Saturday, 5 January 2019

சிவன் யார் ருத்திரன் யார் பைரவர் யார் எதற்க்காக சம்ஹாரம் உண்மையான சிவா சொரூபம் எது

சிவன் யார்
ருத்திரன் யார்
பைரவர் யார்
எதற்க்காக சம்ஹாரம்
உண்மையான சிவ சொரூபம் எது

ஏனையோர்கட்குஞ் சிவனெனும் பெயர் எதால் வந்தது?

குரு: சிவ மெனும் மோக்ஷமானது சர்வோபாதியு நசித்த சூனியமாதலால், பிரவிருத்திக்கு நிவர்த்தியா யேற்பட்ட சம்ஹார கர்த்தாக்களாகிய உருத்திராதி தேவதைகட்கும் அவர் கணங்களாதியோர்க்கும் தொழிலால் அப்பெயர் வரலாயிற்று. நிற்க, ருத்தரமென்பது: அக்கினியென வடமொழியிற் பொருள் படுகின்றமையால், அக்கினி ஸ்படிவமாகிய உருத்திரருக்கும் அவர் கணங் கட்கும் உருத்திரரென ஆகுபெயராலழைக்கப்படும். இன்னமும், தேவர்கள் பொருட்டும் அடியார்கள் பொருட்டும் பல வேடங்கொண்டு திருவிளையாடல் கள் புரிந்தது குறித்து குறிப்புப்பொருள் செம்பொருள் படும்படிக்கான நாமங் கள் அனந்தமாய் வந்திருக்கிறதென்றும், இத்தியாதி காரணங்களனைத்தும் சிவனுக்குச் சகள லீலையென்றும், அந்த லீலைக் கதீதப்பட்டு ஸ்வயம்புவாய் ஆதியந்தமற்ற அனாதியாய் நிற்பதையே சிவனுக்கு நிஷ்கள மென்று முணர் வாயாக!
                                                           

(5)



சிஷி:  உணர்ந்தேன். பிரவிருத்திக்கு நிவிர்த்தியா யேற்பட்ட சம்ஹார கிருத்திய மானது  - இயற்றுவார்க்குச் சிவனெனும் பெயரை நல்குவதாயின், அந்தச் சிவனெனப்படுவார் சர்வநாச சகிதர் தானோ?


குரு:  என்ன போதித்துங் குதர்க்கம் விட்டிலை. இதனால் நீ குதர்க்கியே. ஓ! குதர்க்கீ! அதுபற்றி யின்னு மியம்புதுங்கேள்! எல்லா ஆத்மாக்களுக்கும் சகல துக்க அஞ்ஞான சந்தேக பாவமென்பவைகளை நாசஞ்செய்து தெளிவைக் கொடுக்கின்றதே நிஷ்கள சகளச் சிவன் றன்மையாகும். அத்தெளிவினாற் றானாகிய வஸ்துவை யுணர்ந்து சாயுஜ்ய மென்கிற ஐக்யமாய்ச் சிவத்திற் சேர்வதே ஜன்மரகித முத்தியாகும். இதனால், சிவனெனுந் தன்மை சர்வபாவ நாசமென்றும், உருத்திரனெனுந் தன்மை துஷ்ட நிக்கிரகமென்றும், இவை யில்லாவிடில் ஜீவர்கட்கு நன்மை யெவ்வளவேனும் பயக்காதென்றும், சகல நியாயத் தீர்ப்பும் இன்னணமிருந்து முடிவில் சர்வ சம்ஹார பையிரவமாகவு நடிக்குமென்றும், மாயா தோற்றமாகியவிஷ்ணு பிர்மாக்களை முடிப்பதே சர்வ சம்ஹாரமென்று மெண்ணுக!