Thursday 17 December 2020

இறைவன் செயல் - உண்மை சம்பவம்

 *"நமச்சிவாய வாழ்க !*

    *நாதன் தாள் வாழ்க"*

*--------------------------------*


*சீர்மிகு நமது* *சித்தாந்த*

*மன்றம் மற்றும் அறக்கட்டளை சிவனடியார்கள் அனைவருக்கும் வணக்கம்!*


*நமது மன்ற உறுப்பினர்,* *மற்றும் நமது மன்ற அறக்கட்டளை இயக்குநர்,*

 *முன்னாள் படைவீரர்,*

*L I C. நிறுவனத்தில் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றவருமான சிவத்திரு G.கோபாலகிருஷ்ணன்* அவர்கள் சமீபத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு *மரணத்தின் வாயில்வரை சென்று மீண்டு வந்துள்ளார்.* அவரோடு பேசியபோது தெரிவித்த  அவர் பெற்ற அனுபவம் *மெய்சிலிர்க்க வைத்தது!* *உள்ளத்தை உருக்கியது!!* அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்!!


*எழுபத்து நான்கு வயது நிரம்பிய பெரியவர் திரு.G. கோபாலகிருஷ்ணன் அவர்கள்*  சொன்னதை அப்படியே அவர் உங்ளிடம்   சொல்வதாக *பதிகின்றேன்!*


"நான் *கொரோனா*

 *நோயால்* பாதிக்கப்பட்டு புதுவையில் உள்ள *மணக்குளவிநாயர்* *மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்* அனுமதிக்கப்பட்டேன் . 

*ஓய்வு பெற்ற ராணுவ வீரரான* எங்கள்  சிகிச்சைக்கென அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை   அது.


நான் மருத்துவமனைக்குச் சென்று தங்குவதற்குத்  தேவையான சில பொருட்களை எடுத்துக் கொண்டபோது என் எண்ணத்தில் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட *திருவாசகம் புத்தகம் ஒன்றினையும்* கையோடு  எடுத்துக்கொண்டேன்!

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை துவங்கியது.


சிகிச்சை துவங்கி ஒரு இரண்டு நாட்கள் ஒன்றும் தெரியவில்லை. நான் எதற்கும் இருக்கட்டுமே என்று எடுத்துக்கொண்டு வந்த *திருவாசகம் புத்தகத்தை என் தலைமாட்டில் வைத்துக்கொண்டேன்.* 


ஒரு நான்கு நாட்கள் சென்றது.  என் உடல்நிலை *சற்று மோசமாவதை உணர்ந்தேன்*  உடல் முழுவதும் வலிக்க ஆரம்பித்தது! ரொம்பவும் அடித்துப்போட்டது போல ஒரே அசதியாக இருந்தது!

என்னால் தாங்கமுடியாத அளவிற்கு உடல் சோர்வடைந்து *என் நினைவு கொஞ்சம் தடுமாறத் துவங்கியது!*  டாக்டர்களும் நர்சுகளும் அவ்வப்போது வந்து பார்த்து நிலைமைக்கேற்றவாறு சிகிச்சை கொடுத்தார்கள்


*என் உடல் நிலைமை மோசமான நிலைக்குச் செல்வதை என்னால் உணரமுடிந்தது.*

இப்படி நான் உணர்ந்து கொண்டிருந்த போது திடீரென *மூச்சு விடுவது சிரமமானது!* இருக்க இருக்க சிரமம் அதிகமாகி *நரக வேதனையானது!*

உடன் அவசர அவசரமாக  நர்ஸ் ஒருவர் சென்று டாக்டரை அழைத்து வந்தார்.

டாக்டர் எனது மோசமான உடல்நிலையைப் பார்த்து உடனே *செயற்கையாக சுவாசம் செய்திட ஆக்ஸிஜன் குழாயினைப் பொருத்தினார்.*


செயற்கையாக கருவி ஒன்றின் உதவியோடு  சுவாசிப்பது சிரமமாக இருந்தது.

*"நீங்கள் கொஞ்சம் கடினமான நிலையில் இருக்கின்றீர்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள்"* என்று  டாக்டர் ஒருவர் சொல்லிவிட்டு சென்றார்.  டாக்டர் போன பிறகு என்னுடைய *உடல்நிலை மேலும் மோசமானது.* *முகம்,  மூக்கு மற்றும் உடல் எங்கும் கொரோனா நோயும் , அதன் மருந்துகளும்  மொய்த்துக்கொண்டு முகம் , உடல்  எங்கும்  எந்த அசைவுமின்றி கிடந்தேன்.*


 இரவு மணி 12 இருக்கும் ஆக்ஸிஜன்  மூலம்  செயற்கையாக *மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டேன்.*  என் உடலின் மோசமான நிலை எனக்குப் புரிய வந்தது. *இரவு ஒருமணி இருக்கும் நர்ஸ் வந்து பார்த்துவிட்டு அவசர அவசரமாக டாக்டரை அழைத்து வந்தார்.*  


டாக்டர் வந்து பார்த்து விட்டு நர்ஸிடம் என் *உடல்நிலை மிக மோசமாகி விட்டதாக சொல்லிக் கொண்டிருந்ததை என்னால் கேட்க முடிந்தது.*  *நானும்  இனி பிழைக்கமாட்டேன் என்பதை உணர முடிந்தது.* எம்பெருமான் பாடலேஸ்வரரை நினைத்துக்கொண்டே டாக்டரிடம் பேச முயற்சித்தேன்.


