Wednesday, 30 August 2017

கருவூரார்

ஆசான் கருவூர் முனிவரை "ஓம் கருவூர்
தேவாய நம" என்று காலை 5 நிமிடமும்
மாலை 5 நிமிடமும் நாமஜெபம் செய்து
வந்தால் முன் செய்த பாவங்கள் எல்லாம்
பொடிபட்டுப் போகும்.

முன்செய்த பாவங்கள் தான் அறியாமையை
உண்டு பண்ணும். பாவங்கள் நீங்க நீங்க
தெளிந்த அறிவு உண்டாகும். தெளிந்த
அறிவுள்ளவர்கள் தான் உடம்பாகிய காமக்
கடலை கடக்க முடியும்.

எனவே ஆசான் கருவூர் முனிவரை எல்லாம்
வல்ல பரப் பிம்மமாகவும், மோட்சத்தைத்
தரக்கூடிய வல்லவர் என்றும் நாம்
நினைத்ததையெல்லாம் தரக்கூடிய பேராற்றல்
பெற்றவர் என்றும் பூஜைசெய்து ஆசிபெற
வேண்டும்.

குறிப்பு :-
---------

1. சான்றோர்களில் இருவகை உண்டு.
ஒருவகையினர் சமூகச் சான்றோர்கள்
ஆவார்கள். மற்றொருவகையினர் ஆன்மீகச்
சான்றோர்கள் ஆவார்கள்.
சமூகச் சான்றோர்கள் என்பது உலக நடையை
அனுசரித்து சகிப்புத் தன்மையுடன்
நாட்டுக்குத் தம்மை அர்ப்பணித்து
செயல்படுவதே சமூகச் சான்றோர்களின்
இயல்பாகும்.
ஆன்மீகச் சான்றோர்கள் என்பது இம்மை,
மறுமை ஆகிய (இப்பிறப்பு, மறுபிறப்பு)
இயல்பை அறிந்து தன்னடக்கத்தோடு தவத்தை
மேற்கொள்பவர்கள் ஆன்மீகச் சான்றோர்கள்
ஆவார்கள்.
எடுத்துகாட்டாக ஆன்மீகச் சான்றோர்கள்
என்பவர் இராமலிங்க சுவாமிகள்
போன்றோர்கள். ஆன்மீகச் சான்றோர்கள் தவ
வலிமையால் கோடானு கோடி யுகங்கள்
வாழ்வார்கள். அவர்களுக்கு மரணமில்லை.
மனிதவர்க்கம் வீடுபேறு அடைய விரும்பினால்
குருவருள் வேண்டும். குருவருள் இல்லாமல்
வீடுபேறு அடையமுடியாது என்பது
சத்தியமாகும்.
அருள் குருவாகிய கருவூர் முனிவர் அருள்
இருந்தால் தான் மூலிகை வகைகளாலும்,
செந்தூரங்களாலும், பற்பங்களாலும் மற்றும்
சுன்ன வகைகளாலும் காயசித்தி ஆகாது
என்பதை அறிந்துகொள்ள முடியும்.
குருநாதராகிய கருவூர் முனிவர் தயவு
இல்லாமல், பிராணாயாமம் (யோகநெறி)
செய்தால், அவர்களுக்கு குறுகிய காலத்தில்
மலச்சிக்கல் ஏற்பட்டும், குடல்புண்ணாகிய
அல்சர் வந்தும் மற்றும் கை கால் வீங்கியும்
அநியாயமாக சாவார்கள். எனவே, ஆன்மீகத்
துறைக்கு குருநாதர் ஆசிவேண்டும்.
சிலர் வாதம் என்ற தங்கம் செய்ய
முயற்சிப்பார்கள். கடைசி வரையிலும் தங்கம்
செய்ய முடியாது. கையில் உள்ள
பொருள்களையெல்லாம் இழந்தும் மனைவி
மக்களின் ஆதரவு இல்லாமல் திருவோடு
எடுத்து பிச்சை எடுக்கின்ற அளவிற்கு வந்து
விடுவார்கள். எனவே கருவூர் முனிவரின்
ஆசிபெற்று வீடுபேறு அடையவேண்டும்.

2. சிலர் யோகப் பயிற்சி தருவதாக
சொல்வார்கள். யோகப் பயிற்சி செய்ய
வேண்டும் என்றால் வயிற்றில் பழைய உணவு
இருக்கக் கூடாது. மேலும் உடம்பில் காய்ச்சல்,
இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்கக்
கூடாது. இதையெல்லாம் அநுசரித்துத் தான்
யோகப் பயிற்சி தரவேண்டும்.
உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் தான் யோகப்
பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
இல்லையென்றால், நோய்வாய்ப்பட
வாய்ப்புள்ளது. மூச்சுக் காற்று இயக்கத்திற்கு
மட்டும் இந்த கருத்துகள் பொருந்தும்.

3. குருபக்தி செலுத்த வேண்டும். அந்த
பக்தியும் யாரிடத்தில் செலுத்த வேண்டும்,
எப்படி செலுத்த வேண்டும் என்பதை அறிந்து
கொண்டு பக்தி செலுத்த வேண்டும்.
இதனுடைய விளக்கம் தெரியாமல் பக்தி
செலுத்தினால் காலம் தான் வீணாகுமே தவிர
அதனால் எந்த காரியமும் நடக்காது.

4. ஈரேழு 14 லோகத்தில் எந்த மூலையில்
இருந்தும் "கருவூர் தேவா" எனக்கு அருள்
செய்ய வேண்டும் என்றால் "அஞ்சேல் மகனே"
என்று அருள்செய்யும் வல்லமை ஆசான்
கருவூர் முனிவருக்கு உண்டு.
அழைத்துப் பாருங்கள் உண்மை தெரியும்.!

ஞானியர்களை பூஜிப்போம், ஞானம் பெற்று
இன்புற்று வாழ்வோம்..!

 உன்னுள் உறங்கும்
குருவை
எந்த குரு எழுப்புகிறாரோ
அவரே குரு
ஸ்தூல குரு....


No comments:

Post a Comment