Sunday 27 August 2017

தமிழ் யோகம் என்றால் எப்படி இருக்கும்

மரம்யோகி அய்யா அவர்களின் பதிவிலிரு து.......கிழே கொடுக்கப்பட்டுள்ளது

வலி வளி வழி நெறி:-- பகுதி இருபத்தி ஒன்று
************************************************

கணிக்கவும் கணக்கிடவும் முடியாத மன விளையாட்டு

வெளிக்காற்றின் சுவாசம் இன்றி இருப்பது மண்ணில் பல நாட்கள் புதைந்தோ நீரில் சில நிமிடங்கள் மூழ்கியோ இருக்கும் கலை கூத்தாடிகள் காட்டும் வித்தை அல்ல... அவர்கள் செயல் பாடு அற்ற சவ நிலையில் தான் அவ்வாறு இருக்கமுடியும்... அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார அதிகார, உடல் பலத்தை பெற முடியாதவர்கள் போலவே இருப்பர்... செயலற்ற நிலையில் சவ நிலைக்கு ஒத்த நிலையிலே மட்டும் இருப்பர்.. பெரும்பாலும் உடல் ஆற்றல் குறைபாடு அதிகமாகவே இருக்கும்... வெளிக்காற்றின் சுவாசத்தை ஒருவாறாக பயிற்சியின் மூலம் கட்டுப் படுத்தி தான் வைத்து இருப்பார்கள்.. ஆனால் உள் அமிர்த காற்றின் சுவாசத்தை சற்றும் அறியாதவர்களாக தான் இருப்பார்கள்... அதை போன்றதொரு கலைக் கூத்து பயிற்சி அல்ல இந்த மர்ம யோகப் பயிற்சி... சிலர்  எதற்கு இந்த கலையை கற்று தருகிறீர்கள் என கேட்கலாம்...அதனால் என்ன பயன் எனவும் கேட்கலாம்... நம் பதிவுகளை படிக்காமல் புரியாமல் பேசுபவர்கள்... வகுப்பில் கலந்து கொள்ளும் அன்பர்களில் பதிவுகளை அவசர கோலத்தில் படிக்காமல் லைக் கொடுப்பவர்கள் அநேகர்... படித்து விட்டு கௌரவ பிரச்சனை காரணமாக லைக் கொடுக்காதவர்களும் உண்டு...

