Sunday 27 August 2017

புகைப்படம் எடுக்கும் முன் யோசியுங்கள்


புகைப்படம் எடுக்கும் முன் யோசியுங்கள்!

நம்மில் பலரும் வெளியிடங்களுக்கு செல்லும் போது கூடவே புகைப்பட கருவியை எடுத்துக் கொண்டு செல்வோம். செல்லும் இடத்தில் நமக்கு தோன்றுகிற விதத்தில் புகைப்படங்களை எடுப்போம். கோவிலுக்கு சென்றால், மகான்களின் சமாதிக்கு சென்றால், பெரியவர்களை கண்டால், அத்தனையையும் புகைப்பட கருவியில் உள்வாங்கி நம் தேடல்களின் அங்கமாக சேமிப்பில் பாதுகாப்போம்.  இது சராசரி மனிதனின் எண்ணம். ஒரு விஷயம் தெரியவந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நம்மை போன்று சாதாரண வாழ்க்கையை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்து, சாதுவாக, சன்யாசியாக, முனிவராக, ஏன் சித்தர் பாதையில் பயணிப்பவராக இருப்பவர் ஒருவரை சந்திக்க நேர்ந்தால், புகைப்படம், ஒளி நாடாவில் பதிவு செய்ய விரும்பினால், அவர்களிடம் விண்ணப்பித்து, முன் அனுமதி பெற்றபின் எடுங்கள்.  அவர்கள் எப்போதும் அனுமதி தருவார்கள் என்று நினைக்க கூடாது. அப்படிப்பட்ட மகான்களை அவர்கள் அனுமதி இன்றி, அல்லது அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும், அவர்கள் அறியாமல் கூட புகைப்படம் எடுத்திருப்பீர்கள்.இதில் தெளிவாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

மகான்களுக்கு அவர்கள் செல்லும் பாதையில் முன்னேற முதல் உத்தரவு என்பது "சுயமுகம் மறக்கவேண்டும்" என்பதாகும். தன் முகம் மறந்தால் தான் முன்னேற முடியும்.அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் வெளியே சொல்லாமலே அதை தினமும் பயிற்சி செய்வார்கள்.அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் உள்ளே புகுந்து புகைப்படம் எடுத்தால், அவர்கள் த்யானத்தை கலைக்கிற மிக கொடிய பாபமாக நம் மீது விழும். விலகி செல்பவனை இந்த உலக இகபர வாழ்க்கைக்கு திருப்பி இழுத்து, தானும் பாபத்தை செய்து அவரின் வழிப்பாதையையும் மாற்ற முயற்சி செய்வானேன். பலருக்கும் இது புரியாது. ஒரு புகைப்படம் எடுத்தால் எப்படி அவரை கெடுத்ததாகும் என்று நினைக்கலாம். நம்மை போல் சராசரி மனிதனாக இருந்த ஒருவர், தன்னை இழக்க துணிந்து முன்னேறும் போது, நம் ஆசைகளையே அடுத்தவர் தடுக்ககூடாது என்று எண்ணுகிற நாம், அடுத்தவரின் முயற்சியை தடுக்கிற உரிமையை யார் நமக்கு கொடுத்தார்கள் என்று யோசிக்க வேண்டும்.புண்ணிய ஸ்தலங்களுக்கு, மகான்களின் சமாதிக்கு செல்லும் போது ஒரு நிமிடம் த்யானித்து கண்ணை மூடி அந்த சூழ்நிலையை உள் வாங்குகிறோமே, அப்பொழுது ஏதோ ஒரு மாற்றம் நம் உள் நிகழ்கிறதே அது என்ன? எப்படி நிகழ்கிறது என்று என்றேனும் ஆராய்ச்சி செய்திருக்கிறோமா? அது போலத்தான் பெரியவர்களை புகைப்படம் எடுக்கும் போது அவர்கள் கவனம் கலைக்கப்படும்.

இனிமேல் எனும், அனுமதி பெற்றுவிடுங்கள்! தவிருங்கள், அதுவே நாம் நமக்கும், பெரியவர்களுக்கும் செய்கிற மிகப்பெரிய சேவை. ஏன்? நாளை நீங்களே காலத்தின் கட்டாயத்தால் அந்த மகானின் நிலையில் அமரும்போது தான் அதை புரிந்து கொள்ளவேண்டுமா? இன்றே உணர தொடங்குங்கள்!


பின்னர் ஒருநாள், புகைப்படம் எடுத்தது அவர்கள் கவனத்துக்கு சென்றால், அன்று முதல், நாம் காலில் சக்கரம் கட்டிக்கொண்டுதான் ஓடவேண்டிவரும். எதற்கும் நேரமே கிடைக்காதபடி பண்ணிவிடுவார்கள். ஏன்? மறுபடியும் ஒருமுறை அவர்களை சந்திக்க விரும்பினால் அது முடியாமல் போய்விடும்! அப்படியும் அவர்களால் செய்ய முடியும்.

ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்
அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583


No comments:

Post a Comment