குழந்தை உயிருடன் பிறக்கிறதா, உயிர் இல்லாமல் பிறக்கிறதா?
By டாக்டர் கனகசபாபதி
தாயின் கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளியே
வருகிறது. குழந்தை வெளியே வந்த பிறகுதான் முதல் மூச்சுக்காற்று அந்தக் குழந்தையின்
சுவாசப்பையில் இறங்குகிறது. அந்த முதல் சுவாசத்துக்குப் பிறகுதான் அந்தக்
குழந்தைக்கு உயிர் வருகிறது. அதாவது, குழந்தை பிறந்தது முதல்
சுவாசம் வரும் வரைக்கும் உயிர் இல்லை என்று அர்த்தம். அந்த உயிரைக் கொடுத்தது
இறைவன்தான். இறைவனால் மட்டுமே உயிர் கொடுக்க முடியும். அந்த உயிர் மூச்சை இறைவனால்
மட்டுமே அனுப்ப முடியும். உயிரைக் கொடுத்த இறைவன், அந்தக்
குழந்தைக்கு உணவைக் கொடுக்க வேண்டும் அல்லவா?
அந்தக்
குழந்தைக்கு உணவை பெற்றோர் தயார் செய்கின்றனரா?
அல்லது இறைவனே
உணவைப் படைக்கின்றானா?
பசி என்ற உணர்வு அந்தக் குழந்தைக்கு ஏற்பட்டு, உணவு வேண்டுமே என்று அந்த குழந்தை விரும்பும்போது, அந்தக் குழந்தைக்கான உணவு இறைவனால் படைக்கப்படுகிறது.
அதாவது, அதுவரையிலும் ரத்தமும்
சதையுமாக இருந்த தாயின் மார்ப்பகங்களில் பால் படைக்கப்படுகிறது. தாய், அந்தக் குழந்தையை எடுத்து அதற்குப் பால் கொடுக்கும்போது, அந்தக் குழந்தை அந்தப்பாலை அழகான முறையில் குடிக்கிறதே, அந்தப் பாலைக் குடிக்க குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தது
யார்? அந்தத் தாய்
கற்றுக்கொடுத்தாளா? இல்லை, இந்த நிகழ்வு ஒவ்வொன்றிலும் தெரிகிறது. நாம் வாழவில்லை. வாழ
வைக்கப்படுகிறோம்.
நம்மால் ஒரு அரிசியைப் படைக்க முடியுமா?
நாம் வாழ்வதற்கு உணவும் தேவை. ஆனால் அந்த உணவை
நாம் படைக்க முடியுமா? நம்முடைய அறிவைக்கொண்டு
நாமே ஒரு அரிசி மணியை படைக்க முடியுமா? நாம் உண்பதற்காக பூமியிலே
படைக்கப்பட்டிருக்கும் படைப்பைப் பாருங்கள். வாழை மரங்களையும், பலா மரங்களையும், கொய்யா, எலுமிச்சை, மா மரங்களையும் அனைத்து
பழ மரங்களையும் பாருங்கள். அனைத்து பழ மரங்களையும், தானிய வகைகளையும்
வானத்திலிருந்து மழை வராமல் உருவாக்க முடியுமா?
படைப்புகள் ஒவ்வொன்றும் அற்புதம்தான்!
கடலைப் பார்க்கிறோம். கடலில் வாழும் மீன்களைப்
பார்க்கிறோம். நாம் சாப்பிடும் உப்பும் மீன்களும், கடலில் நமக்காக
உணவாகப் படைக்கப்பட்டுள்ளன. மனிதன், கடலுக்குச் சென்று
மீன்களை அள்ளிக்கொண்டு வருகிறான். உயிர்களையும் படைத்து அவை வாழ காற்றையும்
படைத்து, தூய்மையான நீரையும்
படைத்து, அழகான அற்புதமான முறையில்
நாம் வாழவைக்கப்பட்டுள்ளோம்.
படைப்புகள் ஒவ்வொன்றுமே அற்புதம். அவை எப்படி
படைக்கப்படுகின்றன? நாம் விளக்கம் கூற
முடியாது. கல்லுக்குள் தேறையும், மாம்பழத்துக்குள் வண்டும்
வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை எப்படி வாழ்கின்றன? விளக்கம்
சொல்லமுடியுமா? மலைகளில் பயணிக்கும்போது
கற்பாறைகளைப் பார்க்கிறோம். மலையில் உள்ள மரத்தின் வேர்கள் அந்தப் பாறைக்குள்
பரவிச் செல்வதைப் பார்க்கிறோம். எப்படி அந்த வேர்கள் பாறைக்குள் செல்கின்றன? மண்ணுக்குள் வேர் செல்லும், ஆனால் பாறைக்குள்
எப்படி வேர் நுழையும்?
பறவைகள் வானத்தில் மறைவது எப்படி?
இறைவனுடைய படைப்பைப் பற்றி நாம் சிந்திக்க
வேண்டிய நேரம். வானத்தில் பறவைகளைப் பார்க்கிறோம். அதில் எந்தப் பறவையாவது இறந்த
பிறகு பூமியில் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறோமா? அவை இறந்த பிறகு என்னவாகின்றன? இறந்த பறவைகளை மரத்தில்கூட நாம் பார்க்க முடிவதில்லை.
காட்டில்கூட பார்ப்பதில்லை. நம்மிடம் விளக்கம் இருக்கிறதா? நம்முடைய அறிவைக்கொண்டு அறிய முடிகிறதா?
ஞானங்கள்தான் முதல் தேவை
எல்லாவற்றையும் கண்ணால் பார்க்கிறோம். ஆனால்
அதிலிருந்து ஞானங்கள் கிடைக்கப்பெற்றவர்களாய் இருக்கிறோமா? பறவைகள் ஏன் கீழே விழுவதில்லை. அதைப் பற்றிய ஞானம் வேண்டுமே.
எப்படி குழந்தை பாலை உறிஞ்சிக் குடிக்கிறது?
எப்படி பறவை தன்
கூட்டைக் கட்டுகிறது. இதைப் பற்றிய ஞானம் நமக்கு வேண்டும். இந்த ஞானம் எல்லாமே
இறைவழி மருத்துவதுக்கு அவசியம்.
ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்
அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும்
இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன்
புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104,
95850 18295, 73738 35583
இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta
No comments:
Post a Comment