என்னுடைய ஜீவ நாடி
அருள் பெருபவர் : தி. இரா. சந்தானம், கோவை, ph. 91760
12104
நாள் நேரம் : 26 சனவரி 2019,
26.01.2019, மதியம்,
இடம் : அகத்தியர் ஜீவ நாடி, பொகளூர்,
மேட்டுபாளையம் to அன்னூர் சாலை, கோவை மாவட்டம்
நாடி வாசிப்பவர் :
குருஜி இறைசித்தர், ph. 95850 18295
***************************************************************************************************************
அகத்தியர் அருளுரை :
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீராய் திருவையாராய் போற்றி
எம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக்கடலே போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
நீராகி நின்ற நிழலே போற்றி
நேர்வை ஒருவரையும் நில்லாய் போற்றி
காற்றாகி வரும் முகிலே போற்றி
என் கயிலை மலை வாழும் எம் அய்யனே போற்றி போற்றி
சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து அகத்தியன் யான்தனே அருள்தனை உரைப்பேன்
கேள் அய்யனே
இன்னவனின் மலை யாத்திரைதனை யாம் கண்டோம் மனமகிழ்ந்தோம்
உமக்கும் விஸ்வரூப தரிசனத்தை உமக்கு யாம் தந்தோம்
__________________ உமக்கு காட்சி தந்தோம், மனமகிழ்ந்தாய்,
பின்பு
உனை சுற்றி கருட வடிவிலே வந்து மூன்று முறை உனை சுற்றி ஒலி தனை
எழுப்பிச்சென்றேன். அறிவாய் நீ.
பின்பு
உனக்கு வாக்குரைப்பேன் என்று அன்றுரைத்தேன்,
உரைத்தேனே உன்னிடம் அறிவாயா நீ...
என் அய்யன் வீற்றிருக்கும் நான் நிலை பெற்ற பத்மநாத சுவாமி ஆலயம்
தன்னிலே உமை யாம் உரைத்துச்சென்றோமே.
ஒரு வயோதிகன் வடிவில் வந்து உரைத்தோமே.
உமக்கு, யாம் சஞ்சாரம் செய்யும் பொதிகைமலை உச்சியில் தன்னிலே
வானவில்லாக உனக்கு காட்சி தந்தேன், அறிந்தாயா நீ..
அங்கும் ஒரு வயோதிகனாக வந்து உனை ஆசீர்வதித்தேனே
பச்சை நிறத்தில் முன்டிட்டு உமக்கு யாமே ஒளி ரூபத்தில் காட்சி தந்தோம்
உன்னை சற்றி ஒரு கூட்டம் கூடும் அப்பா
மீண்டும் ஒர் நிலை நீ அடைவாய்
செய் தொழில் தன்னிலே மேன்மை நிலை நீ உயரப்பெருவாய்
இன்னவன் தேகத்திலும் கொண்டவள் அவள் தேகத்திலும் இன்னல்கள் தோன்றி
மறையும் அப்பா
கர்மமது விட்டொழியும் கலங்காதே என் மழலையே
யாம் உமை முழு சித்த நிலைக்கு யாம் அழைப்போம்
கொண்டவளுடன் வாழ்வில் இனைந்து சேவை தனை செய்
(தனிப்பட்ட
முறையில்எமக்குரைத்த பரிகாரம் பதிவிடுவதற்கு இல்லை, எனவே தவிர்க்கப்பட்டுள்ளது)
வெள்ளி என்றுரைக்கும் நன்னாளிலே __________________
மந்திரம் அதை __________________ ஜெபி, __________________
திசை நோக்கி அமர்ந்து.
ஞாயிறு என்றுரைக்கும் நன்னாளிலே கொண்டவளுடன் சேர்ந்து என் அப்பன், __________________
நிலை அமர்ந்த __________________ ஆலயம் சென்று படித்துறையில்
வீற்றிருக்கும் __________________, என் அய்யன் உள் ஆலயம் சென்று அகலுக்கு
நெய்யிட்டு உள் பிரகாரம் அதை __________________ முறை கொண்டவளுடன்
வலம் வந்து அங்கிருக்கும் __________________ அதை தானம் கொடு,
கொண்டவள் கரத்தால். __________________
மனம் தளராதே தூயவனே, கொண்டவளுடன் நல்லுறவு கிட்டுமய்யா
மீண்டுமோர் நிலைக்கு யாம் உமை அழைப்போமே
ஒரு முறை அத்திரி மலைக்கு சென்று அத்திரி மகரிஷியும் தாய் அனுசூயா
தேவியையும் தொழுது வா. உன் மனதில் இருக்கும் என்ன அலைகள் மாற்றம் பெறும்.
உனது ஈன்றவள் தேகம் தனிலே, உற்று நோக்கு.
ஈன்ற மழலைகள் வாழ்வு சீர்பெறும் அப்பா
உமக்கு யாம் __________________ காட்சி தந்தோம், __________________
தன்னில். திரை வடிவில் சொல்லாதே ரகசியம் கார்.
வாழ்வு சிறக்கும். முற்றே.
*************************************************************