Monday 26 February 2018

ஒரு நண்பரின் தெய்வீக அனுபவம்

https://m.facebook.com/photo.php?fbid=905180402846585&id=100000639026701&set=a.220493341315298.61789.100000639026701

திருச்செந்தூர் சென்றால் அங்குள்ள மூவர் சமாதிக்கு சென்று குறைந்தது ஒரு மணி நேரமாவது அங்கு அமர்ந்து விட்டு வருவது வழக்கம். அப்படித்தான் ஒரு நாள் மூவர் சமாதியில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது பிற்பகல் மூன்று மணி இருக்கும். அங்கு வேறு யாருமில்லை. சற்று நேரத்திற்கு பிறகு அங்கு காவி ஆடை அணிந்த ஒரு பெரியவர் வந்தார். வரும்பொழுது அவர் பாட்டு பாடிக்கொண்டே வந்தார். "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்ற பாடலை பாடிக்கொண்டு வந்தவர். எனக்கு சற்று தூரத்தில் அமர்ந்துகொண்டார். அவர் என்னிடம் " தம்பிக்கு எந்த ஊரு" என கேட்டார். நான் " பாளையங்கோட்டை" என்றேன். அவர் " தம்பி இது எப்பேர்பட்ட மண்ணு தெரியுமா? முருகன் கால் பதித்த மண்ணு இங்க பக்கத்தில் வா" என்றார். நான் அவர் அருகில் சென்றேன். அவர் தொடர்ந்தார் ' என் கட்டையை இந்த மண்ணுலதான் தம்பி சாய்க்கணும், அதோ அங்க கீழ கிடக்கிற பேப்பர எடுத்துட்டு வா' என்றார். அங்கு கிடந்த நாளிதழ் பேப்பரை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். அவர் என்னை அந்த பேப்பரை விரித்து பிடிக்க சொன்னார். நானும் விரித்து பிடித்தேன். அவர் கீழிருந்து கடல் மணலை அள்ளி மூன்று முறை அதில் இட்டு மடித்து என் கையில் கொடுத்தார். 'இந்த மண்ண உன் வீட்டில் வை தம்பி ரொம்ப புனிதமானது' என்றார். பிறகு அவர் ' தம்பி நான் வருகிறேன், இன்னும் 10 நிடத்தில், சரியா மாலை 4 மணிக்கு இங்கு கருடன் மேலே வட்டமடிக்க வருவான் அவனை  பார்த்திட்டு போ' என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். நான் காத்திருந்தேன். சரியாக மாலை 4 மணிக்கு கருடன் தரிசனம் தந்தான். அவனை தரிசித்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன். அந்த மண்ணை வீட்டில் வைத்த அடுத்த மாதத்தில் ஒரு நிலம் வாங்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த பெரியவர் ஒரு வழிபோக்கர். அவர் யார் என்று எனக்கு தெரியாது.

No comments:

Post a Comment