Sunday, 27 August 2017

11000 ஆண்டுகள் பழமையான சித்தர் குகை.


11000 ஆண்டுகள் பழமையான சித்தர் குகை.
இந்த பயணம் அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை மூலிகைகளை தேடி அல்ல. சுமார் 11000 ஆண்டுகள் பழமையான. அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்த. பலர் சட்டை செய்யாத. சட்டை முனி அவர்கள் தவம் செய்த குகையை நோக்கி. சட்டை முனி சித்தர் தவம் செய்த குகை எங்கு? இருக்கிறது தெரியுமா.
உங்கள் அனைவருக்குமே. மருத மலை தெரியும். அந்த கோவிலுக்கு கீழ் உள்ள. பாம்பாட்டி சித்தரையும் சிலருக்கு தெரியும். அந்த பாம்பாட்டி சித்தரின் குரு யார்? தெரியுமா. அவர் தான் சட்டை முனி சித்தர். அவர் எங்கு? இருக்கிறார் தெரியுமா. மருதமலை முருகனுக்கும் மேல். சுமார் ஒரு மணி நேரம். கரடு, முரடான பாதையில் ஏறி சாகச பயணம் செய்தால் மட்டுமே சட்டை முனி சித்தரை தரிசனம் செய்ய முடியும். அதர்க்கு. அதீத உடல் பலம், உள்ள பலம் இரண்டுமே வேண்டும். இளைஞர்களுக்கு இது ஒன்றும் கடினமான பயணமே கிடையாது.
நான் என் வாழ்வில் இதுவரை பல வலிமையான மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால்? சக்தியை போல் வலிமையான ஒரு இளைஞரை இதுவரை என் வாழ் நாளில் சந்தித்தது இல்லை. இனி சந்திப்பதும் மிக அபூர்வம். யார்? அந்த சக்தி. எனது மிகுந்த மதிப்பிரக்கும், மரியாதைக்கும் உரிய. கராத்தே, குன்பூ, வர்மம், களரி என Martial Arts அனைத்திலும் கை தேர்ந்த. உயர் திரு ஆசான் Rajendran Krishnaraj அவர்களின் சீடர்.
7 வருடங்களாக ராஜஸ்தான் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி பல நாச வேலைகளை செய்த ஒரு பயங்கர கொலை, கொள்ளைக்காரன் கோவையில் தலைமறைவாக இருந்தான். பலமுறை ராஜஸ்தான் போலீஸ் அந்த பயங்கர மனிதனை பிடிக்க முயற்ச்சி செய்தும் அவன் தப்பித்து விட்டான். அவனால் சில போலீஸ்களின் உயிரும் போனது. அந்த திருடன் வீரப்பன் போல் தனக்கு பின்னால் ஒரு படையை வெய்த்து கொண்டிருப்பவன் அல்ல. தனி ஒருவன். ஆனால்? அந்த தனி ஒருவனை பிடிக்க பெரும் போலீஸ் படை அந்த திருடனை தேடி கொண்டிருந்தது. அந்த திருடன் கோவையில் பதுங்கியிருக்கும் தகவல் ராஜஸ்தான் போலீஸ்க்கு கிடைத்ததால். அவர்கள் கோவை வந்தனர். அந்த சமயத்தில். அந்த திருடனை. தனது வர்மப்பிடி மூலம் பிடித்து. ராஜஸ்தான் போலீஸ்சிடம் ஒப்படைத்த வீரமிகு தமிழர் தான். திரு ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்.
இந்தியாவிலேயே முதன்முறையாக நோக்கு வர்மம். [ ஹிப்னாட்டிசம் ] பற்றி மீடியாவில் தெரியப்படுத்தியவர் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ் அவர்கள். பல சிக்கலான கேஸ்களுக்கு விடை காண காவல் துறைக்கு. ராஜேந்திரன் அவர்கள் உதவியும் செய்து இருக்கிறார். மேலும். போதி தர்மர் இந்தியாவில் இருந்து சைனா செல்லும் பொழுது வர்மம் குறித்த நான்கு சுவடிகளை மட்டுமே எடுத்து சென்றார். பின்னர் சீனர்கள். அதை நன்கு டெவலப் செய்தனர். அதே போல் பல நுறு சுவடிகள் நமது நாட்டிலே இன்றும் பத்திரமாக இருக்கிறது என்கிறார். ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்.
தமிழனானேன் என்னும் திரைப்படம் வெகு விரைவில் வர போகிறது. அது வர்மம், களரி முதலான நமது தமிழக வீரக்கலைகளை வெளி நாட்டவர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்தி கொண்டார்கள். நாம் இதுவரை கோட்டை விட்ட விசயங்கள் என்ன? என்ன? நாளைய சமுதாயத்திற்க்கு. இதை நாம் எவ்வாறு? கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை பற்றிய. அற்ப்புதமான கதை. முறைப்படி குன்பூ கலை பயின்ற சதீஷ் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மன்னிக்கவும். தற்காப்பு கலைகள் தெரியாமல் தெரிவது போல் முக, உடல் பாவனைகள் மூலம் நடிப்பது நடிப்பு. சதீஷ். முறைப்படி தற்க்காப்பு கலை கற்றவர் என்பதால். அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை. வாழ்கிறார். இதே படத்தில். உண்மையான வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன். இந்த படத்திலும். வர்மக்கலை ஆசானாக நடிக்கிறார். மன்னிக்கவும் வாழ்கிறார்.
