வேதாந்தம்
நமக்கு ஏன் முற்பிறவி நினைவு வருவதில்லை?
-----------------
முற்பிறவி பற்றி சில கருத்துக்கள்…….சுவாமி விவேகானந்தர்
ஞானதீபம் புத்தகம்!!.
-----------
1.நமக்கு ஏன் முற்பிறவி
நினைவு வருவதில்லை?
பதில் நாம் குழந்தைகளாக இருந்தபோது என்ன
நடந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.?
நினைவு தான் ஆதாரம் என்றால் நம் நினைவில்
இல்லாத நாட்கள் நாம் வாழாத நாட்கள் என்று ஆகிவிடும்.
சிலருக்கு நோய்காரமாகவோ வேறு சில காரணங்களாலோ
முற்றிலும் நினைவு இல்லாமல் இருப்பதை காணலாம்,சிலருக்கு சில
வருடங்களில் நடந்தவை மட்டும் நினைவில் இருப்பதில்லை.அவர்கள் நினைவில் இல்லாத
காலங்கள் அவர் வாழாத காலம் என்று சொல்ல முடியுமா?
முற்பிறவியில் உள்ள மூளை அழிந்து
விட்டது.இப்போது உள்ளது புதிய மூளை.ஒருவன் புதிய மூளையுடன் தான் மறுபிறவி
எடுக்கிறான்.
2.ஆனாலும் சிலருக்கு
முற்பிறவி நினைவு வருகிறது.இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
எந்த பிறவியில் ஒருவன் முக்தனாக ஆவானோ அந்த
பிறவியில் ஒருவனுக்கு முற்பிறவி நியாபகம் வருகிறது.
3.அறிவை
வளர்த்துக்கொள்வதில் மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை இந்த மறுபிறவி கோட்பாடே
விளக்கமுடியும்.
4.அறிவை அனுபவத்தின் மூலம்
மட்டுமே பெற முடியும்.பழைய அறிவுடன் புதிய அறிவை பொருத்திப்பார்ப்பதன் மூலமே புது
அறிவு ஏற்படுகிறது.இந்த பிறவியில் அந்த அறிவை பெற்றிருக்காவிட்டால் வேறு பிறவியில்
அதை அனுபவத்தின் மூலம் பெற்றிருக் வேண்டும்.அறிவே இல்லாமல் ஒருவன் பிறந்தால்
புதிதாக எந்த அறிவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒப்பீடு மூலமே புது அறிவு உருவாகிறது.
5.கோழியால் அடைகாக்கப்ட்ட
வாத்துக்குஞ்சு தண்ணீரைக்கண்டவுடன் அதில் குதித்து நீந்துகிறது.இதை எவ்வாறு
விளக்குவீர்கள்?இயற்கை என்று நீங்கள்
பதிலளித்தால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது அர்த்தம்.
6.உடல் அழியும் போது
ஆன்மாவிற்கு வழிகாட்டுவது எது?அது முதலிலிருந்து செய்த
செயல்கள்,நினைத்த எண்ணங்கள்
ஆகியவற்றின் மொத்த பலனே.இந்த பலன் மனம் இன்னும் அனுபவம் பெறுவதற்க்காக புதிய உடலை
எடுக்கும் அளவுக்கு இருந்தால்,அந்த உடலுக்கு தேவையான
மூலப்பொருளை தருவதற்கு தேயாராக இருக்கும் பெற்றோர்களை நாடிச்செல்கிறது.இவ்வாறு அது
ஓர் உடலை விட்டு இன்னோர் உடலுக்கு தாவுகிறது.சில வேளைகளில் மிருக உடலை
எடுக்கிறது.தான் யார் என்னும் உண்மை நிலையை அறியும் வரை இவ்வாறு மறுபடிமறுபடி
பிறந்து இறக்க வேண்டியுள்ளது.
7.கடவுள்மீது பழியைப்போட்டு
தண்டிப்பவராகவோ பரிசளிப்பவராகவோ அவரை உருவகப்படுத்துவதற்கான நமது முயற்சியெல்லாம்
வீண்.
8.நாம் எப்படி இருக்க
வேண்டுமோ அது நம் கையில் தான் உள்ளது.நான் அனுபவிக்கும் இந்த துன்பத்திற்கு நானே
தான் காரணம்.உங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஆற்றல் உங்களிடமே உள்ளது.விதி
என்கிறார்களே அந்த விதி என்பது என்ன?நாம் விதித்ததைத்தான்
நாம் அறுக்கிறோம்.நம் விதிக்கு நாமே காரணம்.நாம் துன்பப்படுவதற்கு நாமே காரணம்.
9.
சூன்யத்திலிருந்து
எதையும் படைக்க முடியாது.மனிதன் சூன்யத்திலிருந்து படைக்கப்படான் என நினைப்பது
அறிவற்ற செயல்.சூன்யத்திலிருந்து படைக்கப்ட்ட மனிதன் என்றென்றும் நிலையாக வாழ்வான்
என நினைப்பது அறியாமை.நாம் எப்போதும் இருக்கிறோம்.
10.மனிதன் என்பவன் முதலில்
வெளிப்போர்வையாக உடல்,அதன் பின்னால்
சூட்சுமஉடல் இவற்றால் ஆக்கப்படவன் என்பதைக்காண்கிறோம்.இவற்றிற்குப்பின்னால் தான்
மனிதனின் உண்மையான ஆன்மா உள்ளது.துால உடலின் சக்தி சூட்சும உடலிலிருந்து
பெறப்படுகிறது.சூட்சும உடல் அதன் சக்தியை ஆன்மாவிலிருந்து பெறுகிறது.
