Friday 2 March 2018

அகத்தியர் பொது நாடி வாக்கு - 01/03/2018



உலோபமுத்ரா தேவி சமேத அகத்திய சித்தர் துணை

கோவை மேட்டுப்பாளையத்திற்கும்  - அன்னூருக்கும் இடையில் அமைந்துள்ள பொகளூர் கிராமத்தில் திரு இறைசித்தர் அவர்களால் ஸ்தாபிக்கபிட்ட ஓம் ஸ்ரீ அகத்திய சித்தர் பீடம் அமைந்து உள்ளது. அங்கே, இறை அருளால் அகத்தியரின் சீவ நாடி ஓலை சுவடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கே நிதமும் அகத்தியர் சீவ நாடியில் தோன்றி தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு பல வகையான பரிகார முறைகளை கூறி வாழ்வில் எல்லா வளமும் ஏற்பட வழி காட்டியபடி உள்ளார். அங்கே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பொது வாக்கு பலன்களை அகத்தியர் உரைத்தபடியே உள்ளார்.

அவ்வாறு அகத்தியர் உரைத்த பொது வாக்கு கிழே கொடுக்கப்பட்டு உள்ளது. இன்று உலகில் பல மானிடர்கள் கடவுளை பற்றி பலவாறாக பொது இடங்களில் கூட்டம் போட்டு, சத் சங்கம் நடத்தி, சொற்ப்பொழிவு ஆற்றி, பல கருத்துகளை முன் வைக்கின்றனர். மேலும் பலர், பல புத்தகங்களை அச்சிட்டு, பணம் வாங்கி கொண்டு விற்பனை செய்கின்றனர். ஆனால் கண்டவர் விண்டில்லை, விண்டவர் கண்டில்லை என்பதற்கு ஏற்ப, மானிடர்கள் கூறும் பலவும் பிறவி குருடன் யானையை வர்ணித்தது போல ஆகும்.

கிழே உள்ள அருள் வாக்கு நேரிடையாக இறை உலகத்தில் மகா சக்தியின் கட்டளைக்கேற்ப பணியாற்றிக்கொண்டு இருக்கும் மகா முனி, சித்தர்கள் தலைவர் அகத்திய மாமுனிவர் நேரிடையாக சீவ நாடி மூலம் மக்களுக்கு உரைத்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த முன்னுரையை கொடுத்து உள்ளேன்.

அகத்தியர் வாக்கு :


விநாயகரை பற்றி

முழுமுதற்க்கடவுளான மண்ணுலகம் விண்ணுலகம் காக்கும் கருணைக்கடல் அவர் திண்ணமாய் உரைப்பார் மாந்தர்கட்கு ஞானம் பெற நவசக்தி துணை வேண்டும். நாள் பலதாய் தோன்றி மக்கட்கு வினைகளை போக்க கட்டளையிட்டு யாங்களை அனுப்பியவர் என் அப்பன்.

அண்டங்களை காக்கும் ஞான பண்டிதனை பற்றி உரைக்கிறேன் கேள் மகனே.

நவ சக்தி எனும்ஆதாரத்தின் முதல் பொருளாய் தோன்றி நாதமாய் நின்ற இவ்வண்டத்தை காக்கும் பொறுப்பேற்றார்.

அண்டங்களில் உயிர்களை நவசக்தி உருபெற செய்து அதனை காக்கும் பொருட்டு பல வடிவங்களில் வந்து ஞானம் சொன்னார்.

ஞானத்தின் வடிவமாக நான்முகனார் தோற்றுவிக்கப்பட்டார்.

ஞானம் புகட்ட ஹரி தோற்றுவிக்கப்பட்டார்.

ஞானத்தின் கரையாக எம்பெருமான் தோற்றுவிக்கப்பட்டார்.

அனைத்தும் முழு முதற்ப்பெருமானே.


பறவைகள் பற்றி :


பரப்ப்ரம்மத்தின் வடிவமே அனைத்தும்.

