ராசி வேதை
ஸ்கந்தா ஜோதிடநிலையம் 9442809461 திருவண்ணாமலை
-----------------
வேதை என்றால் பகை என்று பொருள். ராசிகளை பஞ்சபூத தத்துவ ரீதியாக நெருப்பு,நிலம், காற்று , நீர் என வகைப்படுத்தியுள்ளனர்.
இதில் நெருப்பும்,நீரும் பரஸ்பர பகை, நிலமும் ,காற்றும் பரஸ்பர பகை.
இரண்டு ராசிகள் ஒன்றுக்கொன்று 6/8 ஆக அமைந்தால் அதை ராசி வேதை எனக்குறிப்பிடுவர். ஆயினும் அவ்விரண்டு ராசி தத்துவங்களும்,பரஸ்பர பகை தத்துவங்களாக அமைந்தால் மட்டுமே ராசி வேதை ஏற்படும், அவ்வாறு அமையாவிடில் வேதை இல்லை.
உதாரணமாக மேசத்திற்கு 6ஆம் வீடு கன்னி , மேசம்- நெருப்பு, கன்னி- நிலம். நெருப்புக்கும், நிலத்திற்கும் பகை இல்லை எனவே மேசத்திற்கும், கன்னிக்கும் ராசி வேதை இல்லை.
மேசத்திற்கு 8 ஆம் வீடு விருச்சிகம் , மேசம்- நெருப்பு, விருச்சிகம்-நீர். நெருப்புக்கும், நீருக்கும் பரஸ்பர பகை எனவே மேசத்திற்கும், விருச்சிகத்திற்கும் ராசி வேதை உண்டு.
அடுத்து ரிசபத்திற்கு 6ஆம் வீடு துலாம், ரிசபம் -நிலம்,துலாம்-காற்று, நிலத்திற்கும் , காற்றுக்கும் பரஸ்பர பகை ,எனவே ரிசபத்திற்கும் ,துலாம் ராசிக்கும் ராசி வேதை உண்டு.
ரிசபத்திற்கு 8ஆம் வீடு தனுசு. ரிசபம் -நிலம்,தனுசு-நெருப்பு, நெருப்புக்கும், நிலத்திற்கும் பகை இல்லை எனவே ரிசபத்திற்கும்,தனுசு ராசிக்கும் ராசி வேதை இல்லை.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் ஒற்றைப்படை நெருப்பு ராசிகளுக்கு 8 வதாக வரும் இரட்டைப்படை நீர் ராசி வேதையாக அமையும், 6வதாக வரும் இரட்டைப்படை நில ராசி வேதையாக அமையாது.
ஒற்றைப்படைகாற்று ராசிகளுக்கு 8 வதாக வரும் இரட்டைப்படை நில ராசி வேதையாக அமையும், 6 வதாக வரும் இரட்டைப்படை நீர் ராசி வேதையாக அமையாது.
இரட்டைப்படை நில ராசிகளுக்கு 6 வதாக வரும் ஒற்றைப்படை காற்று ராசி வேதையாக அமையும், 8 வதாக வரும் ஒற்றைப்படை நெருப்பு ராசி வேதையாக அமையாது.
இரட்டைப்படை நீர் ராசிகளுக்கு 6 வதாக வரும் ஒற்றைப்படை நெருப்பு ராசி வேதையாக அமையும், 8 வதாக வரும் ஒற்றைப்படை காற்று ராசி வேதையாக அமையாது.
அதாவது
நில ராசிக்கும், நீர் ராசிக்கும் 6 வது ராசி வேதை
நெறுப்பு ராசிக்கும், காற்று ராசிக்கும் 8வது ராசி வேதை

No comments:
Post a Comment