய பின்பு ஒரு தம்ளர் இளநீர் உடனே

குடிக்கவேண்டும்.

(சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில்

பலன் தெரியும்.அசைவம் சாப்பிடுபவர்கள்

அசைவத்தை விட்டுவிட வேண்டும்.விடாவி

ட்டால் பலன் தெரிய ரொம்ப நாளாகும்)

91 வது நாளிலிருந்து ரொம்ப பிசியாகிவிடுவீர்கள்.உங்கள் வேலை அல்லது தொழிலில்

நீங்கள்தான் முதல்வராகத் திகழ்வீர்கள்.

இது 90 நாளுக்குமேல் தான்

செயல்படத்துவங்கும்.

ஆதாரம்:வாத சவுமியசாகரம்,மந்திரவாள்பகுதி,அகத்தியர் எழுதியது

கோடான கோடி நன்றிகள்

முக வசியம் உண்டாக மந்திரம் !

------------------------------

நமது முகத்தில் லட்சுமி கடாட்சம்

உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன்

கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய

முறையினை பயன்படுத்தலாம்.

மந்திரம்

-------

ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம்

திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம்

காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி

என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும்

லட்சுமணரும் போலே அம்மா தாயே

லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே

சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர

அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து

பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே

சுவாகா.

பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து

சித்திசெய்து கொள்ளவும்.

பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம்

சொல்லி விபூதி சாத்தவும்.

இராஜ வசிய மந்திரம்

----------------------

வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்ட

பங்காளா, தக்ஷிணாமூர்த்தி,

துர்க்கா தேவதாயை நம என்று 1008 உரு

செபிக்க ராஜவசியம் உண்டாகும்.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என

அரசு சார்ந்தவர்களிடம்

வசியத்தை உண்டாக்குவதே ராஜவசியமாகும்.

வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள் :-

-----------------------------------------

வசி வசி என்று தினம் செபித்தாயானால்

மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும்்

என்றார்கள் நம் சித்தர்கள்.

வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய

சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம்

ஆட்டி படைக்கிறது என்று பார்ப்போம்.

நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில்

மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.

அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது,

கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.

தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற

பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ்

கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக

முயற்சியே இந்த வசியம் எனப்படும்.

நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான

தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை

அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான்

வசியம்.

இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம்.

சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர்

வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம்,

பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று

ஆறு வகையாக பிரித்துள்ளனர்.

உலகம், பகைவர் மற்றும் விலங்கு

வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும்,

அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற

அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர்

வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும்

பயன்படுத்தி உள்ளனர்.

வசியத்தை நடைமுறை வாழ்க்கையில்

பயன்படுத்தும் பொழுது

1 . மந்திரம்

2 . யந்திரம் அல்லது சக்கரம்.

3 . மூலிகை

4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு

நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி

இவைகளை பற்றி ஆராய்வோம்.

 #‎மந்திரம்  :-

குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட

மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே

மந்திரம் எனப்படும்.

வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும்

அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய

முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர

எழுத்துகளுக்கு உண்டு.

🌷🌷🌷🙏🏻 நமது சித்தர்களும் நமசிவாய என்ற

ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின்

ரகசியங்களும் அடங்கி இருந்ததை

அறிந்திருந்தார்கள்.

நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன்

என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள்.

இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி

அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும்

பயன் படுத்தி உள்ளனர்.

ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது

வசியதிற்கான முலமந்திரமாகும்.

இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை

ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை

செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள்

சித்தர்கள்.

கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.

உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம்

இந்திரன்.

வசிய ஆற்றலைத்தான் இன்றைய விஞ்ஞானம்

மெஸ்மரிசம் என்று குறுப்பிடும்.

எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை

படுத்தி படிக்கும் போது நமது உடலில்

மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும்.

இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று

குறிப்பிடுவார்கள்.

தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை

எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம்

தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின்

மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட

காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது

யந்திர முறையாகும்.

இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22

வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால்

செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம்

அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால்

ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.

இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள்

பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர். நாம்

வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.

இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை

மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது

கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று

லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும்.

இது ஒரு முறை.


🌷🙏🏻🌷

 எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும்

மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன.

இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற

நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர

முறையாகும்.

தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று

வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே

நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால்

எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும்

தராது.

தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின்

பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி

நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது

போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை

சிதற விட மாட்டார்கள்.

அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?

முறையாக உருவேற்றபடாத எந்த

சக்கரத்திற்கும் சக்தி இல்லை.

🍁🍁🍁🍁🍁

 வசியம் என்றால் என்ன என்ற விளக்கம் உங்களுக்கு தெரியுமாகையாள் அடியேன் நேரடியாக பதிவிடுகிறேன்.


மந்திரம் 


அரி ஓம் ஸ்ரீ ராமா ஆனந்த தாண்டவா உருத்திர மூர்தியே என்னைக்கண்ட சர்வ ராசரும் சர்வ சனங்களும் என் வசமாகவே சுவாகா. 


கிரிகை


சுத்தமான சந்தனத்தை பன்னீரில் கலந்து உரு 108 செய்து பொட்டு வைக்க சித்தியாகும்


சத்துரு வசியம் - நாயுருவி மந்திரம் 

வணக்கம்,


மீண்டும் ஓர் சத்துரு வசிய முறை உங்களுக்காக. இது மிகவும் இலகுவான எளிதான முறையாகும்.


நாயுருவி எனும் மூலிகை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஓர் வசிய முறையே இது.


மந்திரம்


ஓம் எழுவானை படுவான் நாயுருவி ஏனானை முகத்து நாயுருவி புலி போல் முனங்கி நாகம் போல ் சீறி மான் போல் வருவாரை நாவடங்க விட்டாய் நாயுருவி சிவாகா. 


கிரிகை


உரு 108 


நாயுருவி செடிக்கு சாபம் நீக்கி அதன் துளிர்களை பறித்து உள்ளங் கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை பொட்டாக இட்டுச்செல்ல எதிராளிகள் வணங்குவார்கள்

 

 

                          அஞ்சனாதேவி மூல மந்திரம்

 

 

மந்திரம் 1ஓம் றாங் றீங் அஞ்சனி தேவி மாயி வா வா சுவாகா


 மந்திரம் 2


ஓம் றாங் றீங் பாதாளதேவி வாயுபத்தினி பகவதி என் முன் வா வா சுவாகா


மந்திரம் 3


ஓம் அஞ்சனி தேவி சர்வ பேதனி ரூபி இளவானி வாய்வு தேவி பூதாளி சர்வ அஞ்சனி பிரவஞ்சனி அனுமானை பெற்றவளே பாதாளம் தெரிய சுவாகா.


இவை தவிர இன்னும் பல நூறு மந்திரங்கள் உள்ளன

 

 

 

முக வசியம்  அல்லது  சர்வசன  வசியம்


  இந்த முறை உங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் திலர்த்தம் (பொட்டு) வைப்பது பழக்கத்தில் இல்லாதவர்கள் திடீர் என பொட்டுடன் கானப்பட்டாள் பலரும் சந்தேகிப்பர் ஆனல் இது தாயத்து முறையில் கழுத்தில் அணிந்து கொள்வதால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.


மந்திரம்.


ஓம் றிம் அம் உம் சிம் ஐயும் சவ்வும் கிலியும் சிவயந வா வா நசி நசி சர்வ வசிகரி நசி நசி வா வா வந்து என் முகத்தில் நில் சர்வ லோகத்து  சர்வ சனங்களும் என்வசமாகவே சுவாகா.

🌹🌷🙏🏻🍁🌺💐

ஆகவே தகுதியான குருவின் வழிகாட்டுதல் இல்லாத பட்சத்தில் யாரும் இவற்றை முயற்சிக்க வேண்டாம். இங்கே பகிரப் படும் தகவல்கள் அனைத்தும் காலத்தால் அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை

🌹🌹🌹🌹🌹🌹


 குருவருளை வேண்டி அவரின் மேலான அனுமதியுடன் ஒரு ஞாயிற்று கிழமை நாளில் நீராடி, செம்பட்டு ஆடை அணிந்து வடகிழக்கு திசையை நோக்கி வில்வ மரத்தினாலான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, முன்னால் செம்பட்டிலான துணியில் யந்திரத்தை வைத்து; வசிய மூல மந்திரமான “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா” என்ற மந்திரத்தை செபித்தவாறே மல்லிகை மலர்களால் யந்திரத்தை 108 தடவை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு மண்டலம் தொடர்ச்சியாக செய்து வர வசியம் சித்திக்குமாம்.

🌷🌷🌷🌷🌷


 கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொல்ல வேண்டும்..


வசி வசி..வசி..

சகலமும் வசி...

சர்வமும் வசி..

சகலரும் வசி...