பறவைகளின் தோற்றம் பெற, ஒரு ஆன்மா, தன் கர்மாவின் நிலையில் பெரும் அதர்ம நிலையில் ஈடுபட்டிருக்கும்.

ஒரு உயிரின் நிலை மற்றும் அதன் உண்மை நிலை அறியாமல் அதனை மரணிக்க செய்து அதில் ஆனந்தம் பெற்று வந்தவர்களாய் இருப்பர்.

அதனால் ஞானம் இல்லாத உயிராய் தோன்றி தன் கர்ம வினை கழிக்கின்றது.


சித்தர்களின் ஞானப்பாடல் பற்றி

சித்தராய் சித்தரெல்லாம் பொதிந்து வைத்தனர், நூல் பலதாய்.
நூலின் உண்மை நிலைஅறியாமல், அதனை கடைப்பிடித்து என்ன பயன்.
பயன் பெறவே கற்று கேட்டு தெளிந்து அறிந்து பயன்படுத்தினால் கிடைக்கும் ஞான மார்க்கம்.



வள்ளலார் பற்றி :

திக்கெட்டு புது மார்கம் படைக்க தோன்றி
மகட்கு ஞான மார்கத்தை காட்டி
ஜீவனின் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்தினார்
அவர் காட்டிய மார்கம் ஜோதி மார்கம்
ஜோதியின் வடிவமே ஞானத்தின் வடிவம் என உணர்த்தி
இன்று மாந்தர்க்கு அரூபமாய் அருள் தந்து
ஞானம் பெற வழி காட்டி வருகிறார்
************************************************************

ஜோதி மார்கம் பற்றி

வள்ளல் பெருமான் உரைத்தார் ஜோதி
பார் என்று எண்ணி ஜோதியை வெளியில் கண்டு
வீணாய் போனார் பலர்
உண்மையான ஜோதியை உனக்குள் ஏற்றி
அதனை பார்த்து வரவே அவர் அறிவுறுத்தினார்


ஜோதியை ஏற்றுவது எப்படி


உனக்குள் ஜோதியை ஏற்ற மனசஞ்சலங்களை நீக்கி
நிலையான மனதோடு, உன் அறியாமை என்னும் இருட்டின்
நிலை போக்க, உனக்குள் ஜோதி ஏற்ற வேண்டும்


ஜோதியை எவ்வாறு காண்பது, அது எப்படி இருக்கும்


மனம் நிலை பெற்றால் ஜோதி அங்கு நிலை பெரும்
நிலை பெற்ற ஜோதியை கண்டால் அது ஆனந்தமான
அமைதி நிலையை காட்டும்
அச்சோதி இருட்டில் வெளிச்சம் தரும்
சிறு ஒளியாய் காட்சி தரும்
அந்நேரம் நம் மனம் அந்த ஒளியின் புள்ளியில் குவியும்
அந்த இடமே ஆனந்தமான அமைதி தரும் இடம்



அன்னை பற்றி

அருள் அன்னை திருவண்ணாமலையில் தோன்றி
தனது பயணத்தை தொடங்கி
தனது அருபத்தெட்டாம் வயதில் ஞானம் பெற்று நிலை பெற்றார்
நிலையாய் நின்று, காலம் கடந்து தன் கடமையை மாந்தர்க்கு நல்ல மார்கம் காட்ட வெளிப்பட்டார்.
காலம் உருவாகி வருகின்றது. அவர் வெளிப்பட்ட இடத்தில் பெரியதொரு ஆலயம் அமையப்பெற்று, இன்னும் பல சிததர்களுடன் இனைந்து அவ்விடத்தில் பல அதிசியங்களை நிகழ்த்த இருக்கிறார்.
வரும் காலம் தனிலே பெரும் சக்தி பீடமாய் அது திகழும்


சித்தி என்றால் என்ன


சித்தி சித்தி என்று சிதறடித்து, காலம் எல்லாம்
முத்தி முத்தி என்று மூழ்கி போன காலம் எல்லாம்
கண்டவர் கண்டிலர் உண்மை நிலையை
சித்தி பெற சிவமையம் பெற்று சிவத்தின் அருளை பெறுதல்.
சித்தி என்பது சித்தம் ஆதியாகி இறைவனின் அருளை பெற்று
அவன் சக்தியை கொண்டு அவன் ஆசியை கொண்டு
அவன் பணிகளை இவ்வுலகில் ஆற்றுவதே சித்தி.

