Tuesday 9 March 2021

ஆலய பணிகள் - நடப்பு நிகழ்வுகள் , கோரிக்கைகள் 10/03/2021

ஆலய பணிகள்
1. இதுவரை தர்ம சிறகுகள் மூலம் 500 கல், தனி நபர் தானம் அளித்தது 1000 கல் , மொத்தம் 1500 கல் வாங்கப்பட்டுள்ளது , மேலும் இந்த மாதம் சுமார் 700 கல் , தர்ம சிறகுகள் மூலம் 500 கல்லும் , தனி நபர் தானம் மூலம் 200 கல்லும் வாங்கப்பட உள்ளது . ஆகா மொத்தம் 2200 கல் . மேலும் 1000 கற்கள் தேவைப்படும் . ஒரு கல் 28 ரூபாய் , 1000 கற்கள் வாங்க 28000 தேவை உள்ளது

2. ஆலய நிதியில் இருந்து 60000 செலவிடப்பட்டது , 42000 ரூபாய்க்கு போர்வெல் மோட்டார் செட் அமைக்கப்பட்டது , மேலும் ஒரு தரைத்தளம் அமைத்து , கூரைக்கு இரும்பு சீட் வாங்கி நாற்புறமும் தென்னை ஓலையால் அடைக்கப்பட்டு  , ஒரு ஷெட் அமைக்கப்பட்டு உள்ளது , இந்த ஷெட் சிமெண்ட் அடுக்கி வைத்து உபயோகப்படுத்த உள்ளது . மேலும் ஷெட் இந்த முன்புறம் 6 ஆதி அளவில் கூரை வேய்ந்து , வேலை செய்பவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு நிழலும் அமைக்கப்பட்டுள்ளது .ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது .  இந்த ஷெட் அமைக்க சுமார் 19000 உள்ளது , தென்னை ஓலை சுவர், இரும்பு சீட் கூரை , தரை தளம் , ஆள் கூலி , போன்றவை செலவிடப்பட்டுள்ளன.

3. மேலும் , TNEB லைன் எடுக்க இரண்டு இடங்களில் போஸ்ட் அமைக்கப்பட உள்ளது . இதற்கு சுமார் 35000 முதல் 40000 வரை தேவை உள்ளது . இந்த கரண்ட் தூண் போஸ்ட் அமைக்கப்பட்டால் தான் , தற்காலிக மின் இணைப்பு கொடுக்க முடியும்

4. மேலும் , நீர் சேமித்து வைக்க sintex டேங்க் தேவை உள்ளது , பெரிய சைஸ் டேங்க் சுமார் 7500 ரூபாய் வரை விலை வரும் .

5. மேலும் சிமெண்ட் வாங்க வேண்டும் , M sand  வாங்க வேண்டும் , கம்பிகள் வாங்க வேண்டும் , அஸ்திவாரம் அமைக்க வேண்டும் , வேலையாள் மேஸ்திரி கூலி கொடுக்க வேண்டும் . இதற்கும் சில லட்சங்கள் தேவை உள்ளது . மெதுவாக டொனேஷன் தானம் வாங்கி தான் வேலைகளை செய்ய முடியும் .

கையிருப்பு சுமார் 1 லட்சம் உள்ளது , எல்லாவற்றுக்கும் கை  இருப்பை காலி செய்யாமல் டொனேஷன் வாங்க முடிவிபு செய்யப்பட்டுள்ளது . விருப்பம் உள்ளவர்கள் உதவி செய்தால் , வேலைகள் தொய்வில்லாமல் தொடரும் .

நான் எப்போதும் சொல்வது போல , மற்ற இடம் போல கோவில் கட்டி அங்கே இறைவனை எழுந்தருள பண்ணவில்லை . இங்கே இறைவன் ஏற்கனவே தினமும் எழுந்தருளி மக்களிடம் நேரிடையாக பேசிய வண்ணம் உள்ளார் , அப்படி ஏற்கனவே எழுந்தருளி உள்ள இறை சக்திக்கு ஆலயம் இல்லை , எனவே ஆலயம் எழுப்பிகிறோம் . மற்ற இடங்கள் போல இந்த இடம் இல்லை . இறைவன் பேசுவார் , வரம் கொடுப்பார் , அறிவுரை கொடுப்பார் , தானங்கள் அளிக்கப்படும் , தர்மங்கள் போற்றப்படும் , சாதி மத வேற்றுமை கிடையாது


நன்றி

ஆலய பணியில்

தி. இரா . சந்தானம்
கோவை
10/03/2021


No comments:

Post a Comment