Monday 29 March 2021

28.03.2021, பௌர்ணமி குரு பூஜை அனுபவங்கள் , உணர்வுகள்

நேற்று 28.03.2021,  நடந்த பௌர்ணமி குரு பூஜையில் , நமது குருஜியுடன் சேர்த்து மற்றொரு யோகி ஒருவரும் பங்கு பெற்றனர் . பொதுவாக , அகத்தியர் ஒவ்வொரு முறையும் வந்திருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து , யாகத்தில் எழுந்தருளி , விக்ரகத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார் . இது அனைவருக்கும் தெரிந்தாலும் , அனைவரும் அதனை உணர்வதில்லை , ஆர்வம் காட்டுவதில்லை . நேற்று நமது குருஜி மற்றும் நமது பீடத்துக்கு வருகை புரிந்த யோகி அவர்களும் யோகா நிலையில் அங்கே அமர்ந்து பூஜைகள் செய்து , சில சூட்சும காட்சிகளை கண்டு நமக்கு உரைத்தனர் . அவர்கள் உரைத்ததாவது , பல சித்தர்கள் அங்கே ஒளி ரூபத்தில் எழுந்தருளி அங்கும் இங்கும்  காட்சிகளையும் , ஹோம குண்டத்தில் அவர்கள் பெயரை சொல்லி அழைக்கும் போது , அந்த ஒளி நகர்ந்து , ஹோம அக்கினியில் சென்று சேர்ந்து நிற்கும் தன்மையும் கண் கூடாக சூக்கும காட்சிகளாக கண்டோம் என்று எடுத்து உரைத்தனர் . நேற்று கோரக்கர் எனது அருகில் வந்து என்னை சுற்றி வந்து ஆசீர்வதித்ததை நமது குருஜி கண்டுள்ளார் . ஆனால் நமது கண்களுக்கு அந்த காட்சிகள் தெரியாமல் , நான் அவரை வணங்காமல் இருந்தது ஏன் என்று கேட்டார் . நாமும் அது போல சில யோக பயிற்சிகளை செய்து வந்தால் இது போன்ற காட்சிகளை காணலாம் . காட்சிகளை காணா விட்டால் என்ன , சித்தர்கள் சூட்சுமமாகி எழுந்தருளி அனைவரையும் ஆசீர்வதிக்கும் நிகழ்வானது எப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது . மனிதர்களுக்கு தன அது புரிவதில்லை , ஏதோ யாகம் செய்தோம் , ஏதோ அபிடேகம் செய்தோம் என்று புற  செயல்கள் தாம் அவை என்று சாதாரணமாக எண்ணுகிறார்கள் . சித்தர்கள் தரிசனம் அவ்வளவு எளிதல்ல .  ஏறி கடந்து யாத்திரை செய்து , அவர்கள் நள்ளிரவில் நடமாடும் போது விழியுடன் இருந்து சில காட்சிகளை காண முற்படுவார்கள் . ஆனால் நமது பீடத்தில் அவை ஒருவருக்கு எளிமையாக கிடைக்கிறது . அதாவது , காடு மலை ஏறி திரிய வேண்டியதில்லை . அவர்களே நம் பீடம் இருக்கும் இடத்தில எழுந்து அருள்கிறார்கள். பொதிகை மலை சதுரகிரி மலை போன்ற இடங்களுக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை . அங்கேயே சென்றாலும் சித்தர்கள் அருளாசி செல்லும் அனைவருக்கும் கிடைக்கும் என்று உறுதி கிடையாது . இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தை தேடி ஓடி வெள்ளயங்கிரி போன்ற மலைகளெல்லாம் ஏறி இறங்கி , ப்ரயத்தனப்படுபவர்கள் , எளிமையாக சித்தர் அருள் பெரும் வழிமுறை நமது பீடத்தில் மட்டுமே உள்ளது . ஏன்
