Friday, 13 April 2018

தமிழ் உருவாக்கிய இந்து

ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்து மதத்தில்

1. கருவாக்கு, குருவாக்கு, தருவாக்கு, திருவாக்கு, அருள்வாக்கு, மருள்வாக்கு எனும் ஆறு வகைப்பட்ட வாக்கு நூல்கள்,

2. கருவாக்கியம், குருவாக்கியம், தருவாக்கியம், திருவாக்கியம், அருள்வாக்கியம், மருள் வாக்கியம் எனும் ஆறு வகைப்பட்ட வாக்கிய நூல்கள்,

3. கருவாசகம், குருவாசகம், தருவாசகம், திருவாசகம், அருள்வாசகம், மருள்வாசகம் எனும் ஆறு வகைப்பட்ட வாசக நூல்கள்,

4. அத்தரம், சாத்தரம், சூத்தரம், தோத்தரம், நேத்தரம், வேத்தரம் எனும் ஆறு வகைப்பட்ட தர நூல்கள்,

5. அத்திரம், சாத்திரம், சூத்திரம், தோத்திரம், நேத்திரம், வேத்திரம் எனும் ஆறு வகைப்பட்ட திர நூல்கள்,

6. அத்திறம், சாத்திறம், சூத்திறம், தோத்திறம், நேத்திறம், வேத்திறம் எனும் ஆறு வகைப்பட்ட திற நூல்கள்

என்று ஆக மொத்தம் முப்பத்தாறு (36) நூல்களைப் பெற்றிருக்கின்றன.

ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில்

(108) நூற்றியெட்டுப் பூசை மொழி நூல்கள்,
(48) நாற்பத்தியெட்டுப் பூசை விதி நூல்கள்,
(96) தொண்ணூற்றாறு தத்துவ நூல்கள்,
(144) நூற்று நாற்பத்து நான்கு செயல் சித்தாந்த நூல்கள்

என்று (108 +48 +96 +144 = 396) ஆக மொத்தம் முன்னூற்றுத் தொண்ணூற்றாறு நூல்கள் இருக்கின்றன.

இந்து வேதத்துக்குரிய 396 நூல்களிலுமுள்ள கருத்துக்களும், செய்திகளும்,

# இருக்கு வேதம், - (உரைக்கோவை வாசகங்களாக)
# அசுர வேதம், - (வாக்குகளாக)
# அதர்வான வேதம், - (வாக்கியங்களாக)
# யாம வேதம் - (வாசகங்களாக)

எனும் நான்கு வேதங்களில் சுருக்கமாக விளக்கியுரைக்கப் பட்டிருக்கின்றன.

இந்த நான்கு வேதங்களிலும் உள்ள உரைக்கோவை வாசகங்கள், வாக்குகள், வாக்கியங்கள், வாசகங்கள் அனைத்திலும் 'கருவாக உள்ள' அதாவது, 'சூல்' ஆக உள்ள (சூல் = கரு) மையக் கருத்துக்கள் ஒரு வரி முதல் பல வரிகள் வரை உள்ள சுருக்கமான வாசகங்கள் சூலகம் (சுலோகம்) என்ற பெயரில் எளிதில் மனப்பாடம் செய்து மனதில் நிலை நிறுத்திக் கொள்ளும் வண்ணம் 4,42,368 (நான்கு இலட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபத்தெட்டு) தனித்தனி கருத்துக்களாக, கருத்துச் சொற்றொடர்களாக எழுதப் பட்டிருக்கின்றன. இந்தச் 'சூலகம்' என்ற சொல்லே, நாளடைவில் பேச்சு வழக்கில் 'சுலோகம்' என்றாயிற்று.

இந்து வேதமும், இந்து மதமும் அருளப் பட்டுள்ள அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியான முத்தமிழ் மொழியில்

1. சத்தி,
2. சித்தி,
3. முத்திகளைத் தருவதற்கும்
4. பிறவாமை,
5. இறவாமை,
6. பிறப்பு இறப்பு பிறப்பிறப்பற்ற பெருநிலையைப் பெறுவதற்கும்,
7. கடவுளாகவே மாறுவதற்கும் உரிய பூசை மொழிகள்

இருபத்தி மூன்று (23) வகைப்பட்ட காயந்திரிகளாக இருக்கின்றன.