 ஆக்ஸிஜன்

கவசத்தை  சற்றே விலக்கி தட்டுத் தடுமாறியபடியே டாக்டரிடம்  " *சார்,  ஒருவேளை நான் இறந்துவிட்டால் என் உடலோடு சேர்த்து  என் தலைமாட்டில் இருக்கும்  "திருவாசகம்" புத்ததகத்தையும் சேர்த்து வைத்து புதைத்து விடுங்கள்"* என்று

சொல்கிறேன்.  டாக்டரும் சென்று விடுகிறார். 


மீண்டும் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. *என் உடல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதை என் ஆன்மா உணர்கிறது .* 

இப்போதுதான் திடீரென யாரோ சாட்டையால் அடித்தது போல் என்னிடம்  *"தலைமாட்டில் எதற்கு திருவாசகம் புத்தகம் வைத்திருக்கிறாய் ?  அதை எடுத்துப் படிக்கலாமே "* என்று சொன்னது போல் உணர்ந்தேன்.   அப்போது இரவு மணி இரண்டு. 

இதைக் கேட்டவுடன் என் மோசமான உடல்நிலையையும் மீறி என் கைககள்

*திருவாசகம்* புத்தகத்தை எடுக்கின்றன.

 முகக்கவசத்தை முகத்திலிருந்து எடுக்கிறேன்.... *திருவாசகத்தின் முதல் பதிகமான "சிவபுராணத்தை"*

படிக்க ஆரம்பிக்கிறேன்.  இந்த நிலையில் இது எப்படி நடந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

  *சிவபுராணத்தைப்  படிக்கிறேன் ...படிக்கிறேன்....தொடர்ந்து படிக்கிறேன்..படித்துக்கொண்டே இருக்கிறேன் ...*

*இப்படி தொடர்ந்து* *சிவபுராணத்தின் வரிகளைப்* *படிக்கப் படிக்க*

*என்னையும் அறியாமல் எனக்குள்ளே ஏதோ ஒரு சக்தி பிறந்ததை*  *என்னால் உணரமுடிந்தது!*

*படிப்பதை நான் நிறுத்தவில்லை ...நிறுத்த முடியவுமில்லை!*


*சிவபுராணத்தின் தொன்னூற்றைந்து  வரிகளையும் என்னால் படிக்க முடிகின்றது ..*.கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் *அது என் ஆன்மாவிற்கு சுகமாக இருந்தது!*

படித்து முடிப்பதற்குள் *என் கண்கள் கண்ணீரில் நனைந்தன!  .. என் இதயம் ஆன்மீக நதியில் நனைந்தது...!*

 *கொஞ்சம் எழுந்து உட்கார முடிந்தது!*

*ஏதோ ஒரு புத்துணர்வு என் உடல்,  மனம் எங்கும் மெல்ல மெல்ல பரவிப் பாய்வதை உணர முடிந்தது!!*


 *இப்போது செயற்கையாக ஆக்ஸிஜன் இல்லாமல் என்னால் ஓரளவு சுவாசிக்க முடிகிறது!  உடல் அசதியும் அவ்வளவாக இல்லை!*


*மணி விடியற்காலை  நான்கு  இருக்கும்!*

நர்ஸ் என்னைப் பார்க்க வருகிறார் . 

எழுந்து உட்கார்ந்திருந்த என்னைப்பார்த்து  *"படுங்க சார் .உங்கள் உடம்பு இப்படி இருக்கும் போது  இப்படியெல்லாம் நீங்கள் எழுந்து உட்காரக்கூடாது"*

என்று சத்தம் போடுகிறார்.

உடன் டாக்டரை அழைத்து வருகிறார்.  வந்து பார்த்த டாக்டரும் நான் எழுந்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்து *அவர்  பங்கிற்கு  சத்தம் போடுகிறார்.*


பிறகு என்னை பரிசோதிக்கிறார். *அவருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.  என்ன ஆயிற்று உங்களுக்கு?*  *என்ன செய்தீர்கள்? என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து என்னை பரிசோதிக்கின்றார்!*

 *சார் ....திடீரென்று உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.  நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.  என்ன ஆச்சர்யம்!* *நீங்கள் இப்போது ஓரளவு குணமடைந்துள்ளீர்கள் ... என்னால் நம்பவே முடியவில்லை..*

*எல்லாம்  அதிசயம் போல் இருக்கிறது ! நீங்கள் என்ன செய்தீர்கள் ? என டாக்டர் கேட்கிறார்.*


நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறேன்

 *"நான் இறந்துபோனால் என்னோடு வைத்து புதைக்கச் சொன்ன இந்த திருவாசகம்  புத்ததகத்தை படிக்க ஆரம்பித்தேன் ...இதைத்தவிர வேறெதுவும் எனக்குத்தெரியாது"* என்று நான் அவரிடம் சொல்கிறேன் .


