Wednesday, 8 August 2018

பத்ர காளி சரணாகதி மந்திரம்

*பத்ர காளி சரணாகதி மந்திரம்



*

சத்ருபய சங்கட சர்ப்பதோஷ நாஸினீ. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா
சித்த சுத்தி நல்கிடும் துரிதவர தாயினீ. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா

சுத்த ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்த்ர ரூபிணி. ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா

உத்தம இகபரச் சுகங்கள் யாவும் நல்குவாய். ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்தியங்கரா.

அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி, மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
நிரந்தரி நீலி கால பைரவி, திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
சரணம் சரணம் சரணம் தேவி, எனைக் காத்தருள்வாய மஹாசக்தி.

கிழக்கில் மேற்கில் வாராஹியும்,
தெற்கில் சண்டிகையும், வடக்கில் வைஷ்ணவியும்,
அக்னி திக்கில் அம்பிகையும், வாயு திக்கில் மஹேஸ்வரியும்,
நிர்ருதி திக்கில் சவத்தை வாஹனமாகக் கொண்டவளும்,
ஈசான திக்கில் ஸிம்ஹத்தை வாஹனமாகக் கொண்ட தேவியும்,
மேலே சாரதையும், கீழே பார்வதியும்,
சிரஸ்ஸை சாகம்பரியும், முகத்தை பைரவியும்,
கழுத்தை சாமுண்டையும், ஹ்ருதயத்தை சிவையும்.
புஜங்களை ஈசானியும், மார்பையும் நாபியையும் காலிகையும்,
வயிற்றை அபர்ணையும், இடுப்பையும் மூத்திர பையையும் சிவப்ரியையும்,
துடைகளை கௌமாரியும், முழங்கால் இரண்டையும் ஜயையும்,
கணுக்கால்களையும் கால்களையும் ப்ரஹ்மாணியான பரமேச்வரியும்,
எல்லா அங்கங்களையும் கடும் பீடைகளை நாசம் செய்பவளான துர்க்கையும்,
அடியேனையும், அடியேனின் குடும்ப உறுப்பினர்கள் அனனவரையும், எப்பொழுதும் காக்க வேண்டும்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .....