Tuesday 2 January 2018

ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " -மூடநம்பிக்கை


ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் நவம்பர் 2002ல் இருந்து

தவறான வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!

எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . இறப்பு நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . இடைச் செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு ,அக்குடும்பத்தினருக்கு எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தினரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்துவிடும் ! இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .

****அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , சினிமா , செய்தித்தாள் படித்தல் , புது ஆடைகள் , ஸ்வீட்டுகள் , காபி , டீ , ருசிகர உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும் கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .
--- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் மார்ச் 2002

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete