Tuesday, 14 October 2025

அக்பர்

 இந்திய வரலாற்றில் மிக தந்திரமானவன் மொகலாய மன்னன் அக்பர் ஜலாலுதீன், இந்திய பாடபுத்தகத்திலும் வரலாற்றிலும் அவன் மகா அக்பர், மத நல்லிணக்கவாதி என்றெல்லாம் பல புரட்டுகள் உண்டு, காங்கிரஸ் செய்துவைத்த மாபெரும் பொய்களில் அதுவும் ஒன்று


அப்போது ஆப்கானிய வம்சமான லோடிக்கு எதிராக இந்து மன்னர்கள் நடத்திய போரில் கூலிபடையாக கொண்டுவரபட்டவன் பாபர், ஆனால் வந்தவன் சில ஒப்பந்தங்களை செய்து இங்கு காவல்காரனாக அமர்ந்தான், அமர்ந்தவன் இங்கு இனி நாமே ஆட்சி செய்தால் என்ன என சிந்தித்து பல குழப்பங்களை செய்தான், அயோத்தி குழப்பமெல்லாம் அவனால் உருவானதே


அதன்பின் சுதாரித்த இந்து மன்னர்கள் பெரும் போர் தொடுக்க அவன் ஆப்கனுக்கு சென்று அங்கே மரித்துபோனான், அவன் மகன் ஹுமாயுன் இங்கு அரசுரிமை கோரி சில காலம் ஆண்டாலம் இந்துஸ்தானம் அவனையும் விரட்டியது


இந்த ஹுமாயுனின் மகனாக வந்தவனே ஜலாலுதீன், இவனையும் இந்துஸ்தானம் ஏற்கவில்லை ஆனால் இவன் மாமன் பைரம்கான் என்பவன் பாரசீக மன்னனின் படைகளுடன் அவன் உதவியுடன் இவனை டெல்லிக்கு அழைத்து வந்தான், வழக்கம்போல் ஆப்கானிய அராபிய தொல்லைகளை சமாளிக்க ஒரு ஆப்கானியன் அவசியம் எனும் அரசியல்படி இவனை காவலாக வைத்தார்கள் இந்து மன்னர்கள்


இவனே இங்கு மொகலாயத்தை ஸ்தாபிக்க திட்டமிட்டான் அதற்கு பல காரியங்களை தந்திரமாக செய்தான், பெரிய தொகையினை ஆப்கானிய கொள்ளையர்களுக்கு கொடுத்து அவர்களை அடக்கினான் அப்படியே தொடக்கத்தில் பாரசீக சுல்தானுக்கும் கப்பம் சென்றிருக்கின்றது


இப்படி தன் ஆட்சியினை மெல்ல மெல்ல நிறுத்தியவன் இந்துக்களுடன் மோதினால் தன் அப்பன் பாட்டன் நிலை என்பதை உணர்ந்து அவர்களுடன் மணவுறவு செய்தான்


ஜோத்பூர் ராணியினை அவன் மணந்தது வரலாறு ஆனால் இன்னும் பல இந்து பெண்களை அரசிகளை திருமணம் செய்து அவர்களை மெல்ல மெல்ல தன்மதம் திருப்பினான், ஆனால் அவனோ அவனை சார்ந்தவர்களோ மதம் மாறவில்லை


இந்துக்கள் எப்போதும் தங்கள் குல பெண்களை கண்போல் காப்பார்கள், தங்கள் பெண்ணை கட்டியவனை எக்காலமும் காப்பார்கள் என்பதால் தான் மட்டுமல்ல தன் மகன்கள் உறவுகள் என எல்லோருக்கும் இந்து பெண்களை கட்டிவைத்தான் இந்த திருமணம் சுமார் 80ஐ தாண்டும்


இப்படி இந்துக்களை சுற்றி உறவு வலை பின்னிய பின்பே சுயரூபம் காட்டினான், இந்து பெண்களை பிடித்து மணந்து அப்படியே தன் அரசை ஸ்தாபிக்கலாம் என திட்டமிட்டவன் அதையே மொக்லாயம் என நிறுவினான்


இதனாலே சிலர் மொகலாயத்தை வாளால் அல்ல பாவாடையால் ஸ்தாபிக்காப்ட்ட அரசு என்பார்கள்


தனக்கு அடிபணியாதவர்களை அவன் அழித்த விதம் கொடுமையானது அப்படி மறுத்த சித்தூர் ராணியினை நோக்கி படையெடுத்தான், சித்தூர் கோட்டையினை அக்பர் எனும் ஜலாலுதீன் பிடித்தபோது அவனுக்கு அஞ்சி இறந்த இந்துபெண்கள் எண்ணிக்கை மட்டும் 27 ஆயிரம்


இன்றும் அந்த சுவடு சித்தூர் கோட்டையில் உண்டு


ஐரோப்பியர் மதம் பரப்ப அனுமதி அளித்தவன் அவனே, இந்துக்களை யார் கொத்தி சென்றால் என்ன அம்மதம் அழியட்டும் எனும் வன்மம் அவனுக்கு இருந்தது


சிறுபான்மை பெரும்பான்மை இனத்தினை ஏமாற்றும் தந்திரத்தின் பெயர் சமத்துவம்


சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தை ஏமாற்றும் சாதுர்யத்தின் பெயர் மத நல்லிணக்கம்


துருக்கி சாம்ப்ராஜ்யம், உஸ்பெக் சாம்ராஜ்யம், பாரசீக சாம்ராஜ்யத்தில் இல்லாத மத நல்லிணக்கம் மொகலாய்த்தில் மட்டும் இருந்ததன் பெயர் இந்துக்களை ஏமாற்றிய சாதுர்யம்


அவுரங்கசீப் எல்லா இந்துமன்னர்களையும் பகைத்து போர் தொடுத்தவன், கடைசியில் தன் தூணாக இருந்த ராஜபுத்திரர் மீதே பாய்ந்தவன், அவனுக்கு எந்த நல்ல குணமும் இருந்ததாக சரித்திரமே இல்லை


சிறுபான்மை சமூகம் பெரும்பான்மையினரை சம்த்துவம் சமூகநீதி என்றெல்லாம் ஏமாற்றமுடியும் என்பதை கற்றுகொடுத்தவன் அவனே, சமத்துவம் என்பது பெரும்பான்மையினரை ஏமாற்றும் வழி என போதித்தவன் அவனே


அவனிடமிருந்தே பின்னாளில் பலர் பல வித்தையினை கற்றுகொண்டார்கள்


இந்த ஜலாலுதீன் விதைத்த விதைதான் அவுரங்கசீப் காலத்தில் ராஜபுத்திர மன்னர்கள் அவனுக்கு அக்பர் கால மண உறவுக்காக கட்டுபடும் சூழ்லை கொடுத்தது


ஜஸ்வந்த்சிங், மான்சிங், ஜெய்சிங் என பெரும் வீரர்களெல்லாம் இந்த மணவுறவில் தங்கள் குல பெண்களை கொடுத்த குடும்பம் என கைகள் கட்டபட்டு அவுரங்கசீப் சொன்னபடி ஆடினார்கள்


இதனாலேதான் வாள்முனையில் இந்துஸ்தானை இஸ்லாமிய தேசமாக மாற்ற முனைந்தான் அவுரங்கசீப், அக்பரின் தந்திரம் அவனின் மூன்றாம் தலைமுறையில் சரியாக பலித்தது அப்போது எல்லா இந்து அரசகுடும்பமும் மொகலாயரிடம் மண உறவில் சிக்கியிருந்தது


அவனை எதிர்க்க எந்த இந்து அரசனும் தயாரில்லை எல்லா அரசகுடும்பமும் அவர்களோடு சம்பந்தம் செய்த வகையில் கைகள் கட்டபட்டிருந்தது


அங்கேதான் எந்த அரச குடும்பத்தையும் சாராத சிவாஜி எழுந்து இந்து ராஜ்ஜியம் அமைத்தான் இன்னொரு பக்கம் சீக்கியர்கள் எழுந்து அடித்தார்கள்


இந்துஸ்தானை மாபெரும் இக்கட்டில் மிக தந்திரமாக வீழ்த்தியவன் அக்பர், அவன் வாழும் காலத்தில் செய்த தந்திரமெல்லாம் பின்னாளில் மிக பயங்கரமாக தேசத்தை அச்சுறுத்தியது, எனினும் தர்மம் இந்நாட்டை மீட்டது


சமத்துவம், மதசார்பின்மை, எம்மதமும் சம்மதம் என்றெல்லாம் சிறுபான்மை சமூகம் ஏமாற்றும் என்பதையும், அவர்களிடம் சிந்தனையின்றி ஏமார்ந்தால் என்ன நடக்கும் என்பதையும் வரலாற்றில் சொல்வது அக்பரின் வாழ்வு


அவனிடமிருந்தே எப்படி பாடம்படிக்க வேண்டும் எப்படி சமத்துவம் மதநல்லிணக்கம் என ஏமாற கூடாது என பாடம்படிக்க வேண்டுமோ அதை படிக்கவிடாமல், மிக வஞ்சகமாக அவனிடம் இருந்து மதநல்லிணக்கம், சமத்துவம் என மோசடிகளை கற்க வைத்தது பிரிட்டிசாரும் காங்கிரசும் எழுதி வைத்த வரலாறு


அதை இனி ஒழித்துவிட்டு உண்மையான வரலாற்றினை இத்தலைமுறைக்கு கொடுத்தல் நன்று வடக்கே பல மாகாணங்களில் அதனை செய்கின்றார்கள் , பிரிட்டிஷ் காங்கிரஸின் வாரிசான திராவிடம் அதை இங்கே செய்யாது பின்னர் ஒருநாள் எல்லாம் மாறும்


இன்று அக்பரின் பிறந்தநாள், மாபெரும் இன்னலை இத்தேசத்துக்கு கொடுத்தவன் அவன், அந்நாளில் சம்த்துவம் மதநல்லிணக்கம் என எக்காலமும் ஏமாற கூடாது, தான் மதம்மாறாமல் இந்துக்களை மதம்மாற்றி அப்படியே பலவீனமாக்கி பெரும் இக்கட்டில் தள்ளிய அவ்னிடமிருந்து பெரும் பாடம் படித்து, இனி அப்படி ஒரு காலத்தை எதிர்கொள்ளமாட்டோம் என உறுதி ஏற்கின்றது தேசம் 


 பிரம்ம ரிஷியார்

No comments:

Post a Comment