Sunday 4 September 2022

*கர்ணனின் தானம்*

 .          *கர்ணனின் தானம்*

*எல்லோருக்கும் தானம் கொடுத்து நிறைய புண்ணியத்தை சம்பாதித்தான் கர்ணன் !!!  கண்ணனாலும், கர்ணனின் உயிரைப் பறிக்க முடியவில்லை.*

      *ஒரு மனிதனிடம் இறைவனே இங்கு பிக்‌ஷை கேட்கிறார் !!! அப்படி என்ன இருந்து கர்ணனிடம்? அதுவே அவன் செய்த புண்ணியம்.*

       *ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஒரு அந்தனனாக வேடமிட்டு கர்ணனிடம் வந்து அவனது புண்ணியத்தை யாசகமாக கேட்டான் !!!*

      *கொடுக்கும் குணத்தையே  பழக்கமாக  கொண்டிருந்த கர்ணன், சற்றும் யோசிக்காமல் புண்ணியங்கள் அனைத்தையும் உடனே தானமாக கொடுத்து விட்டான் !!! புண்ணியங்கள் அனைத்தையும் தானமாக கொடுத்து விட்டான் !!!*

      *புண்ணியம் வேண்டும் என்பதற்காகத்தான் நாம் எல்லோருமே தானம் செய்கின்றோம் !!!  ஆனால் அந்த புண்ணியத்தையே தானம் கேட்டால் யார்தான் தருவார்கள்?*

      *இருப்பினும் அனைத்து புண்ணியங்களையுமே தானம் செய்வதற்கு கர்ணன் எந்தளவுக்கு நல்லவனாக இருக்க வேண்டும்? அல்லவா ?*

      *நமக்கே கர்ணனை நினைத்தால் பொறாமையாக உள்ளதல்லவா ? கவலைப் படாதீர்கள் !!!  இது சாத்வீக பொறாமை தான் !!!  அதாவது, சிலரது நற்குணங்களைக் கண்டு பொறாமைப் பட்டால், அதன்விளைவாக நமக்கும் அந்த நற்குணங்கள் வந்துசேருமாம் !!!*


      *எந்த செயலிலும் எதிர்பார்ப்பு இருக்க கூடாதென கர்மயோகம் சொல்லுகின்றது. அதிலும் தானம் செய்கின்ற செயலில் நிச்சயமாக எதிர்பார்ப்பு இருக்கவே கூடாது.*

      *ஏனெனில், எதிர்பார்ப்போடு செய்யும் தானம் தான் வியாபாரம் !!!  எதிர்பார்ப்பின்றி செய்வது தான் உண்மையான தானம்.*

      *புகழுக்காகவோ, பகட்டுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ, கர்ணன் தானம் செய்யவில்லை !!!  கர்ணனின் தானம் எதிர்பார்ப்பற்றது.*

      *கொடுப்பதால் இழப்பு ஏற்படும் என்றுதான் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், அதிலும் ஒரு இன்பம் கிடைக்கும் என்று கருணை உள்ளம் கொண்டவருக்கே புரியும்.*

      *ஏழை எளியவர்களுக்கு எதிர்பார்ப்புமின்றி மனமுவந்து கொடுத்துப் பாருங்கள்.  அப்போது அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷம் பிறப்பதை உணர்வீர்கள்.    அதைக் காணும்போது,  நமக்கு ஒரு இன்பம் தோன்றுவதையும் உணர்வீர்கள். அந்த இன்பத்தை ருசித்துப் பழகிவிட்டால் தானம் செய்வதை நிறுத்தவே மாட்டீர்கள்.*


      *கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை ருசித்து பழகிய கர்ணன் தன்னிடமுள்ள  புண்ணியத்தையும்  தானமாக தந்து புகழின் உச்சிக்கு சென்று விட்டான்.*

      *பற்றற்ற மனம் தான் தானம் செய்யும். அதற்கு, கருணை உள்ளமும் வேண்டும். இரண்டும் இருந்ததால் தான் எதிர்பார்ப்பின்றி தானம் செய்யமுடியும். ஆனால், புண்ணியத்தையும் தானம் செய்ய முடியுமென கர்ணன் நிரூபித்தது நற்குணத்தின் உச்சமாகும்.*

      *எனவே நாம் அனைவரும் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கவே பிறருக்கு இயன்றவரை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.*

      *கொடுக்க மனமில்லாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். அவர்களுக்கு சொல்லுகின்றேன்.  கொடுக்காதவர்கள் கொடுப்பவர்களை கெடுக்காதீர்கள் !!!*

      *ஆம் !!! எனதருமை ஆன்மீக உடன்பிறப்புக்களே !!! எங்கு பார்த்தாலும் சகுனிகள் நிறைந்துள்ள இந்த கலிகாலத்தில், நல்லவர்களாக வாழ்வது மிகவும் கடினம் என சலித்துக் கொள்ளாதீர்கள்.*

      *நன்றாக சிந்தித்துப் பாருங்கள் !!!