12 முறை இதனை சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புவேன் என்றார்..என் நண்பர்கள் யாருக்கேனும் இது பயன்பட்டால் அதை விட சந்தோசம் எனக்கு எதுவும் இல்லை!!


உண்மையில் ஒருவருக்கு நிறைய மக்கள் செல்வாக்கு உண்டாகவேண்டுமெனில் மக்கள் தொடர்பு ஸ்தானமான 9ஆம் இடத்தில் லக்னத்துக்கு சுபர் அல்லது இயற்கை சுபர் இருக்க வேண்டும்...அவரது திசாபுத்தி நடக்க வேண்டும் அல்லது நான்காம் அதிபதி திசையோ ஐந்தாம் அதிபதி திசையோ நடக்க வேண்டும்..அந்த காலத்தில் அவர் தன் வாழ்க்கை முழுமைக்குமான செல்வத்தை சேர்த்துவிடுகிறார்...லக்னத்துக்கு நான்காம் இடம் சுகாதிபதி..அவர் திசை நடக்கும்போது தம்பி பணக்காரர் ஆகிவிடுகிறார் ..மாமனார் செல்வாக்கு பெறுகிறார் ...ஜாதகரும் சொந்த வீடு கட்டிவிடுகிறார்...அல்லது மாமனாராவது சொந்த வீடு கட்டி கொடுத்து விடுவார்..பாக்யாதிபதி திசை நடக்கும்போது தந்தை இருந்தால் தந்தையால் செல்வம் வந்து சேரும்..அல்லது திடீரென புகழ் பெற்று ஓவர் நைட்டில் பெரிய ஆளாகிவிடுகிறார்..


நான் பார்த்த புரோகிதருக்கு சுக்கிர திசை நடந்து கொண்டிருந்தது....சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில்.மிதுன லக்னம் வேறு..பாவகிரக தொடர்பும் இல்லை..அம்சத்திலும் கெடவில்லை..சுக்கிரன் நின்ற வீட்டுக்கதிபதி சனி 2ஆம் பாவகத்தில்...பேசியே ..அல்லது மந்திரம் சொல்லியே சம்பாதிக்கிறார்..


ஒரு ஜாதகத்தில் லக்னம் ,ராசி,ராசி அதிபதி கெடாமல் இருந்தாலே போதும் அவர் யோகமான ஜாதகர் ஆகிவிடுகிறார்..சனி வலுத்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டால் அவர் நிறைய சிரமங்களை அனுபவிக்கிறார்...ஆட்சி,உச்சம் பாவர்கள் அடைய கூடாது..லக்னத்துக்கு யோகர் மறைய கூடாது..லக்னத்துக்கு பாவர் பலம் பெற கூடாது...எதிரிகளுடன் போராடவே நேரம் சரியாக இருக்கும்.7ஆம் அதிபதி வலுத்துவிட்டால் எல்லாம் மனைவி பார்த்துப்பார் என வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதான்.. அஷ்டம சனி,ஏழரை சனி எது வந்தாலும் திசை எது நடக்கிறது என்பதுதான் முக்கியம்..மோசமான திசை நடந்தாலும் சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி ஓஹோ என இருந்தாலும்...முடியல சாமி..குரு என்னத்த கொடுத்தார் என புலம்புவதாக இருக்கும்!!


🌷🙏🏻🙏🏻🌷

 வசியம் வேண்டுபவர்கள் அகத்தியர் வாத சௌமிய சாகரத்தில் மந்திவாள் பகுதியில் குறிப்பிட்டுள்ள " 


ஓம் ரீங் வசி வசி" 


என்னும் மந்திரத்தை கண்களை முடி,உதடு அசையாமல் காலையிலும் மாலையிலும் வடகிழக்கு திசையை நோக்கி 108 முறை ஜெபிக்கவேண்டும். 


தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்தால் சர்வ வசியம் உண்டாகும். 


தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மன ஒருமைபாட்டுடன் அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.பொதுவாக எல்லா மந்திரங்களும் ஜெபித்த டனேயே பலன் தருவதில்லை ஒரு லட்சம் முறை உரு ஏற்றிய பின்னரே அவை வேலை செய்யத் தொடங்கும். மேலும் வசிய மந்திரத்தை ஜெபிக்கும்போது வாயின் வலது பக்கத்தில் ஒரு கிராம்பினை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும்.ஆனால் எக்காரணம் கொண்டும் கடிக்கக்கூடாது. 


ஜெபம் முடிந்ததும் கிராம்பைத் துப்பிவிட வேண்டும்.இது வசிய சக்தியை விரைவு படுத்த உதவும். 

