Sunday 6 May 2018

ஏழு சிரஞ்சீவிகள் வழிபாடு

ஏழு சிரஞ்சீவிகள் வழிபாடு :

புராணங்களில் ஏழு சிரஞ்சீவிகள் உண்டு அவர்கள் அஸ்வத்தாமன், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமான், விபீஷணன், மாபலி சக்ரவர்த்தி, வியாசர் - இந்த ஏழு பேருமே புராணங்களில் சிரஞ்சீவிகளாக கூறப்படுபவர்கள்.

இவர்கள் ஏழு பேருமே சிவாலயங்களையும் சிவனையும், அங்கிருக்கும் மற்ற தெய்வங்களையும் பாதுகாப்பவர்கள். நாம் எப்போதும் சிவாலய தரிசனம் முடித்ததும், ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம்.
அப்போது அந்த ஏழு சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமன், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமான், விபீஷணன், மாபலிசக்ரவர்த்தி, வியாசர் ஆகியோர் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.


அதனால் கோயிலுக்குச் சென்று விட்டு வேறு எங்கும் செல்லாமல் நேரே நம் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி ஏழு சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமன், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமான், விபீஷணன், மாபலி சக்ரவர்த்தி, வியாசர் இவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

அதனால் வீட்டிற்கு வந்தவுடன் இவர்களை நினைத்து பூஜை செய்து விளக்கேற்றி வழிபடுவது வீட்டுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பது நம்பிக்கை.