Wednesday, 15 October 2025

சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மூட நம்பிக்கை என்றார்கள், உண்மையான காரணம் என்ன

 இஸ்ரேலிய பெண்களை கொன்று, நிர்வானப்படுத்தி, அவர்கள் மீது தங்கள் காலை போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து விட்டு சிலர் தூக்கமே வரவில்லை என்று கூறுவது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் சரித்திரத்தை குறித்து சிறிதும் அக்கறையில்லாமல் அதை புறக்கணித்தவர்கள்தான் அப்படி பதை பதைப்பார்கள். 


சரித்திரத்தில் பக்கம் பக்கமாக இந்த கயவர்களால் குலப்பெண்கள் மானபங்கப் படுத்தப்படுவதும், அவர்கள் இறந்திருந்தால் கூட அவர்களின் பிணங்களோடு உடலுறவு கொள்வதும் அநேகம். அதனால்தான் மானமிகு ராஜபுத்திர குலப்பெண்கள் ஜௌஹார் எனும் தீச்சடங்கை நடத்தி அதில் கூட்டமாக உடலை மாய்த்துக் கொண்டு, தங்களின் இறந்த உடல் கூட இந்த மாபாதகர்களுக்கு கிடைக்கப் பெறாமல் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் விஷம் அருந்தியோ, வேறு விதத்திலோ இறந்திருக்கலாம். ஆனால் இந்த கொடியவர்களுக்கு தங்கள் உடல் கிடைத்து விடக்கூடாது என்பதால்தான் தீக்குளியல்.


இதில் வேடிக்கை என்னவென்றால், திராவிடியால்கள் உட்பட பல இந்து விரோதிகள், இந்து மதத்தில் 'சதி' எனும் தீக்குளியல் நிர்பந்திக்கப்பட்டதாய் குறிப்பிடுவதுதான்.


சதி என்பது இந்து மதத்தின் ஆதாரமான வேதத்தில் இல்லை. எந்த இதிகாச, புராணங்களிலும் நிர்பந்திக்கப் படுவதும் இல்லை.  ராமாயணத்தில் தசரதனின் மறைவுக்கு பிறகு அவன் மனைவிகள் யாரும் நிர்பந்திக்கப்படவில்லை. மகாபாரதத்தில் பாண்டுவின் மரணத்திற்கு பிறகு குந்தி உடன்கட்டை ஏறவில்லை. மாறாக பாண்டுவின் மற்றொரு மனைவி மத்ரி, தன்னோடு உடலுறவு கொள்கையில் தன் கணவன் இறந்துவிட்டான், அதற்கு 'தான்' அல்லவா காரணம் என்ற குற்ற உணர்வினால் உடன்கட்டை ஏறினாள். ஆனால் எங்குமே அது பெண்களின் சுய விருப்பத்தின் பெயரால்தான் நடந்தேறியதே தவிர, சமூக நிர்பந்தத்தினால் அல்ல.


பொது ஆண்டுக்கு 300 ஆண்டுகள் முன் பாரதம் வந்த

கிரேக்க பயனி மெகஸ்தெனிஸின் (Megasthenes) விரிவான பாரத பழக்க வழக்கங்களில் 'சதி' என்பது இல்லை. பாரதத்தின் பொற்காலம் என அழைக்கப்படும் குப்தர்களின் காலத்தில் சதி என்பதெல்லாம் இல்லவே இல்லை.


ஒரு சில இடங்களில் சுய விருப்பத்தின் பெயரில்தான் அது நடந்தேறி இருக்கலாம். உதாரணத்திற்கு கணவன் மீது உயிரையே வைத்திருந்த மனைவிமார்கள் வாழ விருப்பமில்லாமல் சதி எனும் உடன்கட்டை ஏறியிருக்கலாம்.


ஆனால் 12ம் நூற்றாண்டுக்கு பிறகு, முஸ்லீம் சுல்தான்களின் ஆட்சி காலத்தில்தான் ஜௌஹார் எனும் தீக்குளியலில் பெண்கள் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகியது. அதிலும் குறிப்பாக இரண்டாம் டெரைன் போரில் பிடிபட்ட பிரித்விராஜ் சௌஹானின் மனைவி சம்யுக்தாவுக்கு நடந்தேறிய கொடூரங்கள்தான் தீயென பரவி ரஜபுத்திர பெண்கள் மத்தியில் இதை வழக்கமாகியது.  

குறிப்பாக கொடுங்கோலன் அலாவுதீன் கில்ஜியின் படை மேவார் அரண்மனைக்குள் நுழைகிறது என்பதை உணர்ந்த ராணி பத்மினியும், அவரோடு இருந்த 75000 இளம் பெண்களும் தீயிட்டு அதில் தங்களையே ஆஹுதியாக சமர்ப்பித்துக் கொண்டது பாரத சரித்திரத்தில் ஒரு மறக்க முடியாத தினம். அந்த பெருந்தியாகம் அவரின் சமகால மற்றும் பின்னால் தலைமுறை பெண்களுக்கு ஒரு புதிய வழக்கத்தையே ஏற்படுத்தி கொடுத்தது. தங்கள் உடல் கூட இந்த கொடூரர்களால் தீண்டபடக்கூடாது என பலர் இப்படி ஜௌஹாரில் இறங்கினர்.  ரஜபுத்திர சத்திரிய பெண்களிடம் இருந்து ராஜஸ்தானிய பிராமண சமூகத்திலும் வழக்கமாகி, நாடு முழுவதும் இது பரவத் தொடங்கியது.  குறிப்பாக வங்காளத்தில் இஸ்லாமிய மயமாக்கல் அதிகமாக, அங்கும் இது முக்கிய வழக்கமாகியது.  ஒரு வழியாக ராஜாராம் மோகன் ராய் எனும் பிராமணரின் மிகப்பெரும் முன்னெடுப்பால் இது முற்றிலும் அழிக்கப்பட்டது. 


இன்றும் கூட பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்து பெண்கள் தீக்குளியலில் ஈடுபடும் சம்பவங்களை கேள்விப்படுகிறோம்.


இஸ்ரேலில் ஹமாஸினால் நிர்வானப்படுத்தப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்ட அந்த பெண் உயிருடன் இருக்கையில், "உங்கள் மரணம் இப்படி நடந்தேற வேண்டுமா ? அல்லது தீக்குளியலில் இறங்குகிறீர்களா ?" என்று கேட்டிருந்தால் நிச்சயம் அவள் தீக்குளியலைதான் தேர்ந்தெடுத்து இருப்பாள். அதைத்தான் பாரதத்தின் ஆயிரக்கணக்கான பெண்களும் செய்தார்கள்.


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....

மீள் பதிவு...

No comments:

Post a Comment