Saturday 16 October 2021

விஷ்ணு விற்கு தரித்திரம் உண்டோ ?

 விஷ்ணு விற்கு தரித்திரம் உண்டோ ?


முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்


பக்தன், பகவானுக்கு தாரித்ரியம் உண்டு என்று அடித்துச் சொன்னதும் அவன் விதண்டாவாதம் பண்ணவில்லை.


' எங்கே எனக்கு ஏது தாரித்ரியம் ..' என்று  கேட்டான்.


' உன்னை மாதிரி இன்னொருவரை காட்டு ..' என்கிறான்  பக்தன்.


பகவான் பதிலே சொல்லவில்லை. அவன் வாயை மூடிக் கொண்டிருப்பவர் பார்த்ததும் பக்தனுக்கு தைரியம் வந்து விட்டது.


' இந்த விஷயத்தில்  - உனக்கு சமானமாவன் என்கிற விஷயத்தில் - தாரித்ரியம் நிறைய இருக்கே' என்றார்.


' உண்டு உண்டு ' என்று  ஒப்புக் கொண்டான் பகவான். ஏனென்றால்  தன்னைப் போல் ஒருவனை அவனால் காட்ட முடியவில்லை அல்லவா...!


" உனக்கு ஒப்பார் தான் இல்லை. மிக்காரும் உண்டென்றால் காட்டு." இது பக்தனின் அடுத்த  கேள்வி. மிக்காரும் இல்லை என்பதே பதிலானதாலே பகவானிடத்தாலே பதிலும் இல்லை.


' இப்போது நான் அர்ச்சனை பண்ணப் போகிறேன். வாயை மூடிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்' என்றார் பக்தர்.


பரமாத்மாவுக்கு ஒரே சந்தோஷம். அவனுடைய சர்வேச்வரத்வத்தை அர்ச்சனை அல்லவா  தெரிவிக்கும்படியான அர்ச்சனை அல்லவா அது..' ஓம் ஸமாப்யதிக தரித்ராய நம: ' என்பது. விஷ்ணு என்ற  பெயரினால் சொல்லப்படுகிறது குணங்களில் ஒன்று  இந்த சர்வேச்வரதவம்.


விஷ்ணு புராணத்தில் பராசர மஹரிஷியின் பார்த்து மைத்ரேயன் ஒரு கேள்வி கேட்கிறார்..


' இந்த உலகம் எங்கிருந்து  வந்தது ?


எதனால் ரக்ஷிக்கப் படுகிறது ?


இதற்க்கெல்லாம் காரணம் யார் ?'


இதற்கு ஒரு ஸ்லோகத்தில் பராசரன் பதிலளிக்க..' ஹே மைத்ரேயா.. ஒவ்வொன்றாகச் சொல்லி இதற்க்கெல்லாம் காரணம் யார் என்று  கேட்டாயே. அத்தனையும் விஷ்ணுவிடமிருந்து தோன்றின. இவற்றையெல்லாம் அவன் எங்கிருந்து கொண்டு வந்து உண்டாக்கவில்லை. அவனுக்குள்ளிருந்தேதான் யாவும் தோன்றின. ஜகத்துக்கே காரணமானவன்  விஷ்ணுதான் '... சர்வக்ஞன் எம்பெருமானே விஷ்ணு சப்தத்தினாலே சொல்லப் படுகிறான் .


அடுத்த குணம் ஸ்ரீயபதித்வம்... இதையும் விஷ்ணு புராணத்திலிருந்துதான் ஆசார்யர்கள்  எடுத்து  காட்டுகிறார்கள்.


மஹாலக்ஷ்மிக்கு அவன் பதி - இப்படி சொல்லும்போது எல்லோருக்கும் ஒரு சந்தேகம். ' சர்வ வியாபியாய்' எல்லா பதார்த்தங்களிலேயும் பகவான் இருக்கிறான் என்கிறதே சாஸ்திரம்.  அவனுடைய தர்மபத்னியான மஹாலக்ஷ்மியோ வைகுண்டத்தில் உட்கார்ந்திருக்கிறாள். இவன் எல்லாம் பதார்த்தங்களிலேயும்  இருக்கிறான்.. இது எப்படி? அவள் வைகுண்டத்தில்  தனியாக இருப்பதனால், எப்போது அவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா அப்போது போய் பார்த்து விட்டு வருகிறானோ...? 

எனத் தோன்றுகிறது அல்லவா?


மைத்ரேயருக்கு பராசர் விளக்கம் தருகிறார்..

No comments:

Post a Comment