Wednesday, 19 February 2020

நான் எழுதிய பாடல்

  நான் எழுதிய பாடல்

அகத்தீசா அகத்தீசா
மகத்தான அகத்தீசா
உள்முகத்தான அகத்தீசா
பன்முகத்தான அகத்தீசா
சின் மயமான அகத்தீசா
உண்மை யமான அகத்தீசா
உன் -மயமான அகத்தீசா
உள் -மயமான அகத்தீசா
தன் மயமான அகத்தீசா
நாடி வருவோருக்கு
நாடியில் வருவீரோ
நாடியில் வந்து பாடி வருவீரோ
ஓடி எம்மில் வருவீரோ
ஓடி எம் இல் வருவீரோ
ஒளியாய் வருவீரோ
கிளியாய் வருவீரோ
இந்த கலியில் வருவீரோ
மலையில் வருவீரோ
மழையில் வருவீரோ
சிலையில் வருவீரோ
அக்கணமே வருவீரோ
அருள் தருவீரோ
பொருளாய் இருப்பீரோ
கருவாய் உதிப்பீரோ
உருவாய் இருப்பீரோ
அருவாய் வருவீரோ
திருவாய் மலர்வீரோ
இலகுவாய் தருவீரோ
வெகுவாய் காப்பீரோ
தீமை அழிப்பீரோ
ஊழ்வினை களைவீரோ
தமிழ் வளர்ப்பீரோ
யோகம் அளிப்பீரோ
சித்தர் தலைவரே
அகத்திய மாமுனியே
அகந்தை அழிப்பவரே
அருளெல்லாம் கொடுப்பவரே
சக்தி புதல்வரே
சங்கடம் அழிப்பவரே
காவல் தெய்வமே
கானக அரசரே
காத்து நிற்பவரே
கவலை தீர்ப்பவரே
ஆறுமுகன் சீடரே
ஊழ்வினை அழிப்பவரே
உற்சாகம் கொடுப்பவரே
தொல்லை போக்குபவரே
அருகில் இருப்பவரே
கும்பத்தில் உதித்தவரே
ஜோதியாய் இருப்பவரே
இலக்கணம்  வகுத்தவரே
ஆயுர்வேதத்தின் தந்தையே

விதியே, எம் மதியே
நீயே எம் பதியே
தந்தாய் நிம்மதியை
தந்தாய் நின் மதியை
வருவாய் அருள்வாய்
திருவாய் மலர்வாய்
மறைபொருள் தருவாய்
நிறைநிலை காணுவாய்
அகத்தின் ஈசனே
எம் அகத்திய மாமுனியே
குருவின் குருவே
நின் தாள் சரணம்
நீயே வரணும் வரணும்
அருளே தரணும் தரணும்
தாயாய் வந்தாய்
சேயாய் நின்றாய்
மாயமாய் இருந்தாய்
ஒளியை தந்தாய்
தந்தையாய் இருந்தாய்
சிந்தையில் தெளிந்தாய்
சித்தத்தை அளித்தாய்
பித்தத்தை அழித்தாய்
வாதத்தை ஒழித்தாய்
கபத்தை அறுத்தாய்
அறிவை வளர்த்தாய்
அகங்காரம் ஒழித்தாய்
அச்சம் நீக்கினாய்
தெளிவை காட்டினாய்
காட்டாமல் காட்டினாய்
ஊட்டாமல் ஊட்டினாய்
ஓங்காரம் ஒலித்தாய்
ஒளியின் ஊடே ஒளிந்தாய்
தேடாமல் தேடினாய்
சூடாமல் சூடினாய்
பாடாமல் பாடினாய்
செய்யாமல் செய்தாய்
சொல்லாமல் சொன்னாய்
நில்லாமல் நின்றாய்
இல்லாமல் இருந்தாய்
இல்லமதில் இருக்கும் தாய் நீ
சொல்லின்  வன்மையாய் இருந்தாய்
வில்லின் தன்மையாய் வளைந்தாய்
புல்லின் தன்மைக்குள் இருந்தாய்
கல்லுக்குள் தேரையாய் இருந்தாய்
வானவில்லாய் ஜொலித்தாய்
வண்ணத்து பூச்சியாய் பறந்தாய்
கான மயிலாய் ஆடினாய்
காண குயிலாய் பாடினாய்
ஓடும் நதியாய் ஓடினாய்
தேடும் கண் பார்வைக்குள் இருந்தாய்
ஆசானாய் விளங்கினாய்
அறிவை தந்தாய்
பாஷாணம் அளித்தாய்
பழியை போக்கினாய்
குருட்டை நீக்கினாய்
குருவாய் ஆக்கினாய்
ஆக்கினையில் இருந்தாய்
அக்கினியாய் இருந்தாய்
ஞான பழமாய் இருந்தாய்
ஞானியர் தலைவனாய் இருந்தாய்
சந்திர சூரியனாய் இருந்தாய்
சந்திர மண்டலத்தில் இருந்தாய்
ஏழ் கடலும் நீ
ஏழ் கடலை குடித்தவனும் நீ
எழுமலையானும் நீ
ஏழாம் அறிவும் நீ
எட்டாத பொருளும் நீ
வற்றாத செல்வம் நீ
தற்கால பொருளும் நீ
முக்காலம் உணர்ந்தாய் நீ
இக்காலம் உரைப்பாய் நீ
பகலும் நீ இரவும் நீ
மாலை மதியமும் நீ
சொல்லும் நீ பொருளும் நீ
அருளும் நீ திரு வும் நீ
தோன்றா பொருளும் நீ
தோன்றிய நிலையும்  நீ
நீங்கா நினைவும் நீ
நிலை பெற்று நிற்பவனும் நீ
மூலப்பொருளும் நீ
கால காலனும் நீ
வேதத்தின் வித்தகன்  நீ
யோகத்தின் உச்சம் நீ
சிவானுபூதியின் மொத்தம் நீ
சித்தன் நீ சிவனும் நீ
அத்தன் நீ அயனும் நீ
புத்தன் நீ சுக்தன்  நீ
கணலாய் இருந்தாய்
நிழலாய் நடந்தாய்
பொருளாய் இருந்தாய்
அருளாய் பொழிந்தாய்
காற்றாய் அடித்தாய்
ஊற்றாய் உறைந்தாய்
பனியில் கிடந்தாய்
மலையில் பொதிந்தாய்
குகையில் அமர்ந்தாய்
யோகம் புரிந்தாய்
காலம் கடந்தாய்
ஞாலம் படைத்தாய்
சூலம் தரித்தாய்
சுழிமுனையில் விரிந்தாய்
காட்சி கொடுத்தாய்
தாமரையாய் மலர்ந்தாய்
தாயுமான தயாபரா
தன்னிகரில்லா தலைவரா
தொழுபவருக்கு தோழனாய்
அழுபவருக்கு ஆறுதலாய்
அடியவர்க்கு அடியவராய்
தேவருக்கு இந்திரனாய்
முனிவருக்கு மூத்தவனாய்
அணிபவருக்கு மாலையாய்
ஆனந்த கூத்தனாய்
ஆனந்த பத்மநாபனாய்
பொகளூரின் செல்வனாய்
கல்லாரில் இறைவனாய்
பொதிகையின் முதல்வனாய்
வெள்ளியங்கிரி ஈசனாய்
பழனியில் போகனாய்
அகஸ்திய கூடத்தின் நடு நாயகமாக விளங்கும்
எங்கள் பொதிகை மலை வேந்தனின் தாள் சரணம் சரணம் சரவணபவ ஓம்.

தி. இரா. சந்தானம்
20.02.2020