Friday 26 March 2021

ஆலய பணிகள் 27 மார்ச் 2021

 ஆலய பணிகள்


1.  ஷெட் அமைப்பது நிறைவு


2. நுழைவு வாயில் கேட் ஆரடர் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறத


3. மின் கம்பங்கள் நட்டு மின் இணைப்பு கொடுக்கும் பணி 12 நாட்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


4. சிமெண்ட் மூட்டை இன்னமும் வாங்கவில்லை வேலை ஆரம்பிக்கும் போது வாங்கப்படும் 


4. எஸ்டிமேட் - -  கட்டிட காண்ட்ராக்டர் அவர்களிடம் இன்னமும் எவ்வளவு கல் மணல் சிமெண்ட் ஆகியவை தேவைப்படும் என்று ஒரு எஸ்டிமேட் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஆலயப் பணியில் இப்போது நமது கரங்களில் ரூபாய் 2 லட்சத்து 6 ஆயிரம் உள்ளது இதில் ஆள் கூலிக்கு ஒரு பகுதியும் சிமெண்ட் மணல் வாங்குவதற்கும் செலவு செய்ய வேண்டும் எனவே எஸ்டிமேட் கணக்கு என்ன என்பதை தெரிந்து கொண்டு மேற்கொண்டு திட்டமிடுதல் நடைபெறும்


5. மின்சார இணைப்புக்காக காத்து இருக்கிறோம் மின்சார இணைப்பு வந்தால் தான் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்க முடியும் தண்ணீர் எடுத்தால் தான் கட்டிடம் கட்டுவதற்கு எளிதாக இருக்கும் மேலும் காம்பவுண்டு சுவர் கட்டிய பிறகு சின்டெக்ஸ் டேங்க் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது வெறுமனே வைத்தாள் இரவில் யாராவது சின்டெக்ஸ் தங்கை தூக்கி சென்று விட்டால் கூட தெரியாது எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் சுற்றுப்புற சுவர் அமைக்கப்பட்டு பின்னர் சின்டெக்ஸ் டேங்க் உள்ளே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது மேலும் மேலும் கீழ்நிலையில் ஒரு 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டி ஒன்று நிலத்திற்கு அடியில் அமைக்க வேண்டும் தண்ணீர் எப்போதும் அதில் இறப்பில் வைத்து மோட்டார் மூலம் மற்றொரு மேல்நிலை சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பி அதில் இருந்து உபயோகப்படுத்தும் வகையில் செய்யப்பட வேண்டும் மேலும் வாஸ்து முறைகளை அயன் ஜீவநாடியில் என்ன உரைத்துள்ளார் என்று குருஜி யுடன் கேட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்

No comments:

Post a Comment