Sunday 27 August 2017

கீதையின் முத்துக்கள்


கீதையின் முத்துக்கள் 
சரீரத்தில் வாசம் செய்யும் ஆன்மாவானது தான் பரமாத்மாவும் ஸ்வரூபம் என்பதை முதலில் உணர்வதில்லை. சரீரத்தை ஆட்டுவிக்கும் 24 பண்புகளால் அது அஞ்ஞானம் எனும் இருளால் பீடிக்கப் படுகிறது.

அந்த 24 பண்புகள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம எனும் பஞ்ச பூதங்களும்,
உடல், வாய், மூக்கு, காது, கண் எனும் ஞானேந்திரியங்களும்,
வாய், கை, கால், மலதுவாரம், பிறப்புறுப்பு துவாரம் ஆகிய கர்மேந்திரியங்களும்,
சுவை, துன்பம், ஒளி, ஓசை, துர்மணம் ஆகிய தன்மாத்திரைகளும்,
மனம், அறிவு, நினைவு, சித்தம் ஆகிய அந்தக்கரணங்களும் ஆகும்.

அஞ்ஞானத்தை உடைத்து சத்வ குணத்தை வளர்த்து நான் பரமாத்மா என்ற அறிவைப் பெற வேண்டியதே ஆத்மாவின் கடமை ஆகும்.

கடமையின் இரண்டாவது காரணி அந்த செயலே ஆகும். ஒரு செயல் சரியா என்று எவ்வாறு ஒருவர் தெரிந்து கொள்வது? கடமைகள் எவ்வாறு பகுக்கப்படுகிறது?

கடமைகளையும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. உன்னத செயல்.
2. சாதரண செயல்.
3. துர் செயல்.

உன்னதமான செயலானது சரியான சமயத்தில் செய்யப்பட்டு, பிரதிபலனோ, அந்த செயலின் விளைவையோ எதிர்பார்க்காது பரமாத்மாவிற்கு அர்ப்பணிப்போடு செய்யப்படுவது.

சாதாரண செயலானது அகந்தையோடு பிரதிபலனை எதிர்பார்த்து செய்யப்படுவது. உதாரணமாக பலனை எதிர்பார்த்து தானம் செய்வது. இத்தகைய செயல்களால் கடமையை ஆற்றுபவருக்கு முக்திக்கான வழி கிடைப்பதில்லை.

துர்செயலானது, செயலின் விளைவுகளை அறியாமல், தவறான எண்ணத்தோடு செய்யப்படுவது. அதனால் பிறருக்கும், சமுதாயத்திற்கும் துன்பமே விளையும். தீமையை விளைவிக்கும் செயல்களாகும்.

கடமையின் கடைசி காரணி செயலின் கர்த்தா ஆவார்! செயல்களைப் புரிபவர் எவ்வாறு பிரிக்கப் படுகிறார்?

செயல்களைப் போலவே செயலைச் செய்பவரும் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகிறார்.

சிறப்பான கர்த்தா: இவரின் செயல்கள் அனைத்தும் உத்வேகம் பொருந்தியனவாக இருக்கும். மேன்மையான எண்ணத்தோடு பிரதிபலன் பாராது இறைவனை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டிருக்கும். செயல் தோல்வி அடைந்தாலும் சரி, வெற்றி அடைந்தாலும் சரி, இவர்கள் அதனால் பாதிக்கப் பட மாட்டர்.

சாதாரண கர்த்தா: இவர்களின் செயல்கள் அனைத்தும் தன்னை யாரேனும் கவுரவிக்க வேண்டும், பிரதி பலன் வேண்டும் என்ற எதிர்பார்ப்போடே இருக்கும். செயல் வெற்றியடைந்தால் மிகுந்த கர்வமும், செயல் தோல்வி அடைந்தால் மிகுந்த துன்பமும் அடைவர்!

விளிம்பு நிலை கர்த்தா: இவர்களின் செயல்கள் அனைத்தும் சோம்பேரித்தனம் நிறைந்தவையாக இருக்கும். கடவுள் குறித்த பயமோ, தர்ம சிந்தனமோ அற்று, தோல்வி குறித்த கவலை இன்றி ஏனோதானோவென்று இருக்கும். இவர்களால் எதையுமே முழுமையாக செய்து முடிக்க இயலாது.


ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta




No comments:

Post a Comment