Wednesday, 4 April 2018

என்னுடைய அனுபவம் - தி. இரா. சந்தானம்- நரம்பு கோளாறு

கீழே கொடுக்கப்பட்டுள்ளது என்னுடைய அனுபவம் - தி. இரா. சந்தானம்

 சில நாட்களுக்கு முன்னர், திடீரென்று இடது கை விரல்களில் ஒரு வகையான துடிப்பு உணரப்பட்டது. ஒரு வகையான "விர் " என்ற அதிர்வு  நீடித்தது .

பிறகு  இரண்டு நாட்கள் கழித்து இடது கை ஆட்காட்டி விரல், மற்றும் பெரு விரல்  ஆகியவற்றில் உணர்ச்சி குறைந்தது , மேலும் இது இரு தினங்களுக்கு  தொடர்ந்து முழுமையாக உணர்ச்சி இல்லாமல் போனது. நானும்  இது சரியாகும் என்று ஒரு வாரம் பார்த்து, பிறகு அது சரியாகாமல் மேலும் இடது கை யின் பின் பகுதி உணர்விழந்தது.

உடனே ஆங்கில மருத்துவமனைக்கு விரைந்தேன் . அவரும் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு சரி செய்யும் மாத்திரைகளை பரிந்துரை செய்தார். அந்த மாத்திரைகளை வாங்கி 10 நாள் சாப்பிட்டேன். ஆனால் அதற்குள் இடது கை  முழுவதும் உணர்ச்சியற்ற நிலையை உணரத்தொடங்கினேன்.  

பிறகு திருமூலர் வர்மா சிகிச்சை  மையத்தை பற்றி கேள்விப்பட்டு வர்மா சிகிச்சை ஆரம்பித்தேன். அது வாரம் மூன்று முறை  சென்று குறிப்பிட்ட வர்ம புள்ளிகளில் அழுத்தி சிகிச்சை கொடுப்பார்கள் . அவர்கள் கூறியதாவது, மூன்று மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் 25% சரி யாகும் என்று கூறினார். 1 மாதம் சிகிச்சை மேற்கொண்டேன் எந்த முன்னேற்றமும் இல்லை.

கவலை தொற்றிக்கொண்டது. பக்க வாதம்  விடுமோ, காய் இப்படியே ஆகி விடுமோ என்றெல்லாம் பயமாக இருந்தது. அப்போது அகத்தியரிடம் சீவ நாடி கேட்க சென்றேன். அவரோ, இது உனது கர்மா வினை காரணமாகவே வந்து உள்ளது. தாம் கூறும் மருத்துவத்தை மேற்கொண்டால் சரியாகும் , வீண்  கவலை  கொள்ள வேண்டாம், யாம் உன்னை காத்து ரட்சனை புரிவோம் என்று கூறி அதற்குரிய மருத்துவத்தையும் உரைத்தார். அது மிகவும் வீரியமான மருந்து போல. அதற்குரிய மூலப்பொருட்களை கோவை தாமஸ் வீதியில் இல்ல ஒரு பெரிய நாட்டு மருந்து கடையில் சென்று வாங்கி வந்தேன்.  அதுவே சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் செலவானது. பின்னர் அந்த மருந்தை இறை சித்தர் அய்யா அவர்கள் தமது வீட்டிலேயே, நான் வாங்கி கொடுத்த மூல பொருட்களை கொண்டு தயார் செய்தார் . அதுவும் அவர் எங்கேயும் நகராமல் தொடர்ந்து நெருப்பு அடுப்பை கண்காணித்து ஒரு முழு நாள் செலவு செய்து மருந்தை எடுத்தார்.

மிக  சிறிய அளவு மருந்து அது . வெறும் ஒன்று அல்லது இரண்டு கிராம் தான் இருக்கும். அதனை வைத்து சிறிது நெய் மற்றும் தென் ஒரு சொட்டு விட்டு கையையால் குழைத்து அந்த கலவையை காலை வெறும் வயிற்றில், சுமார் 11 நாள்  உண்டு வர சொன்னார்.

நானும் அவ்வாறே செய்து வந்தேன். சுமார் ஒன்பது நாள் வரை எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் பத்தாவது நாள் 50% கை சரியாகியது. 11 ஆம் நாள் முழுமையாக கை பழையபடி ஆகியது. அகத்தியரின் கருணையே கருணை.

அகத்தியர் ஆசி எல்லாமே ராசி !! அகத்தியரை நம்பு, அவர் கொடுப்பார் தெம்பு !!!


சிவாய நம, குருவே போற்றி.