Saturday 12 May 2018

ஷடாரண்ய க்ஷேத்ரங்கள்



ஆறு காடுகளுக்கு மத்தியில் அமைந்தது ஊர் ஆறுகாடு என்று அறியப்பட்டு பின்னாளில் ஆற்காடு என்று அழைக்கப்படுகிறது.

அது என்ன ஆறு காடுகள்?

அவை தான் ஷடாரண்ய க்ஷேத்ரங்கள்.

ஷடம் என்றால் ஆறு. ஆரண்யம் என்றால் காடு, ஆறுவிதமான காடுகளில் அமைந்த கோவில்கள் என்று பொருள்.

ஆறு காடுகள் ஆறு கோணங்களில் அமைந்துள்ளதே அதன் சிறப்பு.

இரண்டு முக்கோணங்கள், ஒன்று கீழிருந்து மேல் நோக்கியும், மற்றொன்று மேலிருந்து கீழ் நோக்கியும் அமைந்துள்ள வடிவமே ஷடகோணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆறு காடுகள் இரண்டு முக்கோண, ஷடகோண வடிவில் அமைந்துள்ளதே மேலும் சிறப்பு ஆகும்.

இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் ஒரு முக்கோணம் அமைந்துள்ள மூன்று கோவில்கள் சிவன் கோவில்களாகும். மற்ற முக்கோணத்தில் அமைந்துள்ள மூன்று கோவில்கள் சக்தி தலங்களாக அமைத்துள்ளனர், அக்கால ரிஷிகள்.

சிவமும் சக்தியும், இரு முக்கோண வடிவாக இணைந்துள்ள இந்த இடங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. மேலும் ஷடகோணமே ஆறுமுகரின் வடிவமும் ஆகும்.

இந்த ஷட ஆரண்ய தலங்களை தரிசித்தால் கேட்டவை எல்லாம் கிடைக்கும் என்பது திண்ணம்.