Saturday, 5 January 2019

பிரம்மா, விஷ்ணு, சிவன் - தனி வழிபாடுகள், ஏற்ற தாழ்வுகளுக்கான காரணங்கள்

பிரம்மா, விஷ்ணு, சிவன் - தனி வழிபாடுகள், ஏற்ற தாழ்வுகளுக்கான காரணங்கள்

சிஷி: இம்மட்டில், தேவர்களின் றன்மையைத் தெளியலானேன். அதில், அயனைச் சிலரும், ஹரியைச் சிலரும், ஹரனைச் சிலரும் விசேஷமாய்ப் பிதற்றித் தர்க்கங்கள் பண்ணிக்கொள்ளுவதற் கிணங்க, வேத முதலிய கலைகளும் ஏற்பட்டிருப்பானேன்?

குரு: மூலப் பிரமாவின் சிருஷ்டித் தொழிலிற்காக அவராலேற்பட்டிருக்கிற வர்களையும், அவருரு வடைந்தவர்களையும்  அவரடியார்களையும் பிரமா வென்றும்; மூல விஷ்ணுவின் இரக்ஷகத் தொழிலிற்காக அவரா லேற்பட் டிருக்கிறவர்களையும், அவருரு வடைந்தவர்களையும், அவரடியார்களையும் விஷ்ணு வென்றும்,  மூல வுருத்திரன் சங்காரத் தொழிலிற்காக அவராலேற் பட் டிருக்கிறவர் களையும், அவருரு வடைந்தவர்களையும், அவரடியார்களையும் உருத்திர ரென்றுஞ் சொல்லப்படும். அவற்றுள், அம்மூல விஷ்ணு பிரமாக்க ளுக்கு அனேக பிரமா விஷ்ணு உருத்திரர்கள் தாழ்ந்தவர்களாயும், மூல விஷ்ணு வுக்கு அனேக விஷ்ணு உருத்திரர் பிரமாக்கள் தாழ்ந்தவர்களாயும், மூல வுருத்திர னுக்கு அனேக உருத்திரர் விஷ்ணு பிரமாக்கள் தாழ்ந்தவர்க ளாயும், கிருத்திய நிமித்தம் பிரமாண்டங்கடோறும் இருத்தலால், அவரவர் புராணகலைகள் அவரவரை யுயர்த்தியும் மற்றவரைத் தாழ்த்தியும் விளம்புகின்றன. இவ்வுண்மை யறியாமல், வாய் மதம்பேசி வெறும்புளித்தின்று நாக்கெரிகின்றார்கள். அதனானமக்குறும் பயனென்னை? கிருத்திய நிமித்தம் பிரமாண்டங்க டோறும் பிரம விஷ்ணு உருத்திரர்க ளுண்டெனற்குப்  பிராமாணியம்: ஸ்காந்தம் வீரமாகேந்திர காண்டம், 6 - ஆவது அத்தியாயம் 8,9,10,11,12,13 - ஆவது சுலோகங்களினருத்தம் " அத்தூத னெங்கு மோடிச்சென்று பார்த்ததில் அந்தப் பிரமா சகல தேவர்களுனும் ஸ்ரீ முருகேசனண்டையி லிருப்பதைக் கண்டு பிறகு திரும்பி வந்து செய்தியை யுள்ளபடி யுரைக்க " " சூரபத்மனும் அத்தூதன் வசனத்தைச் செவியுற்று அப்போது மனசில் பிரமாதி தேவர்களையெல்லாம் கோபித்து கொண்டு " உடனே மற்றோரண்டத்திற் கதிபரான பிரமனையழைப் பித்துத் தூதன் முகமாய் அவரை நோக்கி ஓ! பிரமனே! நமது நகரத்தை முன்னி ருந்த மாதிரி செய்து விடென, உடனே யப்பிரமன் " சீர்திருத்தி விட்டுச் சூரனிடஞ் செல்ல" "பின்பு சூரனும் அவரை வெகுமானத்துடன் தனது தூதர் களொடுகூட அவரது சுய அண்டத்திற்குச் செல்லும்படி யனுப்பினான் உடனே" அத்தூதர்கள் பிரமனை இப் பிரமாண்டத்திற்கு வெளியிற் கொண்டுபோய்விட அவர் சென்றுவிட்டனர் " என்பனவே.

                                                         
 (37)

சிஷி: அஃதப்படிக் காயினும் திரிகர்த்தர்களில் வேதன் இருவரையும் படைத்த தாகவும், விஷ்ணு பிரமாவைப் படைத்து அவரா லுருத்திரனைப் படைத்ததா கவும், உருத்திரன் விஷ்ணுவைப் படைத்து அவராற் பிரமாவைப் படைத்ததா கவும், பராசத்தி உருத்திரனையும் வி

ஷ்
ணு வையும் படைத்ததாகவும் புராண கலைகள் புகலுவ தென்னை?

குரு: யாம் மேலே சொற்றதனைய அவரவர்கள் தன்மைக்குத் தாழ்ந்த வகையிற் படைத்ததையே அவ்வாறாகவும் ஈஸ்வரனுடைய சத்தியினின்று சதா சிவாதி பஞ்சகர்த்தாக்கள் தோற்றியதனால் அவர்களைப் பராசத்தி படைத்ததாகவுங் கூறலாயிற்று. அதில், எவற்றுக்குங் காரணம் ; இதுகாறும் விளக்கி வந்ததில் வாசாமகோசரமாய்ச் சேட்டித்து நின்ற ஈசனாகிய பரமசிவனேயாம். அப்பரமசிவ பெருமானின் வர்த்தமானங்களை அடுத்த வியாசத்திலருள்வேம்.