என்றால் , இங்கே அகத்தியர் ஜீவ அருள் நாடியில் எழுந்தருளி உள்ளார் .நான் கூட ஏற்கனவே 2 மாதம் முன்பு ஒரு வீடியோ எடுத்த பொது , பல ஒளி பிழம்புகள் நகர்வதையும் படம் பிடித்து போட்டேன் . பின்னர் சிறிது நேரத்தில் , அவர்கள் சென்ற பிறகு அவை தெரியவில்லை . அது ஒரு வெளிப்புற சான்று . நேற்று மேலும் ஒரு நல்ல சான்றாக வெளியூரில் இருந்து புதிதாக வந்த யோகி அவர்கள் , காட்சிகளை  ஞானக்கண் கொண்டு கண்டு நமக்கு தெரிவித்தது மிக்க மகிழ்வை கொடுத்தது . அதனால் தான் இங்கு நடக்கும் பவுர்ணமி பூஜைகள் கலந்து கொள்வது என்பது எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்தவே இந்த பதிவு . எத்தனையோ முறை , அகத்தியர் என்னிடம் , என்னை ஆலயத்தில் அழைக்கிறார்கள் , நாள் செல்கிறேன் , பிறகு அருள் உரைக்கிறேன் என்று சொல்லி செல்வது உண்டு. அதுவெல்லாம் இது போன்ற வழிபாடுகள் தான் . எனது இல்லத்திலும் அகத்தியரை எழுந்தருள செய்து விக்கிரகம் வைத்து வழிபாடு செய்து எனது அகத்திய பக்தியை நிறைவு செய்து கொள்கிறேன் . அதற்க்கு தான் அகத்தியர் படம் வைக்க சொல்வது . அகத்தியர் நாமம் ஜெபிக்க சொல்வது , எல்லாமே அவர்களை எழுந்தருள செய்து ஆசி வாங்குவதற்காக தான் . நமக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது . நாம் கோவில் கோவிலாக அவர்களை தேடி ஓடுகிறோம் , எதற்க்காக ஓட வேண்டும் . உள்ளே அவர்களை பார்க்கும் முறை தெரிந்து நம் குருஜியிடம் கற்று கொள்ளலாம் . மேலும் அகத்தியரிடம் ஜீவா அருள் நாடியில் வாக்கு வாங்கி அவரை உள்ளே எழுந்தருளுமாறு வேண்டலாம் . எப்போதும் அவரின் ஞாபகமாக இருப்பதற்காக தான் பாக்கெட்டில் வைக்கும்
படம் , காலை மாலை அவரது விக்கிரக வழிபாடு . நாம ஜெபம் போன்றவை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும் என்று உரைக்கப்படுகிறது . அகத்தியர் யாரையும் விக்ரக வழிபாடு , படம் போன்றவை வைத்து செய்யுங்கள் என்று சொல்வதில்லை . அவர் , நாம ஜெபம் ஒன்றே போதும் என்று தான் கூறுகிறார் . நாம், நமது பக்திக்கு ஏற்றார் போல வழிபாடுகளை அமைத்து கொள்ளலாம் . அவரை வழிபடுவதால் எனக்கு என்ன லாபம் , எனக்கு என்ன கிடைக்கும் என்று வியாபார புத்தியுடன் வழிபாடு செய்வது ஆகாது . எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் . எது ஒன்று கிடைத்தால் . எல்லாமே நமது வசம் ஆகுமோ , அந்த ஒன்று கிடைத்தால் போதும் . அதை விடுத்து , எனக்கு அது வேண்டும் எனக்கு இது வேண்டும் என்று கேட்பது முட்டாள்தனம் . நாம் அவரது அருளை மட்டுமே கேட்டால் , அவரே  நமக்கு எது நல்லது எது  கெட்டது , எது உகந்தது என்பதையெல்லாம் அறுந்து எதை எப்போது எப்படி கொடுக்க வேண்டுமோ, அதை அப்போது. அப்படி கொடுப்பார் . உன் அவசரத்துக்கு எல்லாம் எல்லாம் நடந்து விடாது . தொடர்ந்து பௌர்ணமி யாகங்களை வர வேண்டும் ஐயனை தொழ வேண்டும் , கடமைகள் செய்ய வேண்டும் . அவரும் மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதை அருளுவார் . வாருங்கள் . வந்து அருள் பெறுங்கள் , ஐயனை கண்டு நல்ல அருளை பெறுங்கள் . என் மனதில் பட்டதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.


 










No comments:

Post a Comment