Thursday 29 October 2020

கார்த்திகை மாத பிறப்பு - 16/11/2020 - தான தரும திட்டம்

 கார்த்திகை மாத பிறப்பு - 16/11/2020 - தான தரும திட்டம்


 


1. திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் உள்ள சாதுக்களுக்கு அன்னதானம் - 10000


200 சாதுக்கள் ஒரு வேளை உணவு பெற்று பயனடைவார்கள்


 


2. மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாதுக்களுக்கு அன்னதானம் - 10000


200 சாதுக்கள் ஒரு வேளை உணவு பெற்று பயனடைவார்கள்


 


3. மருதமலையில் லெப்ரசி பாதித்த 30 குடும்பங்களுக்கு தலா 25கிலோ உணவு பொருள் - அரிசி 10 கிலோ கோதுமை மாவு 15 கிலோ - 30 குடும்பங்களை சேர்ந்த சுமார் 120 பேர்  உணவு குறைபாடு இல்லாமல் பெறுவார்கள் . சென்ற மாதம் அதே இடத்தில் உள்ள வேறு 30 குடும்பங்களுக்கு கொடுத்தோம். இந்த மாதம் அதே இடத்தில உள்ள, சென்ற மாதம் நமது தானத்தில் பயன் பெறாத வேறு 30 குடும்பங்களுக்கு உணவு பொருள் கொடுத்து உதவ போகின்றோம்.- 25000


 


4. கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தைகள் - இவர்களுக்கு அரிசி 1000 ரூபாய்க்கு வாங்கி கொடுப்போம் - திருமதி சுதா அவர்கள், ஒப்பந்த பணியாளராக தனியார் நிறுவனத்தில் டி போட்டு கொடுக்கும் வேலையில் இருக்கிறார் - அவருக்கு 2 பெண்கள் பள்ளியில் படித்து வருகின்றனர் .


 


5. தினசரி அன்னதானம் - மாதம் முழுவதும் தினமும் ஒரு உதவியாக காய் மற்றும் கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, கிடைத்த தோட்ட வேலையே சிரமப்பட்டு செய்து வயிற்றை கழுவி வரும் ஊனமுற்றவருக்கு தினமும் சாப்பாட்டுக்கு உதவி தொகையாக ரூபாய் 30 வழங்கி வருகிறோம். இவருக்கு, நாம், ஒரு மாத மொத்த தான தொகையாக ரூபாய் 1000 ஒதுக்கி உள்ளோம்.


 


6.  ஏழ்மை நிலையில் உள்ள சிவனடியார் மற்றும் அவரது குடும்பம் சென்னையில் உள்ளது. ஏற்கனவே நாம் அவருக்கு சென்ற மாதம் மளிகை பொருள் மற்றும் அரிசி வாங்கி கொடுத்து உதவி செய்தோம். இந்த மாதமும் அவருக்கு உணவளிக்க உதவி செய்து கை தூக்கி விட்டால், அவர் குறை ஏதும் இல்லாமல் கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்து சம்பாதிக்க சிவன் அருள் புரிவார் என்று நம்புவோம்.


ஓம் நமசிவாய


 


7.  திருநங்கைகள் - கெட்ட வழியில் உடலை விற்று பணம் சம்மதிக்காமல், நல்ல கடவுள்பக்தியுடன் நல்ல பொருட்களை விற்று தொழில் செய்து ஒன்றாக ஒரு இல்லத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அளிக்கும் நமது தானம் இவர்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டும். ஏற்கனவே காங்கேயம் அருகே உள்ள இவர்களுக்கு நாம் மளிகை பொருள் வாங்கி கொடுத்து உதவி அளித்துள்ளோம். இந்த மாதமும் இவர்களுக்கு ஒரு சிறு தொகையாக ரூபாய் 2000 ஒதுக்கி மளிகை பொருளாக வாங்கி  தீர்மானித்துள்ளோம்.


 


8. அகத்தியர் பீடம் - அன்னதானம் -  புண்ணிய ஆத்மாக்கள், சித்தர் வழி செல்பவர்கள் , ஆன்மீக எண்ணம் உடையவர்கள் அதிகம் வந்து செல்லும் இடம் - நமது அகத்தியர் ஜீவா அருள் நாடி பீடம், இங்கே குறைவின்றி எப்போதும் அன்னதானம் நடக்க நாம் இயன்ற போதெல்லாம் அரிசி மளிகை சாமான்கள் போன்றவை வாங்கி கொடுத்து உள்ளோம். சென்ற வாரம் அன்னதான உபயோகத்துக்கு சேர் டேபிள் வாங்கி கொடுத்தோம். மேலும் சிறப்பாக அந்தநாள் நடந்து வர, அரிசி, மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ள , இந்த மாதமும் விழைகின்றோம் - ரூபாய் 5000


 


9. கோசாலை - கொடுமுடி முத்தூர் அருகே உள்ள கோசாலை  200 கோமாதாக்களுடன் 5 வருடங்களாக சிறந்த முறையில் நடந்து கொண்டு வருகின்றது. கோசாலை சிறப்பான விஷயம் என்றால், அடி மாட்டுக்கு மாமிசத்துக்காக விற்பனைக்கு சென்ற இந்த கோமாதாக்கள் பணம் கொடுத்து மீட்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பது சிறப்பிலும் சிறப்பான ஒன்று. போன மாத தானத்தில் 5000 ரூபாய்க்கு மாட்டு தீவனம் வாங்கி கொடுத்தோம். இந்த மாதம் மேலும் அதன் தொடர்ச்சியாக 2000 ரூபாய் ஒதுக்கி மாட்டு தீவனம் வாங்கி கொடுக்க உள்ளோம். இது போன்ற நல்ல சிறந்த தரும ஸ்தாபனங்களுக்கு தொடர்ந்து நாம் ஆதரவளிக்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.


