Thursday 4 January 2018

திருவண்ணாமலை அடுத்துள்ள கொழப்பலூர் கிராமத்தில் சிவன் திருக்குராஈஸ்வரன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் தீராத கடன் பிரச்சினைகளும் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. இங்கு உள்ள திருக்குரேசுரம் பண்டைய கால நிர்ணய வடிவமாய் நான்மாடக் கோயிலாக அமைந்துள்ளது. இவ்வாலயம் கட்டியவர் கண்டராதித்த சோழர் என்பதை நிரூபிக்க ஒவ்வொரு ஆலயத்திலும் திருப்பணியாளர் சிலை திருவுருவம் இருப்பதைப் போன்று இக்கோயிலிலும் கிழக்கு நுழை வாயிலில் முதல் தூணில் வடக்கு நோக்கியபடி குவிந்த (கும்பிட்ட) கரத்து சோழர் சிலை பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இக்கோயில் நம்பி ஆருரர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்துக்கு முற்பட்டது.

அப்போதைய பெயர் கோளிப்புதூர் என்பதாகும். இக்கோயில் மண் கோட்டைக்குள் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்களை நிருத்த கணபதி தட்சணாமூர்த்தி எதிராக சுந்தரமூர்த்தி சுவாமிகள் கையில் பொற்றாளத்துடன் நின்று புகழ்பாடும் கோலத்தையும், மகாமகிமை வரப்பிரசாதியாய் திருத்தல விநாயகர் தரிசிக்கின்றோம். அடுத்து உள்ளது அகத்திய முனிவர் பூசித்த அகத்தியலிங்கம் வருணன் வெப்பு நீங்க பூசித்த வருண சிவலிங்கம் அடுத்துள்ளவை பூநீளா சமேதராய் விளங்கும் பெருமாள் ஆலயம் எதிர்முகமாக உள்ளது. அடிமுடி காணா இலங்கேசுவரர் பெருமாள் ஆலயத்தை அடுத்து ஸ்ரீவள்ளி தேவ சேனா சமேதராய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய பெருமாள் அருள் வடிவாய் விளங்கி வரம் பாலிக்கும் தன்மை கண் கொள்ளாக் காட்சியாகும்.

அடுத்து உள்ளது வாயு பகவான் ஆதிசேடனுடன் போரிட்டு பலமிழந்து தவிக்கும் காலத்து நாரதர் தோன்றி உனக்குள்ள குறையாதென சுவாமி ஆதிசேடனுடன் போரிட்டதால் என வலிவு குன்றி உலவும் சக்தியுமிழந்து தவிக்கிறேன் என நாரதர் வாயுவை நோக்கி திருக்கோளிப்புதூர் எனும் நகரடைந்து பாகு நதியில் மூழ்கி திருக்குரேஸ்வர பெருமான் ஆலயத்திற்கு தான் தோன்றியாகி விளங்கும் சிவபெருமானை வணங்கினால் இழந்த பலத்தை பெறுவாய் என உடனே வாயுபகவான் திருக்கோளிப்புதூரையடைந்து வடக்கிலுள்ள பாகுநதியில் மூழ்கி கல்மணம் பெற மலர், வில்வம்,அறுகு,தும்பை, கொண்றை முதலியன கொண்டு தான் தோன்றி நாதனைப் பூசித்து பலவாறு தோத்தரித்து பாடி நிற்க, பெருமான் தோன்றி வாயுதேவா இக்கோயிலின் உன் திக்கில் என் அதிட்டான வடிவமாகிய இலிங்கப் பிரதிட்டை செய்து தினம் காலை உச்சி மாலை மூன்று வேளை பூசித்தால் இழந்த பலம் பெறுவதோடு பல செயல்களிலும் சித்தி பெறுவாய் என அருளச் செய்து மறைந்தார்.

வாயுதேவன் பூசித்த இலிங்கம் வாயுதிக்கில் உள்ளது. கோயிலை யொட்டி மகேசன்,துர்க்கை, பிராம்யி,சண்டேசுவரர் சன்னதிகள் உள்ளன. தரிசித்து கிழக்கு வாயில் வழியா உட்சென்றால் தான் தோன்றி பெருமானை தரிசிக்கலாம். பண்டைய காலத்து பெரிய நடராஜர் திருவுருவம் இருந்தது. போலும் அதற்குரிய சிவகாமியம்மன் திருவுருவம் சுமார் 3 அடி உயரத்திற்கு இருவாயில் சன்னதி மற்றும் சந்திரசேகரர், வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர், விநாயகர், சண்டேஸ்வரர், சோமாஸ்கந்தர், அம்மன், பெரியநடராஜர் இவைகள் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் புதர் சூழ்ந்து இருந்து கவனிப்பாரின்றி இருந்தது. இருக்கும் மூர்த்தங்களைத் தரிசித்து இறைவனை வணங்கி வெளியில் வந்தால் தெற்கு முகம் நோக்கி எங்கு வந்தாய் மகனே உனக்கென்ன வேண்டும் என புன்னகை பொழிய சிரித்த முகத்துடன் திரிபுரசுந்தரி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். சிலா சாசனத்திலுள்ளவை திருக்குரேச்சுர நாயனார் சிவசுந்தரி பல கல்வெட்டெழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன. இக்கோயில் சுமார் (1000) ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இக்கோயிலுக்குள் ஈசான திக்கின் பரமேசகூபம் எனும் தீர்த்த கிணறும் உள்ளது.

