Tuesday 30 March 2021

ரோசாரியோ அய்யாவின் பதிவு, நமது பீடத்தை பற்றி.

 ரோசாரியோ அய்யாவின் பதிவு, நமது பீடத்தை பற்றி.


குறிப்பு, அய்யா ஒரு வாழும் யோகி 🙏🙏


குருவே துணை

🙏🙏🙏🙏🙏🙏


ௐௐௐௐௐௐௐௐௐௐௐ


பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி வாசிப்பு பீடம் ஒரு அற்புதமான ஷேத்திரம். மெயின் வாசல் மேற்கு நோக்கி அமர, உள் சென்று, வலது பக்கம் இருக்கும் தெற்கு வாசல் குடிலில் கிழக்கு நோக்கியவாறு அமர்ந்து இருக்கும் அகத்தியர் ஜீவ நாடி சக்தியை தரிசனம் செய்யலாம். அபூர்வமான விஷயம். அபூர்வமான, தொன்மையானதொரு சக்தி. அகத்தியரை அங்கு பிரசன்னத்திற்கு கொண்டு வருவது அந்த சக்தியே. அதன் மனம் பல யுகங்கள் பக்குவபட்ட ஒரு திராட்சை ரசத்தின் தன்மை கொண்டது. மெய் மறக்க வைக்கும் தெகட்டா சுவை. ஞானம் தரும் அமைதியை, நிர் சலனத்தை அங்கு நிறைவாக உணரலாம். அதுவே இடது பக்கம் திரும்பி, இடது பக்கம் இருக்கும் குடிலுக்கு சென்றால் ஏதோ நீர் நிலைக்கு மேல் ஒரு திடலில் அமர்ந்து இருக்கும் உணர்வு. எப்போதும் ஒரு குளிர்ச்சி. இதில் நேராக சூரியனின் கதிர் ஒளி காலை நமது முகத்தினை வருடுகின்றது. எமது ஆன்மாவிற்கு மிகவும் பிடித்தமான ஒரு அமைப்பு. குளிர்ந்த இடத்தில் சூரியன் நம்மை தட்டி எழுப்புவது. அங்கும் சில தெய்வங்கள். சில போக்கும் வரத்துமாக. அந்த குடிலின் இடது பக்கம் வெளி புறம், வடக்கு நோக்கி, எல்லை சாமியாக ஒரு பரம யோகி, யோகத்தில் வீட்டு இருக்கின்றார். கருப்புராயர் என்று அழைக்கின்றனர். அவர், அவர் தம் குருவிற்கு நந்தி என்பது தெளிவு. அவரின் குரு அவர் மூலம் அவர் வாழும் காலங்களில் பல அற்புதங்கள் செய்து அவரை நல்ல நிலையில் இருத்தி இருக்கின்றார். பல ஆண்டுகளுக்கு பின், இப்பொழுது அவர் தன்னை அவ்வப்போது அங்கு வரும் பக்தர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார். ஆசி வழங்குகின்றார். வாக்கு உரைக்கின்றார். இந்த இரு குடிலின் முன் வாசலுக்கு நேர் எதிராக ஒரு வன்னி மரம். அம்மரத்தின் மூலத்தில், மூல வித்தாக சித்தர் ஒருவர் அடக்கம். குப்பை சித்தர் என்று அழைக்கின்றனர். நாக பூஷனங்கள், பிள்ளையார், கொண்டு அவரை வழிபடுகின்றனர். அங்கிருந்து மெயின் ரோடு திரும்பும் இடத்தில் பின்னாக்கீசர் மரப்பொந்தில் தவம் செய்த இடம் ஒன்று வடக்கு நோக்கி அமைந்து இருக்கின்றது. அதன் அருகே புதிதாய் நிறுவப்படும் கோவில் கட்டுமானப்பணியில்… இவை யெல்லாம் அருகே… காலாற நடந்து செல்லும் தூரத்தில்… அதுவே கால் வலிக்க நடந்து சென்றால் பஞ்ச பாண்டவர் அமர்ந்த ஒரு வழிபாட்டு தளம். ஒரு குமரன் கோவில் என இடமே தெய்வ கடாசம் நிறைந்த பூமியாக காட்சி அளிக்கின்றது. அன்று பிண்ணாக்கீசர் காலம் தொட்டு பல சித்தர்கள், யோகிகள், இங்கு விஜயம் செய்து யோகம் ஞான பயின்று இருக்கின்றனர் என்பது திண்ணம். அபூர்வமான் ஒரு அமைப்பு. அற்புதமான ஒரு ஷேத்திரம். நேரம் கிடைத்தால், இல்லை அவ்வழி சென்றால், போய் செத்த நேரம் அதன் இனிமையை அனுபவித்து விட்டு வாருங்கள். அன்னூரில் இருந்து பத்து நிமிடம் பேரூந்தில். அங்கிருந்து பீடத்திற்கு 40/- share ஆட்டோவில். நாடி வாசிப்புக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.

முற்றும். குருவே துணை.


ௐௐௐௐௐௐௐௐௐௐௐ






No comments:

Post a Comment