11.ஆன்மா
படைக்கப்பட்டதல்ல.அது சுய ஒளி உடையது.ஆன்மா இல்லாத காலமே இல்லை.ஆன்மாவுக்கு
பிறப்பு இறப்பு இல்லை.
12.பரம்பரைக்கருத்தை நாம்
ஓரளவுக்கு ஏற்றுக்கொள்கிறோம்
உடலை எடுப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை
தங்கள் பெற்றோரிடமிருந்தே ஒருவன் பெறுகிறான்.பெற்றோர்கள் உடலுக்கு தேவையானவற்றை
மட்டுமே கொடுக்கிறார்கள்.
13.நாம் நினைக்கும் ஒவ்வோர்
எண்ணமும் செய்யும் ஒவ்வொர் செயலும் மனத்தில் துட்பமான உருவங்களாக பதிகிறது.இதை
சம்ஸ்காரம் என்கிறார்கள்.நான் இறக்கும் போது இந்த சம்ஸ்காரத்தின் பலனே அடுத்தபிறவி
எடுப்பதற்கு காரணமாக அமைகிறது.
14.வேதாந்திகளின் கருத்து
படி,இந்த உடல் விழுந்த
பின்னர்மனிதனின் உயிர் சக்திகள் மனத்திற்கு திரும்பிப்போகின்றன.மனம் பிராணனில்
ஒடுங்குகிறது.பிராணன் ஆன்மாவில் ஒடுங்குகிறது. சூட்சும சீரத்தை உடைய ஆன்மா உடலை
விட்டு வெளியேறுகிறது.இநத சூட்சுமசரீரத்தில்தான் மனிதனின் சம்ஸ்காரங்கள் அனைத்தும்
இருக்கின்றன.
15.கடவுள் ஏன்
இந்தப்பிரபஞ்சத்தை படைத்தார்?முழுமையானர்,தேவையற்றவர் குறைவுடைய இந்த உலகத்தை ஏன் படைத்தார்?இந்த கேள்விக்கு ஒருபோதும் பதிலளிக்க முடியாது.ஏனெனில்
இத்தகைய கேள்விகள் நியாயமற்றவை.மனத்தையும் உடலையும் கடந்து இருக்கும் இறைவனை அறிய
வேண்டும னால் மனத்தை கடந்து செல்ல வேண்டும்.அப்போது தான் இதற்கான விடைகிடைக்கும்.
16.இந்த பிரபஞ்சத்தை இறைவன்
திட்டமிடடே படைத்தார்.இயற்கையில் காணப்படும் ஒழுங்குமுறையே இதற்கு சான்று
என்றெல்லாம் பேசுவது குழந்தைபேச்சு.குழந்தைகளுக்கு இவ்வாறு போதிக்கலாம்,அதற்குமேல் இதனால் பயன் இல்லை.கடவுளுக்கு உள்ள படைப்பு
சக்தியை இயற்கை காட்டுகிறது என்றால்.அதற்கு திட்டமிடுவது அவருடைய பலவீனத்தை
காட்டுகிறது.அவர் எல்லாம் வல்லவராக இருந்தால் அவருக்கு எந்த திட்டமிடுதலும்
தேவையில்லை.எனவே இயற்கையில் இறைவனின் திட்டமிடுதல் எதுவும் இல்லை.எங்கும் நிறைந்த
இறைவன் எதையும் அடைவதற்காகவோ மனிதர்களை சோதிப்பதற்காகவோ படைத்தார் என்ற பேச்சிற்கே
இடமில்லை.
17.படைப்பு மனிதனின்
தேவைக்காக தானே தவிர இறைவனின் தேவைக்காக அல்ல.
18.உலகின் ஆரம்பம்,மனிதனின் ஆரம்பம் என்றெல்லாம் மக்கள் பேசுகிறார்கள்.ஆரம்பம்
என்பதற்கு யுகத்தின் ஆரம்பம் என்றுதான் பொருள்.படைப்பிற்கு ஓர் ஆரம்பம் இருப்பது
இயலாத காரியம்.ஆரம்பகாலம் என்ற ஒன்றை நீங்கள் யாரும் கற்பனை செய்ய
முடியாது.ஆரம்பம் உள்ள எதற்கும் முடிவு இருந்தேயாக வேண்டும்.ஆன்மாவுக்கு ஆரம்பம்
இல்லை.அதேபோல் முடிவும் இல்லை.
19.மதம் என்பது கொள்கைளிலோ
கோட்பாடுகளிலோ இல்லை.நீங்கள் எதை படிக்கிறீர்கள்.எதை நம்புகிறீர்கள் என்பது
முக்கியமல்,நீங்கள் எதை அனுபவத்தில்
அறிகிறீர்களோ அது தான் முக்கியம்.
20.முதல் உயிரணுவிலிருந்து(ஒருசெல்
உயிரி) பரிபூரண நிலை அடைந்த மனிதன் வரையில் உண்மையில் ஒரே உயிர்தான் இருக்கிறது.
பரிணாமம் என்பது சூன்யத்திலிருந்து
வருவதில்லை.அப்படியானால் அது எங்கிருந்து வந்தது?அதற்கு முந்தைய
ஒடுக்கத்திலிருந்து தான்.
21.இந்த பிரபஞ்சம் முழுவதும்
சூன்யத்திலிருந்து வெளிவந்திருக்க முடியாது.காரணம் இல்லாமல் காரியம் இல்லை.காரணம்
காரியத்தின் வேறு உருவம்.இந்த பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியது.அது இதற்கு முன்பாக
இருந்த நுட்பமான ஒடுங்கியிருந்த பிரபஞ்சத்திலிருந்து தோன்றியது.
ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்
அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும்
இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன்
புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104,
95850 18295, 73738 35583
இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta
No comments:
Post a Comment