Friday, 2 March 2018

அகத்தியர் வாக்கு - பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை

*அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு*
☘☘☘☘☘☘☘☘
*செடி,கொடிகளைக் கொன்றுதான் நாங்கள் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?*

*மனிதனாக பிறந்து விட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு, இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் ஐம்புலனை சரியாக கட்டுப்படுத்தி. யோக நிஷ்டையில் அமர்ந்து, யோக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும். காட்டிலிருந்தும், தன்னை சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும், சூரிய, சந்திர ஒளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் கூட அந்தந்த பொருளின், புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல், தன் உடல் சோரா வண்ணம், தேவையான சத்துக்களை கிரஹிக்க முடியும்.  இதற்கு “பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை"  என்று பெயர்.  இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாக பின்பற்ற முடியாது.*

*ஓம் அகஸ்திய பகவான் திருவடிகள் போற்றி*

🙏🏽🦉

No comments:

Post a Comment