முக்தி என்றால் என்ன

முக்தியில் மனதை நிறுத்த எண்ணுபவர்கள்
தங்கள் மன ஒரு நிலைப்பாட்டில் நின்று
முழுமையாய் நாம் யார் என்று உணர்ந்து
நம் பணி என்னவென்று உணர்ந்து
இறைவன் பிம்பமாய் விளங்கும்
அனைத்து உயிர்களின் மீது அன்பு செலுத்தி
அந்த அன்பில் இறைவனைக்கண்டு ஆனந்தம் பெற்று
அந்த இறைவனாகவே மாறி விடுவர்.
இறையோடு ஒன்றர கலந்து  விடுவர்.
அதுவே முக்தி.


அகத்தியர் கூறிய அறிவுரை


எண்ணத்தால் எண்ணியது எல்லாம்
எண்ணியவாறே ஈடேறி
எண்ணத்தால் அழிந்து போவதற்கா
கிண்ணத்தில் யாம் உள்ளோம், குடமாய் வந்து பெற்றுக்கொள்ளடா


எண்ணியோருக்கு எண்ணியதை அளிக்க
யாம் சித்தமாய் உள்ளோம்.
எண்ணியது கிட்டினும் கின்னியது எண்ணியது ஆகும்
எண்ணியதை கேட்காதே, எண்ணத்தை குறைக்கக் கேள்


எண்ணியதை குறைத்துக் கொள்ள
இயம்பிடுவோம் கேட்டிரே
கிண்ணத்தில் குருவாய் நின்ற எமை வேண்டி வாசத்தை திருப்பு எமை நோக்கி
வந்தருளுவேன் பைரவராய் உமை காக்க


எடுத்துரைத்தேன் பலவிதமாய் இருப்பினும்
புரியா மாந்தர்காள் செப்பிடுவேன் மறுபடியும்
ஜெகத்திலே மாயை ஒன்று தான்
உன் எண்ணமே உனக்கு மாயை
அறுக்கவே ஒரு நிலைபாட்டில் நில்லு
எமை நோக்கு ஓடோடி வந்திடுவேன் உனை காக்க


காத்திடுவோம் காத்திடுவோம் எமக்கும்
சில வரைமுறைகள் உண்டு
உச்சத்தில் பக்தியில் நில்லு
நிச்சயம் யாம் காத்திடுவோம்


காரணமாய் நடக்கிறது அனைத்தும்
காத்திரு என் மகனே
காலம் கனிந்த பின்'
காரணமாய் யாம் வருவோம்


பாபநாசத்தில் அன்னை சிலை உடைத்தது பற்றி

அன்னையவள் இருக்கும் இடமே
எண்ணியோரின் எண்ணத்தாலே திண்ணமாய் அழிந்து போனார்
அவளே அழித்தாள் அவரின் எண்ணப்படியே
நல்லா காலமது வந்தது
அவளே சீர் பெறுவாள்
நிலைப்பாள், காப்பாள், தருவாள், பெறுவாள் அன்பை
கவலை வேண்டாம், அவளே ஜெனிப்பாள்

மண்ணிற் மறைந்ததெல்லாம்
மதியோடு வெளியுவந்து
கண்ணனோடு ராதை என
செல்வமேவந்து சேர
கவலை எதுவும் வேண்டா வேண்டா
காலமது கரைந்து விட்டது
நற்காலம் தோன்றும்
நேரம் மண்ணாய் மாறும் காலம்
மதியோடு வாழ்ந்து காட்டு
திண்ணமாய் தினமொரு பூசைதனை
நீயும் செய்யு
உன் அன்னை என்னை
தஞ்சம் அடையும் காலம்
மதியோடு செயல்படு
வெற்றி வெற்றி.













No comments:

Post a Comment