Sunday, 5 August 2018

My Nadi 05082018

நேற்று அகத்தியரிடம் ஜீவ நாடியில் அருளுரை கேட்டேன். நான் உன்னுடன் இருக்கையில், ஏன் அஷ்டமி நவமி என்று நாள் பார்க்கிறாய் என்று கோபித்தார். நான் உன்னுடன் இருக்கும் போது அஷ்ட திக்கு பாலகர்கள் என்ன செய்து விட முடியும் என்று கூறினார். சில விஷேச பரிகார முறைகளையும் கூறி அருளினார். சற்று கோபமாக, நான் இருக்கையில் அவன் உரைத்தான், இவன் உரைத்தான், எவனோ உரைத்தான் என்று கூறுகிறாய். அதிலெல்லாம் மனதை நிறுத்தாதே. என் நாமத்தை ஜெபித்து வந்தாலே போதுமானது. என் அப்பன் முருகன் ஆலயம் சென்று மனமுருகி வேண்டு, அது போதும், என்று உரைத்தார்.

நேற்று ஆதி பழனி ஆண்டவர் கோவிலுக்கும் சென்று ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனம் பெற்றோம்.

அகத்தியர் நாமம் வாழ்க.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

படம், பாண்டவர்கள் தவம் செய்து சில வருடன் வாழ்ந்து வந்த இடம்