நம் பயிற்சி கலை கூத்தாடிகள் பயிலும் பயிற்சி அல்ல.. தீரம் திறன் திடம் உள்ள நிலைக்கு மிக விரைவாக அழைத்துச் செல்லக் கூடியது... புல்லர் கூட்டத்தால் சதி திட்டமிட்டு நெடுங்காலமாக அழிக்கப் பட்ட ஒன்று.. மீண்டும் தழையெடுக்க விடாமல் ஏதோ வேறு ஒன்றை காட்டி மயக்கத்தில் ஆழ்த்தும் பயிற்சிகளை பிரபலபடுத்துவதின் மூலம் அமுக்கி வைக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது... பதஞ்சலி யோகமே முடிவில் பல காலம் பயின்று தோன்றா நிலைக்கு முயன்று முடிவில் முக்தியில் அதனை அடையாமலேயே தோல்வியை கொடுத்துக் கொண்டு இருக்கிறது... ஆனால் எடுத்த எடுப்பிலே தோன்றாநிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியது நமது மர்ம யோகமாம் தமிழ் யோகம்...   அதற்கு உறு துணையாக இருப்பது பொது நடம் செய்யும் அண்ட ஆற்றலின் தனி நடனத்தால் ஒவ்வொரு உயிரிலும் மையம் கொண்ட அக குருவே... தமிழ் யோகத்தை தவிர ஏனைய உலகியல் யோகங்கள் அக குருவை பற்ற முடியாமல் போனது அகக் குருவின் மர்ம நிலையே.. தோன்றா நிலையிலே இருந்து கொண்டு தன் தனி நடனத்தால் தனி பெரும் கருணையால் ஒவ்வொரு உயிரையும் காத்துக் கொண்டு இருக்கும் அந்த அந்த அககுருவின் பணி அமைதி தான்.. அமைதி என்பதை மௌனமான சூழ்நிலை என்ற பொருள் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொண்டது... ஆனால் அமைதி என்ற செயல்பாடு பற்றி ஒரு சிலரே அறிவர்.. தி என்ற திட நிலையை அமைப்பது தான் அமைதி... அகக்குரு நம்முள் சதாகாலமும் அமைதி என்ற தொழிலை செய்து கொண்டே இருக்கிறது... அந்த அமைதி என்ற தொழிலை திறம் பட செய்ய தோன்றா நிலை மிகவும் அவசியமாகிறது... அந்த தோன்றா நிலையில் மட்டுமே அகக்குரு மென்மையின் உயர்ந்த நிலையில் உள்ள அருள் ஆற்றலை கனல் ஆற்றலாக மாற்ற இயலும்.. கனல் ஆற்றல் தான் உயிர் ஆற்றல்.. இந்த நிலையில் மன கற்பனை தோற்றங்கள் உருவாகும் போது தோன்றா நிலையில் அத்து மீறி புகும் ஏதாவது தோற்றம் உடைய எண்ணங்கள் அருள் ஆற்றலின் கனல் மாற்றத்தை சிதைத்து விடுகிறது.... இதனால் உயிர் ஆற்றலான கனல் ஆற்றல் உருவாவது தடுக்கப் படுகிறது... இதனால் தான் தோன்றா நிலையின் அவசியம் முக்கியமானதாக தமிழ் யோகத்தில் கருதப் படுகிறது... ஆகையால் தோன்றா நிலையை பலமாக அமைப்பதற்கென்றே தமிழ் யோகம் அமைக்கப் பட்டு உள்ளது... வேறு எந்த யோகமும் இந்த அதி அவசியமான நுணுக்கத்தை சொல்ல முடிவதில்லை... அவை அனைத்தும் தோற்ற நிலைகளில் மட்டுமே மையம் கொண்டுள்ள மனதை செம்மை படுத்த முயன்று முயன்று தோற்றுப் போய் கொண்டே இருக்கின்றன...

நம் மர்ம யோகப் பயிற்சியாளர்கள் அரை மணி நேர அமர்தலின் போது, பல வகையான உடல் மாற்றங்களை உள்ளே கவனித்து கவனித்து ஏதோ மிகப் பெரிய நிலை அடைந்து விட்டது போல் கற்பனைகளை வளர்த்து மனதால் தோற்ற நிலைகளை பிடித்து தோன்றா நிலைக்கு பங்கம் ஏற்படும்படியான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.. எதையும் பொருட்படுத்தாமல் சூரிய கலையில் அகப்படும் அந்த தோன்றா நிலையை எப்பொழுதும் பலப் படுத்தவோ காப்பாற்றவோ முயல வேண்டும்... பயிற்சியின் சமயம் உடல் அதிர்வுகள் ஊரல்கள், உள் அசைவுகள் எதையும் பொருட் படுத்தக் கூடாது.. திடீரென நம் விருப்ப தெய்வம் தோன்றினாலும் அதையும் பொருட்படுத்தக் கூடாது.. நம் மனம் தன் ஆதிக்கத்தை எந்த வகையிலாவது நிலை நாட்டவே பார்க்கும்.. நம் விழிப்பு நிலையால் மிக கவனமாக இருக்க வேண்டும்.. ஒரு நாள் ஒரு வேளை பயிற்சி தவறி விட்டால் அதற்காக வருத்தப் படும் மனம் இனி அடுத்தப் பயிற்சிக்காவது தன்னை ஆயத்தப் படுத்த முனைவதில்லை... தவறி விட்ட வேளைக்கு வருத்தப் படும் மனம் அடுத்த வேளைக்கும் தவறி போகவே முனையும்.. இப்படி மனதின் விளையாட்டுக்களை கணிக்கவும் முடியாது கணக்கிடவும் முடியாது...