நமக்கு நாமே நன்மை செய்து கொள்வதற்காகத்தான் நாம் நல்லவர்களாக இருக்கின்றோம்.*

      *எனவே, நல்லவனாக வாழ்ந்து நற்கதியை அடைந்து உனக்கு நீயே நன்மை செய்து கொள் மானிடா உனக்கு நீயே நன்மை செய்து கொள்.*

      *முன்பின் அறியாத ஜீவன்கள் முதல் உன் குடும்ப உருப்பினர்கள் வரை எல்லோருக்குமே உதவி செய்து "உளமகிழ்ந்து" வாழ கற்றுக் கொள்.  இந்த நிலையான மகிழ்ச்சியை மனதில் நிலைநிறுத்துவதே, உண்மையான நிரந்தர பேரின்பம் !!!*

      *எல்லா ஏழைகளுக்கும் கடவுள் நேரில் வந்து உதவ இயலாத காரணத்தால் தான்,  கடவுள் உன்னையும் படைத்து, உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நீ உணர வைத்தார் !!! எதற்காக ? கொடுப்பதின் மூலம், அவர்களுக்கு, நீ இறைவனாக காட்சி தர வேண்டும், என்பதற்காக !!!*

      *இல்லாதவர்களுக்கு உணவளித்து பாருங்கள்.  உணவளிக்கும் உங்களை இறைவனாகவேக் காண்பார்கள் !!!*

      *அன்னதானமும் மிகச்சிறந்த ஆன்மீகம். இதனால்தான் பல முக்கிய கோவில்களில் எல்லாம்  அன்னதானம் என்ற பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.*

      *எனவே, உளமகிழ்ந்து" வாழவும்,  ஆனந்தம் என்கிற உண்மையான மகிழ்ச்சி என அத்தனையும் நிலைக்க வேண்டுமா?*

    *1. நல்லவனாக இரு !!!*

    *2. அதிலிருந்து, உண்மையான பக்தி பிறக்கும் !!!*

    *3. இவ்வகையான நற்குணத்திலிருந்து உருவான உண்மையான பக்தி தான்  ஆன்மீகமாக வளரும்.*

    *4. இத்தகைய ஆன்மீகிகளுக்கு தான், ஆத்மஞானத்தை தேடத் தூண்டும் !!!இந்த மார்கமே, உன்னை இறைவனிடம் இட்டுச் செல்லும் இறைத்தேடல் எனப்படுவது !!!*

     *5. ஜீவன் உன்னுடலில் இருக்கும் போதே, உன்னில் இறைவனைக் காணலாம்.இதுவே, ஆத்மதரிசனம் அல்லது ஜீவன்முக்தி*

      *6. ஆத்மஞானத்தை பிறருக்கு தருவது ஞானதானம் !!! அதுவும் மிகச்சிறந்த தானமாகும்*

      *7. ஆத்மஞானம் பெறுவதே பிறவிப்பயன் !!! பிறருக்கு,  இத்தகைய பிறவிப் பயனைப் பெற செய்வது அனைத்திலும் மேலான தானம் !!!*

      *குறிப்பு : L K G Seat.க்கு = லட்சங்கள் + Medical Seat.க்கும் மேற்படிப்புக்கும்  = கோடிகள் என விஞ்ஞானத்தில் நம் பிள்ளைகளை முன்னேற்றுகிறோம் !!! எதற்காக?  பணத்தை ஈட்டுவதற்காக மட்டுமே அல்லவா?*

      *ஆனந்தமாக வாழ்வதற்கு பணம் தேவை இல்லை + மனம்தான் தேவை என்று எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம், நாம்? அந்த பணமோ, ஆசைகளையும் கவலைகளையும் பெருக்கவே பயன் படுகிறது !!!*

      *அதேசமயம், நாம் சாகும்வரை உருவாகும் அனைத்து கவலைகளில் இருந்து விடுபடவும், இறைவனை  புரிந்து கொள்ளவும், இறைவனை உணர்ந்து கொள்ளவும், இறைவனுக்குள் கலந்துவிடவும், ... இறுதியில், இறைவனாகவே ஆகிவிடுகின்ற மெஞ்ஞானத்திற்கு எதுவுமே தடையாக இருக்க கூடாது !!!*

      *பணப்பற்று, பொருட்பற்று, உறவுப்பற்று, புகழ்ப் பற்று, பதவிப்பற்று கௌரவப்பற்றையும்  குறைத்துக் கொள்ள முடியாதவனுக்கு கடவுளாலும் ஆத்மஞானம் கொடுக்க முடியாது !!!*

      *எல்லாவற்றிலும் பற்றுதலோடும், அதனால் உருவாகும் எண்ணற்ற கவலைகளோடும், சாகும்வரை பணத்தை தேடி ஓடிஓடி வாழ்கின்ற அஞ்ஞானிகளுக்கு மனித வாழ்க்கையே  நரக தண்டனையாகும்.*

      *நாம் வாழ்கின்ற இந்த அஞ்ஞான வாழ்க்கையே, ஒரு தண்டனை என்பதை புரிந்து கொள்ளாதவர்களை நாம் எவ்வாறு காப்பாற்றுவது?

      *"மனம் போன போக்கில் நம் மனம் செல்வதே கவலைகளைத் தேடிக் கொள்வதற்காகத்தான்",* என்பது நம் மனமே எவ்வாறு ஒப்புக்கொள்ளும்? இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது !!!

      *ஆத்ம ஞானம் பெற்றுக் கொள்வதற்கு முன் உங்களுக்கு, ஆயிரம் விதமான தடைகள் வருமாம், ... என புரிந்து கொள்ளுங்கள் !!!*

     

No comments:

Post a Comment