Sunday, 22 August 2021

இன்று 22.08.2021, பௌர்ணமி பூஜை சிறப்பாக நடந்தது

 ஒவ்வொரு பௌர்ணமியும் நமது பீடத்தில் பூஜைகள் அருமையாக நடத்தப்படுகின்றன


அதே போல இன்றும், 22.08.2021, பௌர்ணமி பூஜை சிறப்பாக நடந்தது



என்றுமே இல்லாத வகையில்,இன்று அகத்தியர், நமது விக்ரகத்தில் எழுந்தருளி, அபிஷேகத்தை ஏற்று கொண்ட காட்சி, அனைவருக்கும் இன்று தெள்ள தெளிவாக தெரிந்தது. 


இன்று கடைசி 3 அபிஷேகம், பன்னீர், கங்கை நீர் மற்றும் சந்தனம் , அபிஷேகம் செய்யும் போது மின்சாரம் துண்டித்து போனது. ஒரே இருள், அகத்தியர் விக்ரகம் சரியாக தெரியவில்லை.


மேலும் , அகத்தியர் அருகே இருந்த அகல் விலக்குகள் தேய்ப்பதற்காக வெளியே எடுத்து வைக்கப்பட்டு இருந்தன. 


ஐயனின் அருகில் எந்த விளக்கும் இல்லை. மிக சரியாக மேலே குறிப்பிட்ட அந்த அபிஷேக நீர் அய்யன் விக்ரகத்துக்கு மேலே பட்ட போது, பளீரென்று தீபாராதனை காட்டியது போல வெளிச்சம் அடித்தது. 2 வினாடிகள் மட்டுமே அந்த வெளிச்சம் இருந்தது. மஞ்சள் , தங்க நிறத்தில் வெளிச்சம் இருந்தது. 


இவ்வாறு மூன்று. அபிஷேகங்களிலும் 2 வினாடிகள், மூன்று முறை வெளிச்சம் தெரிந்தது.


சபரி மலை மகர ஜோதி போல சிறிய அளவில், ஜோதி எழுந்து மறைந்தது.


பூஜை முடிவில் 6மணி அளவில் , ஜீவ நாடியில் இது குறித்து அகத்தியரிடம் கேட்கப்பட்டது.


அதற்கு அகத்தியர், தாமே ஜோதி வடிவில் *நித்திய காட்சி* அளித்ததாக கூறி உறுதி செய்தார். மேலும் யாகத்திலும் அவ்வாறே எழுந்து அருளினோம், நீ அறிந்தாயா என்றும் கேட்டார். ஆலய பணிகளை செய்து முடிக்குமாறு உத்தரவு இட்டார்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


இன்று நிஜ ரூப அகத்தியர் ஆத்ம ஜோதி தரிசனம் கண்டவர்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


ஓம் அகத்தீசாய நம


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏







No comments:

Post a Comment