Friday 19 January 2018

ஸ்ரீ ஆயுர்தேவி கோயில்

ஸ்ரீ ஆயுர்தேவி கோயில்

போகர் :- “குருதேவா! ஸ்ரீ ஆயுர்தேவிக்குக் கோயில்கள் எழுப்பலாகுமா?”

அகஸ்தியர் :- “ஸ்ரீ அம்பாளின் விருப்பம் அதுவாயின் எதுவும் நடக்கும். எனினும் எம் பரம்பரையோன், எம்முடைய கிரந்தகளிலிருந்து எடுத்தருளியுள்ள ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கை வரை உச்சாடனம் [ஜபம், பாராயணம்] செய்யப்படவேண்டும். ஸ்ரீ ஆயுர்தேவிக்கான காயத்ரி மந்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு தியானிக்கப்படவேண்டும். அதன்பிறகு யாம் அளித்துள்ள ஸ்ரீ ஆயுர்தேவி ஹோமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைய்யில் நிகழ்த்தப் பெறவேண்டும் என்று ஓர் ஆவாஹன அளவுகோல் உள்ளது.

எந்த தெய்வத்திற்கும் ஒரு கோயில் அமையும் முன் இத்தகைய ஆன்மீக குறியீட்டு இலக்கணங்கள் உண்டு. அவை முற்றுப்பெறும் போது ஸ்ரீ ஆயுர்தேவியே தானாகக் கோயில் கொண்டு அருள் பாலிப்பாள்!”

எனினும் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு கோயில் எழுப்புவதற்கான மனிதப் பிரயத்தனங்கள், முயற்சிகள் மேற்கொள்வதில் தவறில்லை. ஸ்ரீ அம்பிகை விரும்பும் போது அது தானே கைகூடும்.”

போகர் :- “திரிமூர்த்திகள் தவிர ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்ற தெய்வ அவதாரங்கள் உண்டா சற்குருதேவா?”

அகத்தியர் :- “திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ராவண சம்ஹாரத்திற்கு முன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் போது ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்றார்.

அப்போது, “ஸ்ரீ ராமா! உன்னுடைய துவாபர யுக கிருஷ்ணாவதாரத்தில் என்னுடைய பரிபூரணமாக என் அருளை பெறுவாய்என்று கூறி ஸ்ரீ தேவி ஆசிர்வசித்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் தம் சற்குரு சந்தீபனியிடம் குருதட்சிணை அளிக்க சென்ற ஸ்ரீகிருஷ்ணனிடம் அவர்ஸ்ரீ கிருஷ்ணா! உன்னிடம் நான் குருதட்சிணை பெறும் நேரம் வந்து விட்ட்து. பல ஆண்டுகளுக்கு முன்னர் சமுத்திர ராஜன் என் புதல்வனை ஆட்கொண்டுவிட்டான். அவனை மீட்டு தருவதே நீ எனக்கு தரும் குருதட்சிணையாகும்.” என்று தெளிவாக கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ணனும் பல சமுத்திர லோகங்களைக் கடந்து தேடியும் சந்தீபனியின் புதல்வன் அகப்படவில்லை. ‘குரு தட்சிணையின்றித் திரும்புவதா? அதுவும் பூர்ணாவதாரத்தால் இயலாத ஒன்றா? என ஸ்ரீ கிருஷ்ணன் சற்று சிந்தித்தான்.
தம்மை பூர்ண அவதார அம்சங்களிலிருந்து விடுவித்து, மனித அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாய் தன்னைப் பாவித்துக் கொண்டார். அப்போது ஸ்ரீ அருணாசல க்ஷேத்திரமும், ஸ்ரீ ஆயுர்தேவியின் மூலமந்திரத்தை ஜபித்த வண்ணமெ ஸ்ரீ கிருஷ்ணன் கடலுக்குள் புகுந்தான்.

மச்சாவதாரம் புரிந்தவனன்றோ! ஒரு மச்சத்தின் வயிற்றில் சந்தீபனியின் புதல்வன் இருப்பதைக் கண்டு அவனைக் கரை சேர்த்து, குரு தட்சிணையாகச் சற்குருவின் அபிலாக்ஷைகளுக்கேற்பத் தந்தருளினான்.

அப்போது சந்தீபனி, “ஸ்ரீ கிருஷ்ணா ! ஸ்ரீ ஆயுர்தேவி மகிமையை உலகிற்கு எடுத்துரைத்து மக்களுக்குச் சேவை செய்வாயாக!” என்று அருளினார்.
சற்குரு சந்தீபனியின் விருப்பப்படியே ஸ்ரீ கிருஷ்ணன் இன்றும் திருஅண்ணாமலை மலைக் காட்டிலுள்ள கல்லால மரத்தின் ஒவ்வொரு இலையிலும் ஆலிலைக் கிருஷ்ணனாகத் தவழ்ந்து ஸ்ரீ ஆயுர்தேவியின் மகாத்மியத்தை பலகோடி லோகங்களுக்கும், சனகாதி முனிவர்கள் மூலம் பரப்பி வருகிறார்.

இந்த ஆன்மீக ரகசியத்தை நாரதருக்கும் உணர்த்தியவர்கள் சித்த புருஷர்களே! இன்றும் கோகுலாஷ்டமி அன்று திருஅண்ணாமலையில் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசன முகட்டில் கிருஷ்ணனின் புல்லாங் குழல் ரீங்காரத்தைக் கேட்டு இன்புற்றவர்கள் ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீ விடோபா ஸ்வாமிகள், ஸ்ரீ பூண்டி மகான், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் போன்றோர் மட்டுமன்றி பாரதியார், ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள் ஆகியோருமாவர்.


ஸ்ரீ ரமண மகரிஷி எப்போதும் மலை உச்சியைப் பார்த்துக் கொண்டே இருந்ததின் ஆன்மீக ரகசியம் இதுவே. பிரபஞ்சத்தின் ஆன்மீக சிகரமாக விளங்கும் அருணாசல மலையில் கோடானுகோடி தெய்வ லீலைகள் நிகழ்கின்றன. இதை ரசித்து ஆத்மானுபவம் பெற்று பரமானந்தத்தில் திளைத்து மகிழ்ந்தவர்களே ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் முதலான மகான்கள். சாதாரண மனிதனும் ஆத்ம உணர்வுகளுடன் கிரிவலம் வருவானாயின் சற்குரு அருளால் இத்தகைய தெய்வ திருவிளையாடல்களையும் பரமாத்ம லீலைகளையும் துய்த்துணரலாம்.

No comments:

Post a Comment