Wednesday, 30 August 2017

மகத்துவம் பொருந்திய அகத்தியர்

மகத்துவம் பொருந்திய அகத்தியர் முனிவர்
முற்று பெற்ற முனிவர் ஆவார். "ஓம்
அகத்தீசாய நம" என்று நாம ஜெபம் செய்தால்
நாம் செய்த பாவங்கள் எல்லாம் பொடிப்
பொடியாகி விடும்.

நாம் மேற்கொள்ளும் விவசாயம், வியாபாரம்,
தொழில், உத்தியோகம், தடையில்லாமல்
நடக்கும். செல்வமும் பெருகும், தொட்டது
துலங்கும், உடல் ஆரோக்கியமும் இருக்கும்,
பண்புள்ள புத்திரபாக்கியம் தோன்றும்,
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.
ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய சிறப்பறிவு
உண்டாகும்.
நமக்கு அமைந்த இந்த தேகம் இயற்கை
கடவுளின் கருணை என்று எண்ணுகின்ற
அறிவு உண்டாகும். நமது உடம்பில்
உண்மையும் பொய்யுமாக கலந்துள்ளது.
பொய்யை ஏன் சேர்த்து அமைத்தான் என்றால்
பொய் நீங்காமல் மெய்யாகிய ஒளி தேகம்
தோன்றாது. அதற்குத்தான் நெல்லில் உமி
தவிடு வைத்ததுபோல் பொய்யையும்
மெய்யையும் உடம்பில் சேர்த்து
வைத்திருக்கிறான்.
உமி நீங்கினால் அரிசியாவதுபோல் பொய்
உடம்பு நீங்கினால் மெய் உடம்பு
வெளிப்படும். மெய் உடம்பு
வெளிப்படுவதற்கு ஒரே வழி பசியாற்றி
வைத்தலும் உருகி தியானிப்பதும்தான்.

#குறிப்பு :-
---------

1. நெல்லில் உமி நீங்கினால் முளையாதது
போல காமதேகம் நீங்கினால் பிறவி அற்றுப்
போகும்.

2. பொய் உடம்பாகிய காமதேகம் நீங்குவதற்கு
மெய் உடம்பாகிய ஒளிதேகம் பெற்ற ஆசான்
அகத்தீசர் ஆசி இருக்க வேண்டும். மெய்
உடம்பாகிய ஒளிதேகம் பெற்றவர்களுக்கு
மரணமில்லா பெருவாழ்வு உண்டாகும்.
மேலும் ஆக்கல், காத்தல், அழித்தல்,
மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும்
செய்வார்கள். அவர்களே எல்லாம் வல்ல பரப்
பிரம்மம் ஆவார்கள்.
ஆசான் அகத்தீசரை பூஜிப்போம், ஆசி பெற்று
இன்புற்று வாழ்வோம்.
இதில் உள்ள கருத்துக்கள் வேதத்தின்
சாரமாகும்.

அகத்தீசனை பூஜித்தால் அனைத்தும் சித்தி,
எல்லாம் வல்ல பரப்பிரம்மமே பரமான்மாவாக
உள்ளது.

பரமான்மாவின் ஒரு பகுதியே
ஜீவான்மாவாகும். பரமான்மா என்பது எங்கும்
நீக்கமற இயக்குகின்ற காற்றாகும். அதில் ஒரு
பகுதியே நமது ஆன்மாவின் மூச்சுக் காற்றாக
உள்ளது. அந்த ஆன்மா தங்கியுள்ள இந்த
உடம்பில், எல்லாம் வல்ல பரம்பொருள்
அடங்கியுள்ளது. தேகம் காமதேகம்
என்பதனால் நமக்குள் இருக்கும் பரம்பொருளை
அறிய முடியாமல் உள்ளது.

ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால்
முதுபெரும் தலைவன் ஆசான் அகத்தீசனை
பூஜை செய்து ஆசி பெறுகிறார்கள். ஆசான்
அகத்தீசன் ஆசியால் ஜீவான்மா பற்றியும், பரப்
பிரம்மமாகிய பரமான்மா பற்றியும் அறிந்து
கொள்கிறார்கள்.

அறிந்து கொண்டு ஆன்மாவை மாசுபடுத்தும்
இந்த காமதேகத்தை ஆசான் துணை கொண்டு
அணு அணுவாக காமதேகத்தை நீத்து
ஜீவான்மாவே பரப்பிரம்மமாக ஆகிவிடுவார்கள்.

நம்முள் உள்ள ஜீவான்மா என்று சொல்லப்பட்ட
அணு மிகப்பெரிய பிரம்மாண்டமான ஒரு
ஒப்பில்லா பேரொளியாக மாறுகிறது. அந்த
ஒளியைக் காண்பதுவே பேரின்பம் அல்லது
முக்தி அல்லது வீடுபேறு ஆகும்.
இதை ஆசான் கருவூர் முனிவர், குருபக்தியால்
தான் வீடு பேறு அடைய முடியும் என்பதை
அறிந்து தினமும் தடையில்லாமல் காலை,
மாலை அகத்தீசனை பூஜை செய்து ஆசி
பெற்றுள்ளார்.

யார் ஒருவருக்கு எத்தனை இடையூறுகள்
வந்த போதிலும் தடைபடாமல் ஆசான்
அகத்தீசனை பூஜை செய்து வந்தால் பாவ
புண்ணியத்தை அறிந்துகொள்ள முடியும்.

பாவ புண்ணியத்தின் தன்மையை
அறிந்துகொண்டவர்கள் நிச்சயமாக
ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.

தொடர்ந்து பூஜைசெய்து வந்தால்
உயிரினங்களுக்கு காம தேகம் வருவதற்கு
காரணம் என்ன என்று அறிந்து இடகலையாகிய
சந்திரகலையையும், பிங்கலையாகிய
சூரியகலையையும், புருவமத்தியாகிய
சுழிமுனையில் ஆசான் அகத்தீசன் ஆசியோடு
இடகலையையும், பிங்கலையையும் சேர்த்து
ரேசித்து, பூரித்து, புருவமத்தில் கும்பித்து
ஸ்தம்பித்துக் கொள்வார்கள்.

ஸ்தம்பித்தால் உடல் மாசு நீங்கும். பிறகு தச
நாதமும் தோன்றும், தோன்றுவதோடு அமிழ்த
பானமும் சிந்தும்

No comments:

Post a Comment