Saturday, 6 January 2018

அகத்தியருடன் ஆன்மீக வினா விடை

    இரண்டாவது கேள்வி: ஓம் நமச்சிவாய! ஒன்றே எண்ணில் ஒன்றேயாம், பலவே எண்ணில் பலவேயாம். அன்றே எண்ணில் அன்றேயாம். ஆம் என்னில் ஆமேயாம் என்று இறைவனை எப்படி அறிந்து கொள்வது என்று யுத்த காண்டத்திலே, கம்ப ராமாயணத்திலே கம்பர் கூறுகின்றார். இது வழி சென்றால் இறைவனை அடையலாம். இவ்வழி சென்றால் இறைவனை அடையலாம், அவ்வழி சென்றால் இறைவனை அடையலாம் என்று தடுமாறி, பல நிலைகளிலே நாங்கள் செல்லுகின்றோம். நான் செல்லுகின்றேன் என்று பழியை என்மேல் சுமத்தி நான் இந்த வாசகத்தை துவங்குகின்றேன். ஒருவனா இறைவன், பலவா என்ற கேள்விக்கு, ஒன்றே எனில் ஒன்றேயாம், பலவே எனில் பலவேயாம் என்று சொல்லிவிட்டார். ஒன்று என்றால், நமச்சிவாயம் ஒன்றே, அந்த ஜோதிவடிவான, வடிவமற்ற இறைவன் என்றும் சொல்லலாம். பலவே என்றால், 700 கோடி மக்கள், இன்று உலகத்தில் பறந்து இருக்கின்ற அனைவரும் அந்த இறைவன் என்று சொல்லலாம். குறிப்பாக, என் முன் காட்ச்சியாக காணுகின்ற அகத்தியர், அகத்தியரின் வாக்காக, வாக்கினை சொல்லுகின்ற திரு.கணேசன் அவர்களும் இறைவனாக, நானும் இறைவனாக, இங்கு கூடியிருக்கின்ற அன்பர்கள் அனைவரும் இறைவனாக ஏற்றுக் கொண்டால், இது நீங்களாக இருக்கின்ற உலகத்தில் இருக்கின்ற அனைவரும் இறைவனாகவும் ஏற்றுக் கொண்டால்,  "சர்வ ஜனா சுகினோ பவந்து"என்று சொல்லுகின்றோம். உலகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும், இன்பமாக, இனிதே வாழ வேண்டும் என்கிற எண்ணத்திலே ஒருவன் தலைப்பட்டால், பல நிலைகளை சொல்லி, அம்மே என்று சொல்லி, இருந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என்கிற நிலையை நான் கேட்க விரும்பவில்லை. அம்மே! என்றால், அப்படி இருந்தால், அவர் இருக்கின்றார் என்றால், நீங்கள் சொல்லிவிட்டீர்கள், நான் கேட்பதற்கு முன்னாகவே, என் அகத்தியர் எனக்கு வக்களித்தாற்போல் ஏற்றுக்கொள்ளுங்கள், ஒளியற்றவர் என்று சொல்லி ஒளியே இல்லாமல் இறைவன் இருக்கலாம் என்று சொன்னால், பஞ்ச பூதங்களை தாத்பர்யமாக நாம் நினைக்கின்றோம். வானாகி மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஒலியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையும் இன்மையுமாய் ........................ தான் நான் என்று சொல்லி, நான் என்பது எனது என் மக்கள் என்று சொல்லி, நான் எப்பொழுது தலைப்பட்டு அதை பற்றியே சிந்திக்கின்றேனோ, அதுகால், எனக்கு இந்த இறை அருள் கிடைக்காது என்று சொல்லுகிறீர்கள். நான் இதை எல்லாம் விட்டு செல்லவேண்டும் என்றால், நான் என்ன செய்ய வேண்டும், நானே என்னை விடவேண்டும் என்றால், அது என்ன முறை? என்று தான் நான் கேட்க விரும்புகின்றேன். மேலும் மகாபாரதத்திலே, கிருஷ்ணர் அன்று அர்ஜுனனுக்கு சொல்ல்லுகின்றார் "நான் இல்லாத நாளும் இல்லை, நீ இல்லாத நாளும் இல்லை, என்றும் நிறைந்திருக்கின்ற ஒரு தத்துவத்தை அவனுக்கு உணர்த்துகின்றார். எக்காலத்திலும் நீங்கள் இருந்தீர்கள், எக்காலத்திலும் நானும் இருந்தேன் ஆனால் அது உனக்கு புரியவில்லை. அர்ஜுனா நீ இல்லாத நாளும் இல்லை, கிருஷ்ணனாகிய நானும் இல்லாத நாளும் இல்லை. ஆகையினால், இந்த 700 கோடி ஜனங்களும், ஆன்மாவாக அலங்கரித்துக்கொண்டு கொண்டு, இந்த உலகில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் என்று ஒத்துக்கொண்டால், நான் இல்லாத நாளும் இல்லை, நீர் இல்லாத நாளும் இல்லை என்றால், பிறப்பு என்பது வந்து கொண்டே இருக்கும், அந்த தளையை நீக்க முடியாது. பிறப்பறுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். பிறந்து கொண்டே இருப்போம், இறைவனை வணங்கிக் கொண்டே இருப்போம் என்ற தத்துவம் உண்மையா, அல்லது இந்த பிறவியை விடுத்து நான் இறைவனாக சென்று விட்டேன் என்று மறு பிறப்பின்றி வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்த இறைவனை போற்றக் கூடிய பலன் இல்லாமல், இறை அருளை பற்றி வகுக்கக்கூடிய நிலை இல்லாமல், உலகம் அனைத்தும், மகா பிரளயம் ஏற்ப்பட்டு அனைத்தும் அவர்களுக்கு ஒன்றாகிவிட்டால், உலகம் என்பது தேவை அற்றதாகும். ஆகையினால் என்னுடைய கேள்வி. மறு பிறப்பு வேண்டுமா? அல்லது பிறவாத வரம் வேண்டும். அப்படி மறுபடியும் பிறந்து விட்டால், உன்னை மறவாத வரம் வேண்டும் என்கிற பல்லோர் கருத்தினை நானும் ஏற்றுக் கொண்டு, பிறவி தொடர்ந்து வரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவேண்டுமா, பிறவாத வரம் வேண்டுமா என்கிற கேள்விக்கு நான் இங்கு உங்கள் முன் கேட்டுக் கொள்கிறேன்.
    ​​அகத்தியரின் பதில்: இறைவனின் கருணையை கொண்டு, இன்னவனுக்கு, இன்னவன் வினாவிற்கு, இத்தருணம் யாங்கள் இயம்புவது, ஒன்று, மந்திரி ஒருவன் இருக்கிறார், மிகவும் உயர்ந்த பதவி என்று வைத்துக் கொள்வோம். அவனை எனக்குத் தெரியும், என் தோழன், என்னோடு கல்வி பயின்றவன் என்று ஒருவன் கூறுவது உயர்வா, அல்லது அந்த மந்திரி, எல்லாம் எமக்குத்தெரியும், என்னுடன் கல்வி பயின்றவன், உள்ளே அழைத்து வாருங்கள் என்று கூறுவது சிறப்பா? இறைவனை தெரியும் என்று மனிதன் கூறுவதை விட, இத்தனை கோடி மனிதர்கள், இவனை எமக்குத் தெரியும், அதோ வருகிறாள், யார், எம்பால் என்று காரைக்கால் அம்மையாரை பார்த்து முக்கண்ணன் கூறினாரே, அதோ வருகிறார், யார், நம் தோழன் என்று சுந்தரரை பார்த்துக் கூறினாரே, அதைப் போல இறைவனைத்தேடி நாம் செல்ல வேண்டாம். ஒவ்வொரு மனிதனையும் தேடி இறை வரும் வண்ணம் ஒவ்வொரு மனிதனும் பக்குவம் அடைந்தால் போதும். எப்படி பக்குவம் அடைவது என்பதற்குத்தான் பல்வேறு நீதி மொழிகள் இருக்கின்றன. யாமும் சிலகாலமாக இறைவன் அருளால், வாக்கினை ஓதிக்கொண்டிருக்கிறோம். எனவே, என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது? இது வேண்டுமா, வேண்டாமா? பிறவி தொடர்வதா, தொடராமல் இருப்பதா? இது போன்ற அனைத்தையும் விட்டுவிட்டு, எந்த விதமான எண்ணங்களும் இல்லாத வெற்று பாத்திரமாக மனதை வைத்து இறையிடம் பரிபூரண சரணாகதி என்பதை எண்ணங்களால் வைத்து மனிதன் வாழ்ந்தால், அவன் யார், அவன் எதற்கு, எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை இறையே உணர்த்தும். எனவே, இன்னவனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும். எல்லோரும் இறையில் நகை கொள்ளார். ஆனால் கனகம் இருக்கிறதே, அது கனகம் என்று தெரியாத நிலையிலே, சேற்றிலே அமிழ்ந்து கிடந்தால், யாரும் மதிக்கமாட்டார்கள். தூய்மை படுத்தினால், கனகம் என்று தெரியும். அதுபோல, பற்று, மாயை, அறியாமை, ஆசை, சுயநலம், தன்முனைப்பு போன்ற அழுத்துதல் போன்றவை, மனித ஆன்மாவை மூடியிருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டால், எல்லோரும் இறை நிலைக்கு உயர வாய்ப்பு உண்டு.

No comments:

Post a Comment