Wednesday, 30 August 2017

தாந்த்ரீக பரிகாரம்

திக்கு திசை தெரியாமல் தவிப்போருக்கு..



பல சோதனைகள் வந்து, பல கஷ்டங்களை கடந்து முடிவில் அடுத்தது என்ன என்று எந்த வழியும் பிறக்காமல் ஒரு சந்தர்ப்பம், பலரின் வாழ்வில் இருந்து வரும் ஒன்று. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கீழ்க்கண்ட பரிகாரத்தை தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர, அடுத்த கட்டத்திற்கு செல்லும் பிரகாசமான நல்ல வழி பிறக்கும். இதை ஆரம்பிக்க நாள் நேரம் பார்க்க தேவையில்லை.

ஒரு புதிய பூட்டை (நீங்களோ அல்லது கடைக்காரரோ திறந்து பார்க்கக்கூடாது ) வாங்கி வீட்டில் முருகன் படத்தின் முன் வைத்து உங்கள் சூழ்நிலையை விளக்கி நன்கு மனமுருக வேண்டவும். பின்பு பூட்டை கையில் எடுத்து 108 முறை சாவி கொண்டு திறந்து மூடவும்.ஒவ்வொரு முறை பூட்டு திறக்கும் பொழுதும் "முந்து முந்து முருகவேல் முந்து" என்ற மந்திரத்தை கூறவும். முடிந்ததும் முருகரின் படத்தின் அருகில் திறந்த நிலையிலே விட்டு விடவும். 45 நாட்கள் தொடரவும். பூட்டை நிரந்தரமாக திறந்த நிலையிலேயே படத்தின் முன் விட்டு வைக்கலாம். வாழ்வில் வேறு ஏதேனும் குழப்பமான சந்தர்ப்பம் வருமானால் திரும்ப செய்து பயன் அடையலாம். பல்வேறு சூட்சுமங்களை உள்ளடக்கிய பரிகார முறை இது.

No comments:

Post a Comment