Saturday 3 October 2020

ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா

 *யாரோ ஒருவர் திடீரென்று உங்களிடம் “ஸார், ட்ரெயினைப் பிடிக்கணும், ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா ? “ என்கிறார்.*

 தயங்கவே வேண்டாம், “ஐந்து நிமிடம் இருக்கா ? இரண்டே நிமிடம் போதுமே “ என்று சொல்லுங்கள். “விடு - பிடி. அல்லது பிடி - விடு. அவ்வளவுதான் “ என்று சொல்லுங்கள். - என்று சொல்லி விட்டு சிரி்துக்கொணடே கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தது. பிறகு அவரே விளக்கினார் :

 இந்த உலக பந்தங்களையெல்லாம் உதரித் தள்ளுங்கள். பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள்.

 ஆனால் சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களை எல்லாம் உதரித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ?

 கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது. முதலில் பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள். அந்தப பிடி இறுக, இறுக, இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.

 ஒரு உபமானம் சொல்லுகிறேன். சில விறகு குச்சிகள் ஒரு கயிற்றால்

 இறுக்கமாகக் கட்டபபட்டுள்ளன. அதனை அவிழ்க்க முடியவில்லை ( இது நம் உலக பந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே கட்டி, ஒரு குலுக்கு குலுக்கி இறுக்குங்கள். ( இந்த புதிய கட்டு பகவானின் பாதம பற்றிய பிடி.) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிறு இருக்கம் தளர்ந்து கழன்று விடும்.

 உலக பந்தங்களை விட்டு, பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞான மார்கம். ஞானிகளுக்கானது.

 பரந்தாமன் பாதங்களைப் பற்றி, உலக பந்தங்களை விடுவது பக்தி மார்கம். சாமானிய மக்களுக்கானது.

பிறவி என்பதே துன்ப மயமானது என்பதை யாவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உணரத் தொடங்குகிறோம்.

இதே பரிதவிப்பை கபீரின் வரிகளிலும் காணலாம்.

 मैं अपराधी जन्म का, नख-सिख भरा विकार ।

 तुम धाता दुःख भंजना,मेरी करो सम्हार ॥

 மேன் அபராதி ஜன்ம் கா, நக்-ஸிக் பரா விகார் |

 தும் தாதா து:க் பஞ்சனா, மேரீ கரோ ஸம்ஹார் ||

 பாதாதி கேசம் என்னுள் பேதமை,தந்ததே பிறவி என்னும் மாமை

 தாதா! நீயும் தீ்ர் என் துன்பம்,தொலைத்திடு இத்துயர் தரும் சென்மம்

 (மாமை =துன்பம் ; தாதா= பெருங்கொடையாளன்,அளவின்றி தருபவன்)

 'காலிலுள்ள நகக்கண் முதல் சிரம் வரையிலும் ஒவ்வொருவரு திசுவிலும் என்னுள் அறியாமை பொங்கி வழிகிறது. அப்படி இருக்கும் பொழுது பிறவியை ஒழிக்கின்ற ஞான்ம் எங்கிருந்து வர சாத்தியம்' என்ற தன் இயலாமையை குறிப்பால் உணர்த்தி அதற்கானத் தீர்வையும் இறைவனிடமே விட்டு விடுகிறார் கபீர்.'எல்லாவற்றையும் அருளக்கூடிய அருளாளா ! இந்தப் பிறவித்துன்பத்தையும் போக்கிடுவாய்' என்று சரணடைகிறார்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

No comments:

Post a Comment