தமிழ் யோகம்
வலி வளி வழி நெறி :-- பகுதி ஐம்பத்தி மூன்று
*****************************************************************
தன் இணைப்பும், தன் இழப்பும்
தமிழின் தகர மெய்யான தன்னிலையின் பெரும் சிறப்பினை அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது... உலகியல் துறைகள் அனைத்தையும் தாங்கும் இந்த தன்னிலைக்கு மேன்மை புரியாமல் அவைகள் அனைத்தும் தன்னிலைக்கு எதிராக செயல் படும் போது தன்னிலை முற்றிலும் உடைந்து அவைகள் அனைத்தும் நொறுங்கி தனக்கு தானே அழிவினை ஏற்படுத்தி கொள்கின்றன... மதத்தை பற்றி பேசக் கூடாதது தான்.. ஆனால் மதங்களின் துரோகம் இந்த தன்னிலைக்கு மிக இரகசியமாக மிக பலமாக வன்மையாக எல்லாவற்றையும் விட மிக கொடூரமாக உள்ளது... இதிலிருந்து மீண்டு தமிழாய் மலர வேண்டும் எனில் நமக்குள் ஒரு பெரும் புரட்சிக்கு தயாராக வேண்டும்.. இந்த புரட்சிக்கு நிகரான புரட்சிக்கு உலகியலில் இதுவரை நடந்ததும் இல்லை.. இனி நடக்கப் போவதும் இல்லை... இந்த அக வீரத்திற்கு முன் உலகியல் மா வீரம் என்பது ஈனத்தனமானதே... தமிழின் தன்னிலையின் அக வீரம் மிகவும் வீரியம் மிக்கது... அதில் ஓங்கிய மர்ம யோகிகள் முன் உலகியல் ஈன வீரம் ஒரு தூசியை போல என்பது உண்மையே.. உண்மையே.. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை...
தன் குஞ்சுகளை காக்க சினம் கொண்ட கோழியின் முன் எந்த கழுகும் முன் நிற்க முடியாது... அந்த கோழியின் தன்னிலையில் எழும் அக வீரத்தின் தாக்கம் எந்த கழுகையும் செயல் இழக்கச் செய்து விடும்... ஆனால் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு முன்னால் அக வீரம் இழந்த அந்த கோழியையே கழுகு தூக்கிக் கொண்டு போய் விடும் என்பது எதனால் என்ற மர்மம் உலகியல் ஈன வீரர்களுக்கு புரியவே புரியாது... இன்று உலகியல் ஈன வீரத்தைக் காட்டி காட்டி அதில் சிக்குண்ட தமிழன் அக வீரம் முற்றிலும் இழந்து இன்று அனாதை போல் தன் சொந்த மண்ணிலே இருக்கின்றான்... அகவீரம் இல்லாததால் எழும்பவே முடியாத நிலையில் சோர்ந்த நிலையில் இருக்கும் அவனை இன்னும் எழவே முடியாத படி புற ஈன வீரத்தைக் காட்டி காட்டி தமிழனை முடமாக்கும் காரியங்கள் தமிழ் நாட்டில் மிக கச்சிதமாக தமிழன் என்ற போர்வையில் நடை பெற்று வருகிறது... தமிழகத்தில் தகர மெய்யான தன்னிலையை உணர்வாரும் இல்லை.. தமிழ் அக வீரத்தை பெறுவாரும் இல்லை...
தமிழ் நிலையின் தகர மெய்யான தன்னிலையில் தன்னை இணைத்துக் கொள்ளும் இணைப்பே தன் இணைப்பு.. இதில் தன்னை என்ற சொல் தன் மனமே என்பதை மறக்கக் கூடாது... தன்னில் தானாய் என்பது தன்னிலையில் இணைந்த தான் என்ற மனமே.. தன் என்பது தன்னிலை.. தான் என்பது மனம்.. தான் என்பதை பிரித்தால் த் + ஆன் ஆகிறது.. தன்னிலையான த் என்ற தகர மெய்க்கு வெளியே புற ஆகாயத்தில் சென்று அதனை ஒன்றை மட்டுமே ன் என்ற ன கர மெய்யான முடிவையே முற்றிலுமாய் ஏற்றுக் கொண்ட நிலையாகும்.. அப்படி புறத்திலே சிக்குண்டது என்றுமே ஈனத்தனமான வீரத்தை மட்டுமே உடையது.. குஞ்சுகள் இல்லாத கோழி போல தான் இருக்கும்.. புறத்தே சிக்குண்ட மனம் தகர மெய்யான தன்னிலையில் இணையும் போது கழுகே கண்டு நடுங்கும் குஞ்சுகளை உடைய கோழியாகிறது.. தன்னிலையில் விட்டு விலகி தன்னிலை இழந்த தன் இழப்பு அடைந்த மனம் எவ்வாறு ஈன நிலையை அடைகிறது என்பதையும் தன் நிலையில் இணைந்த மனம் எவ்வாறு அக வீரம் கொண்டு உயர்ந்து நிற்பதையும் கோழியின் உதாரணத்தை வைத்துக் கொண்டு நன்றாகவே தெளிவு அன்பர்கள் பெற முடியும் என உணரலாம்.. அக வீரம் கொண்டு மர்மமான தமிழ் நிலை யோகத்தில் விரைந்து முன்னேறுவோமாக... தன்னிலையில் ஓங்கிய அக வீரத்தால் தரணியை வெல்லலாம்.. அதுவும் தனி அன்பால்..

No comments:
Post a Comment