 


10.  அகத்தியர் கோசாலை - நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் 2 கோமாதாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கோதானத்துக்கு நிதி ஒதுக்கி அகத்தியர் உத்தரவுக்காக எதிர்பார்த்து கொண்டு உள்ளோம். இந்த நிலையில் அதே பீடத்தில் ஏற்கனவே உள்ள கோமாதாக்களுக்கு உணவு தேவைப்படும் நிலையில், இந்த மாதம் ஒரு சிறு தொகையாக ரூபாய் 2000 ஒதுக்கி மாட்டு தீவனம் வாங்கி கொடுப்போம் என்று எண்ணி உள்ளேன்.


 


11. பெருந்துறையில் 20 வருடங்களாக கண் பார்வை அற்றவர்கள் சங்கம் பொதுவான ஒரு கட்டிடத்தில் சுமார் 20 கண் பார்வை அற்றவர்கள் கைத்தொழில் முறையில் பொருட்கள் தயாரித்து விற்று வயிற்றை கழுவி வருகின்றார்கள். ஆதரவற்ற இந்த பார்வை இழந்தவர்களுக்கு ஏற்கனவே நாம் இரு முறை மளிகை பொருள் வாங்கி கொடுத்து உள்ளோம். இந்த மாதமும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்து உதவ எத்தனித்து உள்ளோம். எல்லாம் அய்யன் ஆசி.


 


12. சென்ற மாதம் ஏற்கனவே 24000 நிதி பெற்று, அதில் இருந்து 22000 செலவில் அகத்தியர் பீடத்துக்கு சேர் டேபிள் வாங்கி கொடுத்து உள்ளோம். மேலும் அந்த நிதியில் 2100 பாக்கி உள்ளது. இதில் மேலும் 4 சேர் வாங்கி கொடுத்தால், அங்கே வரும் பக்தர்களுக்கு உட்கார இருக்கை கிடைத்து வசதியாக இருக்கும். எனவே மீதமுள்ள தொகை இந்த மாதம் இந்த விதத்தில் தானம் கொடுத்து உபயோகப்படுத்தப்படும்.


 


மேலும் தான திட்டங்கள் சேர்த்து கொள்ளப்படும். தானம் கிடைக்கும் தொகைக்கேற்ப, திட்டங்கள் கூடவோ குறையவோ செய்யும். சென்ற மாதம் அன்பர்கள் கொடுத்த தொகை, இந்த மாதமும் கொடுப்பார்கள் என்ற யோசனையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நமது குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம்.  மேலும் திட்டங்கள் பற்றி விவாதிக்கலாம். நமது விவாதங்கள் கலந்துரையாடல்கள், நமது தான தரும காரியங்களை மேலும் எவ்விதம் சிறப்பாக செய்ய முடியும் என்ற நிலையில் இருக்க வேண்டும். அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பங்கு கொள்ள வேண்டும். சிலர் நிதி அளிக்கலாம், சிலர் பயனாளிகளுக்கு பொருட்கள் கொண்டு பொய் சேர்க்கலாம், சிலர் இரண்டும் செய்யலாம், சிலர் சிறந்த ஆலோசனைகள் யோசனைகளை கொடுக்கலாம். எல்லோரும் நிச்சயம் பங்கு கொள்ளுங்கள். குழுவில் உறுப்பினர் ஆக இருந்தால் போதாதது, நாம் ஒருங்கிணைந்து செய்யும் தான தரும காரியங்களில் ஏதோ ஒரு வகையில் பங்கு எடுத்து கொண்டு ஆத்ம திருப்தி பெற வேண்டும் - சிறந்த புண்ணிய பலன் பெற வேண்டும் என்பது தான் நம்முடைய அனைவரின் குறிக்கோள்களும் ஆகும். நன்றி - தி. இரா. சந்தானம் .


 


நிதி அளிப்பவர்கள் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை நிதி அளிக்கலாம்.


 


நிதி அளிப்பவர்கள் கட்டாயம் நிதி அளித்த விவரங்களை குழுவிலோ அல்லது எனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணுக்கோ தெரிவிக்க வேண்டும்.


 


ஜீ பே என்னும் செயலியில் எனது தொலை பேசி எண்ணுக்கு 9176012104 - பணம் அனுப்பலாம். ஜீ பே சரியாக வேலை செய்கிறதா என்று சந்தேகம் இருந்தால் 1 ரூபாய் சோதனைக்காக அனுப்பி பார்க்கலாம். சரியாக வந்தால் முழு தொகை அனுப்பலாம்.


 


மிக்க நன்றி .

No comments:

Post a Comment