Sunday 11 February 2018

சீவ நாடி அருளுரை - சில தகவல்கள்

சனிக்கிழமையன்று 10feb18, அகத்தியர் பீடம் சென்று வணங்கி வந்தேன். அப்போது இறை சித்தருடன் உரையாடி கொண்டு இருக்கும் போது, சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

கோவை மாவட்டம் குறிச்சி குளக்கரையில் அமைந்துள்ள காளி அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் உரைக்கப்பட்டது உள்ளது. வெள்ளிக்கிழமை சென்று வழிபாடு செய்து வேண்டினால் பெருத்த நன்மை கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. நாடியில் குறிப்பிடும் போது காளிகை அம்பாள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், அன்னூர் அருகில் ஒரு அரப்பு மரம் உள்ளது, அதன் அடியில் முருகப்பெருமான் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். இந்த இடத்தில் கோடை காலத்தில் கூட வற்றாத சுனை ஒன்று உள்ளது. அந்த நீரை தினமும் பருகி வந்தால், தீராத நோய்களும் தீரும் அதிசயம் உண்டு, என்று நாடியில் உரைக்கப்பட்டது உள்ளது. இந்த இடத்தில், பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செய்த போது தவம் மேற்கொண்டதாக நாடியில் உரைக்கப்பட்டது உள்ளது. மேலும் ஒரு சித்தர் ஜீவ சமாதி கொண்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. தற்போது, இவ்விடம், கோவில் எதுவுமின்றி, சுயம்பு மூர்த்தி, மரத்தின் அடியில் இருக்கிறார். சிறிய அளவில் பூசை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இவ்விடத்தை சுற்றியும், பல்வேறு சிலைகள் உள்ளனவென்றும், ஒரு நில உரிமையாளர், இதனை வாங்கி, கல் குவாரி அமைக்க முயற்சி எடுத்து தோல்வியுற்றதாகவும் செய்தி அறியப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment