Wednesday, 15 October 2025

மோகினி முத்திரை

 மோகினி முத்திரை:

              யோக முத்திரைகள் வரிசையில் "மோகினி முத்திரை"  பற்றி பார்ப்போம். பிரம்ம முகூர்த்தத்தில் இந்த முத்திரைகளை ஒவ்வொன்றையும் தலா ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.


"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து

அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி

ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி

உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி

காமப்பால் கானற்பால் சித்தியாகும்

கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்

வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்

மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

       - தன்வந்திரி வைத்தியம் 1000 


மேலே படத்தில் உள்ளது மோகினி முத்திரை, இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து "ஓம்" என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும், பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும் சித்தியாகும் என்கிறார்.

         

          - முத்திரைகள் ரகசிய குறிப்புகளில் இருந்து.....





No comments:

Post a Comment