Wednesday, 15 August 2018

என்னுடைய ஜீவ நாடி உரை மற்றும் இன்று யாம் கண்ட ஆதிபழனியாண்டவர் கோவில் அதிசயங்கள்



இன்று, 15.08.2018 அன்று எனக்கு தனிப்பட்ட முறையில் ஜீவ நாடியில் அகத்தியர் அய்யா அருளுரைத்தார். ஆனால், முதலிலேயே, பொதுவான ஒரு விஷயத்தை குறிப்பிட்டு அதனை பற்றி கூறினார். அகத்தியரின் வார்த்தைகள் கீழ் வருமாறு ;

^^^^^^^^^^^^^^^^
தவமீன்றி வந்த யோக நிலை பெற்றவனே, உனக்கு யாம் அன்றேயே உரைத்தோமே, உன் அருகில் அல்ல, உம்முள் இருந்து உமை காப்போமே என்று. உமை யாம் காப்போம்.

அண்டை தேசத்திலே, ஆட்கொட்டும் வெள்ளமது திள்ளி திரளுகிறதே என்று மனதில் ஓர் நிலை உரைத்தாய். அகத்தியன் யானே உரைக்கிறேன் கவனமுடன் கேள் மகனே.

சில யோகத்தின், சில யாகத்தின் நிலையால் வருணன் அதனை தப்பம் தப்பி அண்டை தேசம் சென்றானே. கருமம் அதை நிறைந்துள்ளதை வருணனவன் நிறைவு செய்து நித்தம் செய்தானே. மனம் தளராதே, ஷக்தி நிலை ஓங்குமப்பா. சர்வம் அது பெருகுமே. எங்கும் சித்தர் நாமம் ஒலிக்க கடையுமே.

நாவடக்கம் கொள் மகனே, அமைதி அதை கார். உனது வாழ்வும் வசந்தம் பெரும்.

^^^^^^^^^^^^^^^^^^
மேலும் சில பரிகாரங்களையும் எனக்கு தனிப்பட்ட முறையில் உரைத்தார். அவை பதிவிடுவதற்கில்லை.
^^^^^^^^^^^^^^^^^
மேலும், இன்று நாங்கள் ஆதி பழனியாண்டவர் கோவிலுக்கும் சென்றோம். இன்று அங்குள்ள அர்ச்சகர் மீண்டும் ஒரு முறை தல வரலாறை முழுமையாக கூறினார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு சென்று எடுத்த படங்களை வீட்டிற்கு வந்த பின் பார்த்தபோது, ஒரு பெரிய கல்லில் சித்தரின் முகம் தெளிவாக தெரிந்தது. இத்தனை நாள் யார் கண்ணிலும் படாமல் உள்ளது அதிசயம். எங்கள் கண்ணிலும் படவில்லை, ஆனால் புகைப்படம் தெளிவாக காட்டி கொடுத்து விட்டது.### படம் தங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு வித இலைகள் கொண்ட அதிசய வேப்ப மரம், நந்தி தேவர் வடிவம் , ஐந்து தலை நாகர் வடிவம், இரு சிங்கங்கள் கொண்ட சிம்மாசனம், போன்றவை சுயம்புவாகவே உள்ளன. ##### படங்கள் இணைக்கப்பட்டுள்ளன######

நன்றி.

தி.இரா.சந்தானம், கோவை
Ph; 91760 12104