இத்தீர்த்தம் தான் தோன்றி நாதருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.திருக்குராஈஸ்வரன் பெயர்வர காரணம்:- பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரமபதநாதனை பரவி பாடி கண்டுகளித்து நாரத பெருமான் கடல் கரை வழியாக வருகையில் சோர்ந்த முகத்துடன் கண்ணீர் வடித்து நின்ற வெண்குதிரையை கண்டு திகைத்து தாய் கர்ப்பத்து கருவுற்று தங்கி பிறந்தாய் இல்லை அமிர்தத்தோடு பிறக்கும் அமைப்பு பெற்ற உனக்கு அவலமாகிய கலக்கமும் கண்ணீரும் உன் கவின் மிகுந்த முக அழகை கெடுத்து அவலமாவதேன் என நாரதர் வினவ, சுவாமி கத்துருவை என்னும் நாக கன்னிக்கும் அவள் தங்கை வினாதா என்பவளுக்கும் உண்டான வாக்குவாதப்படி தக்ஷன் எனும் நாகத்தால் எனது கால் தொடையின் இடபாகத்தில் விஷத்தால் தாக்கியது. யான் பாற்கடலில் தோன்றியதால் அவ்விஷாக்கினியானது என்னை கொல்லாமல் கருமை நிறமாக அப்பாகத்தை பாழ்படுத்தியது. இனி யான் தேவலோகம் சென்றால் தேவர்கள் எல்லி ஏளனம் செய்வார்கள். ஆகவே இதற்கென் செய்வதென்று மனம்கலங்கி வாடுகிறேனென, நாரதர் சற்று யோசித்து வெண்பரியே சான்றோருடைத் தென விளங்கும் தொண்டை வள நன்னாட்டின்கண் கச்சியம்பதிக்கும் அருனையம்பதிக்கும் நடுநாயகமாய் விளங்கும் திருக்கோளிப்புதூர் என்னும் திவ்விய திருநகரின் வடபால் குராமரத்தடியில் கயிலை நாயகன் கொளரி மனோகர் சுயம்பு மூர்த்தமாய் தான் தோன்றி நாதரராய் விளங்கி அருள் பாலிக்கின்றார்.

மற்றும் இருடியர் முனிவர் சித்தர் முதலியானோர் பூசித்து வேண்டி பல சித்திகளை அடைந்திருக்கிறார்கள். ஆகவே நீயும் அங்கு சென்று வணங்கினால் உன் உடல் மாசு நீங்கும் என்று உரைத்து வான் வழியில் வீனாகானத்துடன் சென்றார். உடனே வெண்குதிரை சிவபெருமானை தியானித்து தனது இறக்கையால் ஆகாய வெளியில் பறந்து நீராடி சென்று கோளிப்புதூரையடைந்து அப்பகுதிக்கு வடபால் உள்ள பாகு நதியில் நீராடி சிவனை தியானித்து பெருமானே உனதருள் என்பால் சுரந்து உடல் மாசை நீக்கியருள வேண்டுமென பிரார்த்தித்து குரா மரத்தடியில் விளங்கும் சுயஞ்சோதியாகிய இலிங்க மூர்த்தியைக் கண்டு களித்து தன் நாவினால் நக்கி சிவனே உமக்கு இருடியரும் முனிவர்களும் நன்னீராட்டி நறுமலர் கொண்டு உமது திருநாமங்களை நவின்று பூசிக்கின்றார்கள் எனக்கு அவ்வகைக்கு எனக்கு உறுப்பமைப்பு இன்மையால் மானசீகமாக செய்யும் பூசையை ஏற்று மாசு நீக்கியருள்கவென கண்ணீர் சொறிந்து அழகுரும் அவ்வுரை அரப்புரம் பொருள் அசரீரியாக செய்யப்படும் பூசை நமக்கு நாவின் நீர் நன்னீராக மானசீகத்தில் நினைத்தருச்சித்தவை நருமண மலராகும்.

இன்போல் நாற்பத்தேன் நாட்கள் பாகு நதியில் படிந்து எம் திருமேனி கண் இமைக்காமல் கண்டு தியானிக்க உனக்கு பிரத்தியச்சமாவோம் உனக்கு வேண்டியவை செய்வோனே  இறைவன் திருவானையின்படி நாற்பத்தெண்நாள் இறைவன் ஆணையின்படி மானசீக தியானத்தால் பூசிக்க இடபத்தி சிவன் உமையம்மனுடன் தோன்றி பாற்கடலில் தோன்றிய பரியே உன்மனோ அபிட்டம் யாது மற்று வேண்டியவாறு அருள்புரிவோம் என சிவபெருமானே உம் திருச்சேவை பெற்ற பின் என்குறைகள் அனைத்தும் நீங்கின உடல் கருமாசும் நீங்கின அடிமையின் வேண்டுகோள் யாதெனில் நாக்கினால் நக்க குழந்தைமையால் இந்நகருக்கு குழசை என திருப்பெயரும் குதிரையாகிய எனக்கும் இறங்கி இன்னருள் சுரந்தமையால் திருக்குரேச்சுரர் என திருப்பெயரும் அமைய அருள் செய் என வேண்ட அருள் புரிந்து மறைந்தார். தெய்வப்புரவியும் சிவலிங்க திருமேனியை பண்முறை வலம் வந்து வணங்கி தேவலோகம் சென்றது.

அமைவிடம் :-திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் இருந்து 7வது கி.மீட்டரில் கொழுப்பலூர் உள்ளது. தொடர்புக்கு:- தர்மகர்த்தா முருகேசன், – 9843125751 அர்ச்சகர் ஆனந்தன் – 9442408796 படமும் செய்தியும் ப.பரசுராமன்.

No comments:

Post a Comment