Saturday 3 February 2018

மேலும் சில சிலை உடைப்பு தகவல்கள்

உலோபமுத்திரை தாயார் சிலை உடைக்கப்பட்ட செய்தி, ஏற்கனவே கொடுக்கப்பட்டது. பின்னர், பொகளூரில் அகத்தியர் சீவ நாடியில் இது குறித்து அகத்தியரிடமே கேட்கப்பட்டது. பழைய செய்தி கிழே உள்ளது.

இன்று, நான் பொகளுர் சென்று இறை சித்தரிடம் இது குறித்து விவரம் கேட்டேன். நேற்று 02/02/18 அன்று, பிரம்ம முகூர்த்தம் தன்னில் கேட்கப்பட்ட சீவ நாடி அருளுரையில் கூறியதாவது, இந்த பாதக செயலை செய்தவர் அனைவரும் இன்று உயிருடன் இல்லை. மொத்தம் 4 பேர் செய்துள்ளனர். மதுவின் போதையில் இருந்துள்ளனர். 26/01/2018 வெள்ளி கிழமை இரவே 11.30 மணிக்கு இந்த தகாத காரியத்தை செய்துள்ளனர். அதில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார் எனவும், ஒருவர் சாலை விபத்தில் இறந்தார் எனவும், இருவர் துர்மரணமாக, வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்தனர் என்று நாடியில் உரைக்கப்பட்டது.

மேலும், உலோபமுத்திரை தாயார், ஆதி பரமேஸ்வரியின் சாஷாத் அவதாரம் என்று உரைக்கப்பட்டது. அதனால் அம்பாள் உக்கிரம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில், வெள்ளம் பெருகி, கல்யாண தீர்த்தம் முழுவதும் நீரில் மூழ்கும், மக்கள் அங்கே செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என்றும் உரைக்கப்பட்டது.

இந்த காரணத்தினாலேயே மதுரை மீனாட்சி அம்மன் உக்கிரமடைந்து கோவிலில் தீ விபத்து 02/02/2017 அன்று ஏற்பட்டதாகவும், நம்பப்படுகிறது.

மேலும், உலகெங்கும் உள்ள அகத்திய அடியவர்கள் பெரும்பாலானவர்களுக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டு உள்ள காரணம், சிலை உடைந்ததால் தான் என்றும் கூறப்பட்டது.

மேற்கூறிய தகவல் அறியவும், நன்றி, வணக்கம், சந்தானம்.

-------------------------------------------------------------------------

பழைய தகவல்

மூடர்கள் செயல்

பாபங்களை தொலைக்கும் பாப நாசத்தில், அகத்தியர் அருவியின் மேல் அமைந்துள்ள கல்யாண தீர்த்தத்தில் உமையவள் உலோபமுத்திரையுடன் குருமுனி அகத்தியர் கம்பீரமாக வீற்றிருந்தார்.

தற்போது, தாயாரின் சிலையில் அவரது தலை பகுதி சில விஷமிகளால் உடைக்கப்பட்டு உள்ளது.

நெல்லைமாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவிக்கு மேல் வீற்றிருக்கும் குருமகரிஷி தம்பதியரின் திருமேனிக்கு நேர்ந்த கொடுமை......

குருநிந்தைக்கு பாபவிமோசனமே கிடையாது..
அவ்வாறிருக்க வார்த்தைகளால் சொல்லவியலாத இப்படுபாதக செயலைசெய்த பாவிகளுக்கு என்னவிமோசனமோ?....
இதேஇந்நேரம் வேறு மதத்தவரின் திருமூர்த்தம் இவ்வாறு சிதைக்கப்பட்டிருந்தால்"""திராவிடதிருட்டுநாய்கள்""கண்டணக்ககுரல்கள் எடுத்து கதறியிருக்கும்...
அன்னையின் சிரம்மீது கரம் வைத்தவன் இந்நேரம் காணாமல் போயிருப்பான்..
மதபேதம்இல்லாமல் இறையுணர்வு பெற்றோார் அனைவரும் இதைப்பகிரவும்...

ஓம்காலசம்ஹாரபைரவாயநமஹ

இன்று 01/02/2018 அன்று அகத்தியர் சீவ நாடியில் அகத்தியரிடமே இந்த சிலை உடைப்பை பற்றி கேட்கப்பட்டது. அகத்தியர் சீவ நாடியில் எழுந்தருளி, இது சில விஷக்கிருமிகளின் நயவஞ்சக செயல் என்று குறிப்பிட்டார். அவர்கள் கடவுள் மறுப்பு இயக்கத்தை சார்ந்தவர்கள் அல்ல, என்றும் உரைத்தார். சிலை கடந்த வெள்ளிக்கிழமை 26Jan18 அன்று அகற்றப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும், சில பக்தர்கள் ஒன்றினைந்து புதிய சிலை வெகு விரைவில் பிரதிட்டை செய்யப்படும் என்றும் நாடியில் கூறியுள்ளார். ஓம் அகத்தீஸ்வராய நம, நவ கோடி சித்தர்களே போற்றி போற்றி.

No comments:

Post a Comment