 *"இறைவனுக்கு நன்றி"* என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றுவிடுகிறார்.

பிறகு மொத்தமாக ஒரு 15 நாட்கள் நான் மருத்துவமனையில் இருந்தேன்.

*சிகிச்சை முடிந்து நலமாக பிறகு வீடு திரும்பினேன்.*

*எம்பெருமான் பாடலீஸ்வரர் கருணையால்தான் நான் இன்று உயிரோடு வீட்டில்  இருக்கிறேன்....* 

*திருவாசகம் என்னை மீட்ப்பித்து விட்டது! ..... சிவபுராணம் என்னை உயிர்ப்பித்து விட்டது!! "*


என்று குரல் தழுதழுக்க அவர் இவ்வாறு சொல்லி *முடிக்க எனது கண்களும் கலங்கின!*


அந்தக்காலத்தில்

 

*திருமுறைகள் பாடி, மூடியிருந்த கோயில் கதவுகள் திறந்தன...*


*முதலை உண்ட பாலகன், மீண்டும் உயிர் பெற்றார்....*


  *அரவம் தீண்டி ஆருயிரை இழந்த குழந்தை  திருநாவுக்கரசு, உயிர் பெற்று மீண்டு வந்தார்.....*


*எலும்பும் சாம்பலுமாய் இருந்த பூம்பாவை, மீண்டும் உயிர் பெற்று வந்தார்.....*


 என நம் *நாயன்மார்கள் வாழ்வில் நடந்த அதிசயங்களை படித்து ஆச்சர்யமும், ஆனந்தமும்  அடைந்துள்ளோம்!!* 

*ஆனால் இன்று நம் மன்ற அடியார் சிவத்திரு கோபாலகிருஷ்ணன்  வாழ்வில் திருவாசகம் -சிவபுராணம்* ஏற்படுத்திய *அற்புதத்தை நம்  வாழ்நாளில் கண்டு விட்டோம்!*


*முதலையையும் அரவத்தையும் விட கொடியதான மருந்தே கண்டுபிடிக்கப் படாத கொரோனாவின் கொடிய கரங்களில்  இருந்து, கொடுங்கூற்றை உதைத்த  காலகாலனான எம்பெருமானே வைத்தியநாதனாக வந்து நம் ஐயா அவர்களை திருவாசகம் என்னும் மருந்தைக் கொடுத்துக் காத்தருளி இருக்கின்றான்.அதற்காகவே அவருக்கு திருவாசகம் புத்தகத்தை உடன்  கொண்டு செல்லும் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறான்.*


*இந்த நூற்றாண்டிலும் திருமுறைகளின் அருமையை அனைவரும் அறிந்து கொள்ள இறைவன் நடத்திய நாடகமோ இது.*


*மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி* *எனவும்,*

*மருந்து அவன் எனவும் ,*

*மருந்து அவை எனவும்,* 

*மருந்து வேண்டில் இவை எனவும்,*

ஐயனையும் திருமுறைகளையும் பாடிப் பரவி உள்ளார்கள்  *நால்வர் பெருமக்கள்.*


*ஐயா அவர்கள் தொடர்ந்து நம் மன்ற திருமுறை  முற்றோதல் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கெடுத்துக் கொள்வார்கள்.*


சிவபுராணத்தில் *மணிவாசகப்பெருமான்*

*"ஆறாத இன்பம் அருளும் மலை*

*போற்றி"*


*"பேராது நின்ற பெரும்*

*கருணைப்* *பேராறே"*


*"காக்கும் என் காவலனே காண்புஅரிய பேரொளியே"*


என்றெல்லாம் ஐயன் *சிவபெருமானைப்போற்றி* புகழ்ந்திருப்பார்!


ஆம் 


*"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து"*


நம் போன்ற உயிர்களைக்காக்கின்றவர்  *கருணையே வடிவமான எம்பெருமான் சிவபெருமானே என்பதை* 

நாம் இன்று நன்றாக உணர்ந்து  கொண்டோம்! 



*"நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு தாயின் சிறந்த தயாவான தத்துவன்"*

*சிவபெருமான்*

என்பதையும் தெளிவுறத் *தெளிந்து கொண்டோம்...தெரிந்து கொண்டோம்*


*நமச்சிவாய வாழ்க!*

*நாதன் தாள் வாழ்க!!*

*ஏகன் அநேகன்* *இறைவனடி வாழ்க!!!*


*🙏சிவாயநம🙏*

No comments:

Post a Comment