Sunday, 27 August 2017

அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்


அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில் ,

ஊர் : நெடுங்குணம்

இருப்பிடம் :
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும்,ஆரணி மற்றும் வந்தவாசியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், சேத்பட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது நெடுங்குணம். ஊரின் மெயின் சாலையிலேயே கோயில் அமைந்துள்ளது.
சுகபிரம்ம முனிவர் தவம் செய்ய ஒரு மலையைத் தேர்ப்தெடுத்தார், அந்த மலை சிவசொருபமாகவே காட்சி தந்ததை கண்டு சிலிர்த்தார்.சிவனாரை எண்ணி கடும் தவத்தில் மூழ்கினார். முன்னதாக விஷ வண்டுகளோ பூச்சிகளோ தாக்காமல் இருக்க தான் அமர்ந்திருக்கும் இடத்தை சுற்றி அரண் அமைக்கவும், தண்ணீரால் சுத்தம் செய்யவும் எண்ணினார். மலை முழுவதும் சுற்றியும் தண்ணீர் கிடைக்க வில்லை.இறைவனை நோக்கி மனம் உருகிப் பிரார்த்தித்தார். அங்கே தண்ணீர் மெல்ல ஊற்றெடுத்தது.அந்த நீரை எடுத்துப்பருகினார். சிவலிங்கம் ஒன்றைப்பிரதீஷ்டை செய்து அதனை அபிஷேகித்தார். ஈசனை வணங்கிவிட்டு கடும் தவத்தில் மூழ்கினார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் தம்பதி சமேதராகக் முனிவருக்கு காட்சி தந்தார்.தனது மனக்குறையை தீர்த்து வைத்த சிவபெருமானை வணங்கி தொழுதார் சுகபிரம்மர்.
காலங்கள் ஓடின! சோழமன்னன் ஒருவன் இந்த வழியாக வந்த போது மலையைக்கண்டான்.மலை மீது முனிவர்கள் பலர் சிவபூஜையில் இருப்பதைக் கண்டான்.அவர்களை வணங்கி இந்தமலையின் மாண்பும்,சுகபிரம்மருக்கு ஈசன் காட்சி தந்தது குறித்தும் அறிந்தான்.இதில் சிலிர்த்த சோழ மன்னன் மலையடிவாரத்தில் கோயில் எழுப்பினால்,ஊர்மக்கள் வணங்கிட வசதியாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டு அப்படியே கோயில் எழுப்பினான். ஸ்வாமிக்கு தீர்க்காஜலேஸ்வரர் என்னும் திருநாமமும் சூட்டி மகிழ்ந்தான்.
பாதாள லிங்கம்: இந்த ஆலயத்தில் பாதாள லிங்கேஸ்வரரண சன்னதி ஒன்று உள்ளது.முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம்.இங்கே அழகு கொஞ்சும் ஸ்ரீ சுப்பிரமணியரின் விக்கிரத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.


ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta



No comments:

Post a Comment