சரி. இப்பொழுது மீண்டும் சட்டை முனிவர் சமாச்சாராதிர்க்கு திரும்புவோம்.
சட்டை முனிவர். போகரின் சீடர். சட்டை முனிவர் பல இடங்களில் கடுந்தவம் செய்து. இறுதியாக. ஸ்ரீ ரங்கம் ரங்க நாதரோடு இரண்டர கலந்தார். சட்டை முனி சித்தர். பல காலம் தங்கி தவம் செய்த குகை தான். மருத மலை முருகன் கோவிலுக்கு மேல் இருக்கிறது.
நான் சட்டை முனி சித்தரை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்ததே திரு ராஜேந்திரன் கிருஷ்ணராஜ் அவர்களால் தான். ஆம் என்னை அங்கு அழைத்து சென்றதே அவர் தான். அப்பொழுது தான். அவரோடு அவர் மாணவரான சக்தியையும். மற்றும் வசந்த் குமாரையும் சந்தித்தேன்.
சட்டை முனி சித்தர் தவம் செய்த அந்த இடத்தில லாரியை விட பெரிய சைஸ்சில் உள்ள பல பாறைகள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வெய்க்கப்பட்டுள்ளது. அந்த பாறைகளின் இடுக்குகளில். சிறிய, சிறிய கர்க்கள் சொருகப்பட்டு உள்ளது. எவ்வளவு பெரிய பயில்வானாலும் அந்த சிறிய கர்க்களை. பாறை இடுக்குகளில் இருந்து எடுக்க முடியாது. இன்னொன்று. நன்றாக தெரிகிறது. அந்த அடுக்கி வெய்க்கபட்ட பாறைகள் தானாக எதோ ஒரு பூகம்பத்தின் பொழுது நடந்தது அல்ல. அவை சித்தர்களால் அடுக்கி வெய்க்கபட்டவைகள். அந்த கர்க்களை அடுக்கி வெய்க்க சித்தர்கள். அணிமா, மகிமா, லகிமா போன்ற அஷ்ட்டமா சித்திகளை பயன் படுத்தியிருக்க வேண்டும். மேலும் பல அதிசய நோய் தீர்க்கும் மூலிகைகள் அங்கே இருக்கிறது.
சட்டை முனி அவர்கள் தவம் செய்த குகைக்கு அருகில் இன்னொரு குகை இருக்கிறது. அந்த குகையில் உள்ள மண்ணில் லிட்டர் கணக்கில் நீரை கொட்டியதை போல் மண் ஈரமாக இருக்கிறது. ஆனால்? மலை உச்சியில் நாங்கள் இருந்த அந்த 3 மணி நேரத்தில் யாருமே அங்கு வரவில்லை. ஆடு, மாடு. அவ்வளவு ஏன்? குரங்குகள் கூட அந்த கரடு, முரடான இடத்திர்க்கு வராது. அத்தகைய இடத்தில் நாங்கள் தியானம், யோகம், உடற் பயிற்ச்சி முதலான பலவற்றை 3 மணி நேரம் செய்தோம். அந்த 3 மணி நேரத்தில். எங்களை தவிர யாருமே இல்லாத பொழுது. அந்த குகை நீர் ஈரமாக இருப்பதை நினைத்து எங்களுக்கு ஆச்சரியம். ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ் அவர்களின் மாணவர்களான சக்தி, வசந்த் இருவரும். அந்த மண்ணையும். அங்கே பாதி எரிந்த நிலையில் இருந்த குச்சிகளையும் சேகரித்து கொண்டனர்.
பின்னர் நாங்கள் கீழே வந்து பாம்பாட்டி சித்தரை தரிசித்து. முருகனை தரிசித்து மருதமலையில் இருந்து கோவை இடையார் பாளையம் வந்து டீ குடித்த பின்னர் அந்த மண்ணை பார்த்தால். அப்பொழுதும் அந்த மண் ஈரமாக இருக்கிறது. 1.30 மணி நேரம் கழித்தும் பிழிந்தால் தண்ணீர் வரும் அளவு ஈரம். அந்த அதிசய மண்ணை சேகரித்து நான்கு நாட்கள் ஆகிறது. இன்னமும் அந்த மண் ஈரமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அந்த அதிசய மண்ணை நான் சேகரிக்காமல் இருந்து விட்டேனே என்று இப்பொழுது வருத்தப்படுகிறேன். ஒன்றும் பிரச்சனையல்ல. வரும் ஆகச்ட் மீண்டும் நான் கோவை செல்ல போகிறேன், அப்பொழுது. சென்ற முறை நான் சந்திக்க முடியாமல் போன என் கோவை நண்பர்கள், தரிசிக்க முடியாமல் போன சில சித்தர் பீடங்களை தரிசிக்க போகிறேன். அப்பொழுது அந்த அதிசய, புனித மண்ணை பார்சல் செய்து சென்னை கொண்டு வந்து விடுவேன்.
பல இளைங்கர்களுக்கு திரு ராஜநேதிரன் கிருஷ்ணராஜ் அவர்கள். தற்க்காப்பு பயிற்ச்சிகளை அளித்து கொண்டிருக்கிறார். இப்பொழுது அமெரிக்க மாணவர்களுக்கு வர்மம், களரி பயிற்ச்சி அளிக்க ராஜேந்திரன் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு அழைப்பு வந்து இருக்கிறது. யோகக்கலை ஏற்க்கனவே சென்ற 30 ஆண்டுகளுக்குள் வேகமாக உலகம் முழுவதும் பரவி விட்டது. அதே போல். வர்மம், களரி இரண்டும் உலக அளவில் பிரபலம் ஆவதர்க்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து உள்ளன

ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta




No comments:

Post a Comment