அடுத்தப் படியாக மனம் செய்யும் பெரும் தவறு ஒவ்வொரு சுவாசத்திலும் அகக் குருவின் நேரமான அந்த இரண்டரை வினாடிகளில் தன் மூக்கை நுளைப்பது.. அந்த இரண்டரை வினாடிகளில் நடக்கும் மர்ம யோகம் யாராலும் ஏன் அந்த சர்வ வல்லமை வாய்ந்த ஈசனாலும் புரிந்து கொள்ள முடியாது... எல்லோரும் ஈசனை நோக்கி தியானம் பண்ணுகின்றோம்.. அந்த ஈசன் எதை நோக்கி தியானம் பண்ணுகின்றார் ?... விடை எந்த மதத்திலும் இல்லை.. விடை மர்ம யோகத்தில் மட்டுமே உள்ளது... யாராலும் புரிந்து கொள்ள முடியாத அகக் குருவின் செயல் பாட்டை அப்படியே புரியாததாகவே ஏற்றுக் கொள்ளும் தியானத்தை தான் ஈசன் பண்ணுகின்றார்... அப்படி ஈசன் அதை புரிந்து கொள்ள முயன்றால் தன் தெய்வ சக்தியை இழந்து ஈசன் நிலையிலிருந்து நழுவி மனித தரத்திற்கு உலகில் அவதாரமாக தோன்ற வேண்டிய அவல் நிலை தான்...

நாம் எல்லோரும் புரியாத அகக் குருவின் செயல் பாட்டை புரிந்த கொள்ள முயன்றதின் விளைவாக தரம் தாழ்ந்து மனிதனாய் உலகில் பிறந்து இருக்கின்றோம்.. மிக உயர்ந்த தியானம் முதலில் அககுருவின் புரியாத, யாராலும் புரிந்து கொள்ள முடியாத, புனித அற்புத செயல் பாட்டினை அப்படியே புரியாததாகவே ஏற்றுக் கொள்வது தான்... தோற்ற மாயைகளை உருவாக்கும் மத கோட்பாடுகள் அனைத்தும் அகக்குருவுக்கு எதிரானவை.. இதிலே கடவுளையே கண்ணால் காட்டுவேன் என புறப்படும் போலி குருமார்களின் அட்டகாசம் உலகில் ஒருபக்கம்...

இப்பொழுது அரை மணி நேர அமர்தலின் குறிக்கோளை நன்றாகப் புரிந்து இருக்கலாம்.. பயிற்சியில் மனதின் செயல் பாடுகள் அனைத்தும் அகக் குருவின் செயல்பாட்டிற்கு குறுக்கே நிற்காமல் நாம் பார்த்துக் கொள்வதே... அதற்கு மனம் அந்த அரை மணி நேரத்திலாவது தோன்றாநிலையை கண்டிப்பாக பற்றிக் கொள்ள வேண்டும்.. இல்லையேல் எமன் நம்மை பற்றிக் கொள்வான்.. உயிர் வாழ, உயிர் பிழைக்க உயிர் தழைக்க அந்த அரை மணி நேர அமர்தல் மிக அவசியம் ஆகிறது... தோன்றா நிலையின் தரத்தை மேன்மை படுத்தவும் அதில் அககுரு அளவற்ற ஆற்றலை உருவாக்கவும், நிறைநிலை மனித தரத்தை அடையவே மதி விதி பதி ஆதி சுவாசம் படிப்படியாக முறைப் படுத்தப் பட்டு உள்ளது.. அமைதி என்ற சொல்லை திருப்பி போட்டால் தீமை என்றாகிறது.. தகர குறிலோடு அகரம் சேரும் போது தகர நெடிலாகிறது.. அமைதியை மாற்றினால் தீமையே... அமைதி செயல்பாட்டினை செய்யும் அகக்குரு வாழும் தோன்றா நிலைக்கு எந்த வகையிலாவது பங்கம் விளைவிக்கும் மனதின் செயல் பாடுகள் தீமையையே தரும்.. அகக்குரு உருவாக்கும் கனலே அமிழ்து.. அமிழ்தே தமிழ்.. அமிழ்தினை பெறுவதே தமிழ் யோக நெறி..

No comments:

Post a Comment