Wednesday, 10 January 2018

தமிழ் மர்ம யோகம் நாதம், ஒலி, ஓசை, இசை, காது, செவி பற்றிய விளக்கங்கள்

தமிழ் மர்ம யோகம்

நாதம், ஒலி, ஓசை, இசை பற்றிய விளக்கங்கள் :

Marma yoogi

நாதத்தின் மிக பெரிய இயல்பே அதன் ஒழுங்கு தன்மையே.. ஓர் ஒழுங்கு
தன்மை முன் எந்த ஒரு முரண்பாடும் ஒழுங்கு தன்மையை நோக்கி இயங்கி ஒழுங்கிற்கு வந்து விடும்.. தேக ஒழிங்கின்மை அதாவது நோய் நொடிகள் ஒழுங்கு என்ற ஆரோக்கியத்தை நோக்கி நகர்ந்து எல்லாம் குணமாகும்.. ஒரு நிறைநிலை மனிதன் ஒழிங்கின் சீர்மையின் உச்ச நிலையில் உள்ளவன்.. அவன் சொல்லும் வார்த்தை தான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னதற்கு சமமாகும்.. சத்தியமும் நேர்மையும் அவன் வடிவம் ஆவதால் எந்த சொல்லும் மந்திரமாகும்.. ஓர் ஒழுக்கத்தின் சிறப்பு அப்படி பட்டது.. நாதம், ஒழுக்கமே வடிவானது.. ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார் வள்ளுவர்.. நான்கு வகை ஒழுக்க நெறிகளை வகுத்தார் வள்லலார்.. நாதம் என்பது என்ன ? காதில் ஒலிக்காத ஓசை ஆனால் செவியில் ஒலிக்கின்ற ஒலி.. காது வேறு செவி வேறு என்பதை அறிக.. காதில் உணரும் அத்தனையும் ஓசைதான்.. செவி என்பது இரு காதுகளுக்கும் இடையே அமைந்துள்ள ஒரு விசேச கருவி.. அதன் மூலம் மட்டுமே பிரபஞ்ச பேரறிவின் ஒழுங்கு இயக்கமான நாதம் என்ற ஒலியை உண்ர இயலும்.. அந்த ஒலியே, நாதமே, ஒழுங்கு.. ஏனைய ஓசைகள் எல்லாம் ஒழுங்கின்மையின் அடையாளம்.. பல மணி நேரம் சினிமா பாடல்களையும் பாடல் கச்சேரிகளையும் கேட்கலாம்.. ஆனால் ஐந்து நிமிடங்கள் நாத ஒலியை இன்றைய மனிதன் ஒழுங்காக செவியிலே உணரமுடியாது.. ஓசை என்பது கேட்பது.. ஒலி என்பது செவியில் உணர்வது.. உணர்வு பெருகும் போது புத்தியும் பேரறிவும் பெருகிறது.. நாதம் சிரநடு பகுதியில் கேட்பது போல தோன்றும்.. ஆனால் அது உணர்வது.. அதனால்தான் நாதத்தை உணர்வதும், அதில் நீடித்து இருப்பதும், அவ்வளவு
கடினம்.. உணர்வை பெருக்க, பேரறிவை பெருக்க, நாதத்தை உணர்வதை போல் ஒரு பயிற்சி எதுவுமே இல்லை.. ஒரு எளிய, மிக கடினப்பயிற்சியும் அதுவே.. இரு காதுகளை மூடினால் சிர நடு பகுதியில் கேட்பது போல தோன்றும் ஒலி உணர்வே நாதம்.. 

No comments:

Post a Comment