இந்து வேதத்திலும், இந்து மதத்திலும்தான் இந்து மதத்தின் தலைமைப் பீடமான பதினெண் சித்தர் பீடத்தின் கீழ்:-
1. ஏமகோடி பீடங்கள்,
2. காமகோடி பீடங்கள்,
3. சோமகோடி பீடங்கள்,
4. வாமகோடி பீடங்கள்

எனப்படும் நான்கு வகைப்பட்ட பீடங்கள் பட்டியலிட்டு காட்டப்பட்டு இருக்கின்றன.

1. இந்த நான்கு பீடங்களிலும் ஒவ்வொரு பீடத்திலும் 243 வகை சத்தி பீடங்கள் இருக்கின்றன என்பதால் ஆக மொத்தம் சத்தி பீடங்கள் 972 ஆகின்றன.

2. இந்த நான்கு பீடங்களிலும் ஒவ்வொரு பீடத்திலும் 108 திருப்பதி பீடங்கள் இருக்கின்றன என்பதால் ஆக மொத்தம் திருப்பதி பீடங்கள் 432 ஆகின்றன.

3. இந்த நான்கு பீடங்களிலும் ஒவ்வொரு பீடத்திலும் 1008 சீவாலய பீடங்கள் இருக்கின்றன என்பதால் ஆக மொத்தம் சீவாலய பீடங்கள் 4032 ஆகின்றன.

ஆகப் பதினெண் சித்தர் பீடத்தின் கீழ் 5436 பீடங்கள் (972+432+4032) ஆகின்றன. ஆகப் பதினெண் சித்தர் பீடத்தின் கீழ் 5436 பீடங்கள் (972+432+4032) ஆகின்றன.

இந்து வேதத்திலும் இந்து மதத்திலும்தான் 'மனித வாழ்க்கையைப் பாதுகாக்கக் கூடிய பாதுகாப்புச் சத்திகள் பதினெட்டு' என்று:-
1. திருநீறு,
2. மஞ்சள்,
3. குங்குமம்,
4. சாந்து,
5. சந்தனம்,
6. மை,
7. திருமண்,
8. பூ (மலர்),
9. இலை,
10. பட்டை,
11. தண்டு,
12. வேர்,
13. விதை,
14. எண்ணெய்,
15. முடிகயிறு,
16. தாயத்து,
17. சக்கரம்,
18. உருத்திராக்கம் (காய், கனி)

எனும் பதினெட்டு வகைப் பொருள்களும் மிகமிகத் தெளிவாகத் திட்டவட்டமாக எளிமையாக, விளக்கமாக வரையறைப் படுத்திப் பட்டியலிட்டுச் சுட்டிக் காட்டப் படுகின்றன.

நான்கு வகை அருளுலகத்தவர் வாழிடங்கள்

இந்து வேதத்திலும் இந்து மதத்திலும்தான் விண்ணுலக மண்ணுலக அருளுலகத்தவர்களான
1. கடவுளர்கள், 2. தேவர் தேவதைகள், 3. தெய்வங்கள், 4. ஆண்டவர்கள், 5. பிண்டத்தவர்கள், 6.அண்டத்தவர்கள், 7. பேரண்டத்தவர்கள், 8. அண்ட பேரண்டத்தவர்கள், 9. காற்றுகள், 10. கருப்புகள், 11. பேய்கள், 12. பிசாசுகள் எனும் பன்னிரண்டு வகைப்பட்டவர்களுக்காக:-

48 வகைப்பட்ட கருவறைகள்,
48 வகைப்பட்ட வெட்டவெளிக் கருவறைகள்
48 வகைப்பட்ட வழிபாட்டு நிலையக் கருவறைகள்
48 வகைப்பட்ட கோயில் மூலக் கருவறைகள்

என்று 'நான்கு வகை அருளுலகத்தவர் வாழிடங்கள்' திட்டவட்டமாக, தெளிவாக, எளிமையாக, விளக்கமாக வரையறைப்படுத்தி பட்டியலிட்டுச் சுட்டிக் காட்டப் படுகின்றன.