வசியப் பிரயோகம் செய்தால் கண்னுக்குத் தெரிந்த எதிரிகளும் தெரியாத எதிரிகளும் வசியமாகி விடுவார்கள். எதிரிகளின் எதிர்ப்பு அலைகளை மாற்ற நம் வசீகர சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். 


எந்த மந்திரமானாலும் எடுத்த உடனேயே பலனைத்தராது. மிகவும் கவனத்துடன் மந்திரத்தின் ஒலி மாறாமல் சிந்தனையை மந்திரத்தில் மட்டும் செலுத்தி இலட்சம் உரு ஏற்றினால் மந்திரம் சித்தியாகும்.

🍁🍁🍁


 வசிய மந்திர இரகசியங்கள்


மோகினி மந்திரம்


ஓம் மோக மோகினி விரும மோகினி விஷ்னு மோகினி ஈஸ்பர மோகினி ஈஸ்பரனை கண்டு மோகித்தாள் போலே என்னைக்கண்டவர்கள் அணைவரும் என் மோகத்திரளிள் சிக்கி என் வசமாகவே சுவாகா 


மூல மந்திரம்


ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா


(பௌர்ணமிதிணத்திள் சந்திர ஒளி படும்படியா இருந்து இதை செய்யவேண்டும்)

 

 

 

இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.


 குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.


மந்திரம்


ஓம் அன்று தாய் தலை அறுத்த அங்குச ராமன் பிறந்து தக்கன் தலை அறுத்து யாகம் அழித்து பின்னும் சிங்காசனத்தில் சினந்து பாய அகோரம் பொறுக்க மாட்டாமல் அங்குசம் கொண்டு கட்டி வந்த மந்திரத்தாள் உருவே தனிந்து அகோரம் அடங்கி சர்வ அங்குசமும் குளிர்ந்து தனி தனி சுவாகா    


  

கிரிகை


சலத்தில் (நீர்) 9 முறை உரு செய்து சாமி ஆடுபவரின் தலையில் மந்திரத்தை செபித்தவாரு ஊற்ற எப்படிப்பட்ட தேவதையும் தனியும். இது அனுபவ உன்மை

🌺🌺🌺

 அகத்தியர்.

– அகத்திய வாத சௌமியம் — 

எங்காவது வெளியில் கிளம்பும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விபூதி அல்லது குங்குமம் அணிந்து செல்லவும்.குறிப்பாக இன்டர் வியூ,பெரிய மனிதர்களைக் காண செல்லும் பொழுது இதை பின்பற்றவும்.

ஹரி ஓம் திருவுள்ளமே ஆதித் திருவுள்ளமே |


செந்தாமரையில் பிறந்திடும் மருவே|


உன்முகம் என்முகமாக உன் கண் என் கண்ணாக|


கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

🌷🌷🌷

ராஜ ராஜேஸ்வரி - மந்திரம்

48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு , விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .

ஓம் சங்கு, ராங்கு, சடாட்சர நமசியவ தேவி ,

பிரணவ வாலை , அகார - உகார - மகார , 

ஸ்திரி , ஸ்ரீம், ஐம், மனோன் மணி ,

ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,

சர்வ ஜீவ வசிகரி ,

சர்வ மோக மோகினி வா வா , வருக வருக ,

சர்வ சகல வசி, வசி, ராஜ மோக வசி ,

சர்வ லோக , சர்வ புவன ,

ராஜ ராஜேஸ்வரி வசி வசி .

சங்கு , ராங்கு , சடாட்சர நமசியவ தேவி ,

பிரணவ வசிய வசி ,

எந்தனைக் கண்டோர், உந்தனைக் கண்ட பிரேதம் போல் ,

மாத்தான், வஞ்சகர் வந்து வணங்கிட ,

என் புருவ மையம் மையைக் கண்டோர் ,

அகார - உகார - மகார ஆதரவான தன்மைப் போல் ,

ஸ்திரி , ஸ்ரீம் , ஐம் என்று எனக்கு பதில் பேசாதிருக்க ,

வசிய வசிய வசி ,

ஓம் குருவே நமசிவய சுவாஹா.

🌹🌹🌹

 வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும். மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.  முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.


108முறை கூற வேண்டிய மந்திரம் :


ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ🙏🏻🙏🏻🙏🏻நன்றி வணக்கம்

9 comments:

  1. மிகவும் நல்லது.

    ReplyDelete
  2. யாரு சாமி நீ? இவளோ content குடுத்து இருக்க😌

    ReplyDelete
  3. asaithambi7013@gmail.com

    ReplyDelete
  4. Kok kok manmatha leelai authors name sollunga

    ReplyDelete
  5. Kok kok manmatha leelai book author name sollunga

    ReplyDelete