Tuesday 6 February 2018

அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலையில் தீப்பிடித்து எரிந்த மரங்கள்

அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலையில் தீப்பிடித்து எரிந்த மரங்கள்
By DIN  |   Published on : 04th February 2018 02:45 AM  | 

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மலையில் வெள்ளிக்கிழமை மாலை குப்பைகளில் பற்றிய தீ அருகிலிருந்த மரங்களில் பற்றி எரிந்தது.
மலையின் உச்சியில் மலைப்பாதையின் முடிவில் மேற்கு பகுதியில் பக்தர்கள் உணவருந்தி விட்டு தூக்கி வீசுகிற பாக்குமட்டை தட்டுகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்திருந்த பகுதியில் முதலில் தீப்பிடித்து இருக்கலாம் என்று அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வேகமாக பரவிய தீ காற்றின் வேகத்தில் அருகில் இருந்த மரங்களில் பற்றி பரவியது. அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருச்செங்கோடு தீ தடுப்பு நிலைய அலுவலர் ராகவன் தலைமையிலான குழுவினர் மூன்று மணிக்கு மேலாக போராடி தீயை முழுமையாக அணைத்தனர். திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி மற்றும், இந்து சமய அறநிலையத் துறையினர், கோயில் ஊழியர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை

No comments:

Post a Comment