Tuesday, 29 August 2017

வினை அறுக்கும் கோளறு பதிகம்

திகிலூட்டிய மழை வெள்ளம்கைகொடுத்தகோளறு பதிகம்’!

சரியாக சென்ற டிசம்பர் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையின் கறுப்பு நாளன்று அடைமழை பெய்ய ஆரம்பித்த நேரம், அலுவலகத்துக்கு புறப்பட்டவன் மழை ஓயட்டும் அதன் பிறகு கிளம்பலாம் என்று அப்படியே வீட்டில் அமர்ந்துவிட்டோம். நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கணினியில் அமர்ந்து பதிவுகளை தயார் செய்துகொண்டிருந்தோம். அதுவரை போக்குக்காட்டிவிட்டு பின்னர் 10.00 மணியளவில் வலுக்கத் துவங்கிய மழை 11.00 am, 12.00 pm, 1.00 pm என தாண்டியும் நிற்கவில்லை. மழை விட்டபாடில்லை. சாலைகளில் ஆறாக ஓட ஆரம்பித்தது வெள்ள நீர். அடுத்த சில நிமிடங்களில்டமார்ர்என்று சத்தம் கேட்க, மின் இணைப்பு துண்டித்துப்போனது. (பின்னர் தான் தெரிந்தது எங்கள் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்தது என்பது).

ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று மட்டும் உள் மனம் சொல்லியது. யூ.பி.எஸ். சத்தம் உடனேபீப்பீப்என அலற ஆரம்பித்தது. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

யூ.பி.எஸ். ஆஃப் ஆவதற்குள் இக்கட்டான தருணங்களில்கோளறு பதிகம்படிக்க வேண்டும் என்று பெரியவா கூறியது பற்றிய பதிவை தயாரித்து தளத்தில் அளித்துவிடலாம் பலருக்கு உதவியாக இருக்கும், என்று முடிவு செய்து பதிவை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே கணினி தனது மூச்சை நிறுத்தியது.

ஒரு வித திகிலுடன் நேரம் கடந்து சென்றுகொண்டிருந்தது. வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் நிலவரம் குறித்து நமது கவலையை பகிர்ந்துகொண்டோம். கோளறு பதிகம் பற்றி பேச்சு எழ, என் மின்னஞ்சலில் நான் தயார் செய்து வைத்து வைத்திருந்த முழுமை பெறாத பதிவில்கோளறு பதிகத்தைமட்டும் எடுத்து அதை நண்பர்களுக்கு அளித்து அதை படிக்கும்படியும் ஒரு தீங்கும் வாராது என்று கூறினோம்.

அதற்குள் மதியம் 2.00 நெருங்கிவிட, லன்ச் பாக்ஸில் இருந்த மதிய உணவை வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டோம்.

மாலை 6.30 அளவில் நெட்வொர்க் கட்டாகி வெளியுலகில் இருந்த தொடர்புகள் அனைத்தும் விடுபட்டு போனது.

சற்று நேரத்திற்க்கெல்லாம் நன்கு இருட்டிவிட, இதற்கு முன்பு ஒரு முறை மின் தடையின்போது பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்த பெரிய சைஸ் (பாதிக்கு மேல் தீர்ந்து போன) மெழுகுவர்த்தியை தேடோ தேடென்று வீடு முழுக்க தேடினோம். (காலம் மிகப் பெரிய ஆசான்!) நீண்ட போராட்டத்திற்கு பிறகு எங்கோ ஏதோ ஒரு ஷெல்பின் மூலையில் கவனிப்பாரற்று கிடந்த அந்த மெழுகுவர்த்தியை கண்டுபிடித்த போது அது தூசியில் கிடந்தது என்று கூட பார்க்காமல் அதற்கு முத்தமிட்டோம்.

