Saturday 5 January 2019

விஷ்ணு வை ஏன் "மாயன்" என்று அழைக்கிறார்கள். ஏன் அவரை "திருமால்" என்று அழைக்கிறார்கள்

விஷ்ணு வை ஏன் "மாயன்" என்று அழைக்கிறார்கள்.
ஏன் அவரை "திருமால்" என்று அழைக்கிறார்கள்.

சிஷி: அம்மூலவிஷ்ணு க்ஞான முடையவராய் சிவகட்டளையை வதியப்பெற்ற வராயிருக்க, அவரைச் சத்தியாகிய மாயையின் றோற்றமென்றும் மாலென்றும் சொல்லுவதி  யாது?

குரு: பரமாணுவிற் றோன்றிய மாயையின் பிரகிருதி தோற்றங்களாகிய அண்ட கோடிகளெல்லாம் அயனாற் சிருஷ்டிக்கப்பட்டதென்றும், அவ்வயனுக்கு விஷ்ணுவுந்தியாகிய வனசம் பிறப்பிடமாகுமென்றும்,அதினால் விஷ்ணுவுந்தி யிலுலகங்க ளடக்கமென்றும்,அம்மாயை புருஷரூபமாய்ச் சொரூபப்பட்டதில் விஷ்ணு மாயைக்குப் பிரதான வடிவமென்றும், மாயையின் காரியங்களாகிய புவனரக்ஷணையே அவருக்குப் பிரகிருத தொழிலென்றும், இரக்ஷணைக்காதாரம்  அம்புதமாதலால் அந்த ஸ்தானமே அவருக்குப் பள்ளியாகுமென்றும் புராண கலைகள் புகலுவதால் மாயையின் றோற்றமெனப்படுமென்றும், தாருகாவ னத்தவர்  நிமித்தம் சிவன் பிக்ஷாடன வடிவங் கொண்டபோ துண்டான மிக்க வழகினை மோஹினியுருவான விஷ்ணு கண்டு மோஹித்ததால் மால் என்ற நாமம் வந்ததென்றும், இன்னும் பல காரணங்கள்பற்றி அவருக்கு அனந்த நாமங்க ளேற்பட்டன வென்றும், இவைகளெல்லாந் திருலீலைக்குள்ளான விஷ்ணுலீலையாகு மென்றுந் தெளிய வெளியாம்.