காலை தொடங்கிய மழை நான்-ஸ்டாப்பாக மழை பெய்துகொண்டிருந்தபடியால், வாசலில் பெருக்கெடுத்து ஓடிய நீரின் லெவல் ஏறிக்கொண்டே வந்தது. இன்னும் ஓரிரு மணிநேரம் மழை பெய்தால் வீட்டுக்குள் நீர் வந்துவிடும் என்று புரிந்தது. (சென்ற மழைக்கே நிரம்பி வழிந்த போரூர் ஏரி வேறு மனதில் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருந்தது!) எங்கள் பகுதியிலேயே எங்கள் தெரு சற்று மேடான ஒன்று. எங்கள் தெருவிலேயே இந்த நிலை என்றால் நகரின் மற்ற பகுதிகளில் எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிந்தது. உடனே புத்தகங்கள் உள்ளிட்ட நீரில் வீணாகக் கூடிய அனைத்து பொருட்களையும் எடுத்து கட்டில் உட்பட உயரமான இடங்களில் பத்திரப்படுத்தினோம்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்வேல் மாறல்மற்றும் கோளறு பதிகத்தை படித்தோம். மனம் ஒன்றவில்லை. “இரவு தண்ணீர் வீட்டுக்குள் வந்துவிடுமோ?” என்று ஒரு வித பீதியுடனேயே ஒவ்வொரு நொடியும் கழிந்தது.

இரவு டிபன் என்ன செய்வது? வீட்டில் கரண்ட் இல்லை. இருப்பதோ ஒரே ஒரு மெழுகுவர்த்தி. அந்த நேரத்தில் சுலபமாக செய்யக்கூடியது உப்புமா ஒன்று தான். வெறுத்து ஒதுக்கும் உப்புமா (அம்மா செய்த) அன்று தேவாமிர்தமாக இருந்தது.

அம்மாவை கட்டிலில் தூங்கச் சொல்லிவிட்டு, நாம் ஈசி சேரில் படுத்துக்கொண்டோம். இரவு அடிக்கடி எழுந்து திகிலுடன் தண்ணீரின் லெவலை பார்த்துக்கொண்டே இருந்தோம்.


மதியம் சுமார் 1.00 மணியளவில்… (படியின் உயரம் முதல் படத்தை பார்த்தால் புரியும்)

மறுநாள் காலை எடுத்த படம்முதல் படி வரை வந்த தண்ணீர் லெவல் பின்னர் இறங்கியிருப்பது தெரிகிறதா?
ஒரு கட்டத்தில் நடப்பது நடக்கட்டும் என்று கண்ணயர்ந்துவிட காலை எழுந்து பார்த்தபோது அந்த அதிசயத்தை பார்த்தோம். தண்ணீர் முதல் படிவரை தொட்டு பின்னர் தானாக வடிந்து போயிருந்தது. இரவு முழுக்க நான் ஸ்டாப்பாக மழை பெய்த நிலையில், இது எப்படி சாத்தியமாயிற்று?

இரவு முழுதும் மழை தொடர்ந்த நிலையில் தண்ணீர் உள்ளே வராவிட்டாலும் லெவல் இறங்கியது எப்படி? எங்கள் வீட்டு கேட்டுக்கு முன்னர் மட்டும் தண்ணீர் தேங்கியிருக்க, சாலை முழுக்க தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய தடமின்றி வறண்டு போயிருந்தது.

நிச்சயம் அதுகோளறு பதிகம்நிகழ்த்திய அற்புதம் தான் என்று நாம் நம்புகிறோம்.

புதன்கிழமை காலை, மெயின் ரோடு வந்தபோது சென்னையே வெள்ளத்திற்கு கபளீகரம் ஆனது தெரியவந்தது. பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அலைந்துகொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது. கோளறு பதிகம் படிப்பதால், நவக்கிரஹத்தால் உண்டாகும் இயற்கை சீற்றங்களும், தோஷங்களும், தீவினைப்பயன்களும் குறையும் என்பது திண்ணம்.

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

No comments:

Post a Comment